கூகுல் அசிஸ்டெண்ட் கட்டமைப்பு உடன் கூடிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே: லினோவா களமிறக்குகிறது

|

சிஇஎஸ் 2018 இல், சீனாவைச் சேர்ந்த பிரபல கணினித் தொழில்நுட்ப நிறுவனமான லினோவா, வீடுகளுக்கான ஸ்மார்ட் டிஸ்ப்ளே-யின் அறிமுகம் குறித்து அறிவித்துள்ளது. கூகுல் அசிஸ்டெண்ட் மூலம் இயக்கப்படும் இந்தச் சாதனத்தின் டிஸ்ப்ளேக்கள், குவால்காம் எஸ்டிஏ 624 எஸ்ஓசி அடிப்படையில் அமைந்த புதிதாக அறிவிக்கப்பட்ட குவால்காம் ஹோம் ஹப் பிளாட்ஃபாமில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கூகுல் அசிஸ்டெண்ட் கட்டமைப்பு உடன் கூடிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே: லினோவா கள

இதன்மூலம் சிபியூ, ஜிபியூ மற்றும் டிஎஸ்பி ஒருங்கிணைப்பு மட்டுமின்றி, வலுவான வைஃபை மற்றும் ப்ளூடூத் இணைப்பு போன்ற அம்சங்களை அளிக்கிறது. இந்த வகையில் ஒரு நாள் முழுவதும் பணியாற்றி களைத்து போய் வீடு திரும்பும் உங்களுக்கு இந்த லினோவா ஸ்மார்ட் டிஸ்ப்ளே பெரும் உதவியாக செயல்படுகிறது.

இந்தச் சாதனத்தின் மூலம் கூகுல் டியோ-வை பயன்படுத்தி வீடியோ அழைப்பு, யூடியூப்-பில் வீடியோ பார்ப்பது, அதனோடு இணைக்கப்பட்ட மற்ற சாதனங்களை நிர்வகிப்பது ஆகியவற்றை செய்ய முடியும்.

கூகுல் அசிஸ்டெண்ட் மூலம் செயல்படும் லினோவா ஸ்மார்ட் டிஸ்ப்ளே, உங்களின் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுக்கான ஒற்றை கட்டளையில் இயங்கச் செய்யும் மையமாக உள்ளது. அதன் கட்டுப்பாட்டிற்குள் வரும் அந்நிறுவனத்தின் சொந்த தயாரிப்புகள் முதல் மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் வரையிலான எல்லா வகையான இணைக்கப்பட்ட ஸ்மார்ட் ஹோம் சாதனங்களையும், நீங்கள் கூறும் ஒரு வார்த்தையில் அல்லது தொடுதலில் செயல்பட செய்கிறது.

லினோவா ஸ்மார்ட் டிஸ்ப்ளே சிறப்பான மற்றும் குறைந்த அளவிலான வடிவமைப்பைப் பெற்று உங்கள் வீட்டை அடைகிறது என்பதையும் கடந்து, ஒரு நவீன தன்மையை அதற்கு சேர்க்கிறது.

இதன் திரைகள், ஒரு மென்மையான சாம்பல் நிறம் அல்லது இயற்கையான மூங்கில் நிறத்தில் அமைந்துள்ளதால், பெரும்பாலான மரம், கண்ணாடி அல்லது கிரானைட் நிறத்திலான மேசைகளுடன் ஒத்துப் போகிறது. இது சாதகமானதும் கூட, எனவே இருக்கும் இடவசதிக்கு ஏற்ப திரையை செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ வைத்து கொள்ளலாம்.

5000எம்ஏஎச்; 32ஜிபி; சூப்பர் பட்ஜெட் விலை: இதைவிட வேறென்ன வேணும்.!?5000எம்ஏஎச்; 32ஜிபி; சூப்பர் பட்ஜெட் விலை: இதைவிட வேறென்ன வேணும்.!?

இது பயன்பாட்டில் இல்லாத நேரத்தில், ஒரு டிஜிட்டல் படத்தின் பிரேமாக திரையை மாற்றியமைத்து கொண்டு, கூகுல் போட்டோஸில் இருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த அழகான படங்களையோ அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த அழகான பின்னணி படங்களையோ காட்டுகிறது.

லினோவா ஸ்மார்ட் டிஸ்ப்ளேயின் 10 இன்ச் அளவில் அமைந்த சாதனத்தின் விலை $249.99யிலும் 8 இன்ச் அளவுள்ள சாதனத்தின் விலை $199.99யிலும் தொடங்குகிறது. இவை இரண்டும் வரும் கோடைக்காலத்திற்கு முன்னதாக அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
The device can also be used as video calling through Google Duo, watching videos on YouTube, managing your connected devices.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X