Home
Gadgets

இது உங்க கேர்ள் பிரண்ட் கண்ணுல படாம பாத்துக்கோங்க.. Valentine's தீம் Baby-G வாட்ச்.. என்ன விலை?

கேசியோ (CASIO) நிறுவனம் தனது பேபி-ஜி சீரிஸின் கீழ் இரண்டு புதிய வாட்ச் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது: மேட் பிளாக் கலரில் BGD10KH-1 மற்றும் ஒயிட் கலரில் BGD10KH-7. இந்த மாடல்கள் நவம்பர் 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரிஜினல் BGD-10 சீரீஸை பின்பற்றுகின்றன.

ஸ்பெஷல் என்னவென்றால் - இந்த 2 புதிய மாடல்களுமே வேலடைன்ஸ் டே என்கிற காதலர் தின தீம்டு கலர்களில் (Valentine's Day themed colors) வருகின்றன மற்றும் பொருத்தமான ஆக்சஸெரீஸ்களுடன் (matching accessories) வருகின்றன. BGD10KH-1 மாடல் ஆனது மென்மையான மேட் பிளாக் ரெசின் கேஸில் வைக்கப்பட்டுள்ள ஒரு கிளாசிக் ஸ்கொயர் டிஜிட்டல் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இது உங்க கேர்ள் பிரண்ட் கண்ணுல படாம பாத்துக்கோங்க!

கேசியோ நிறுவனமானது பிளாக் கலருக்கு ஏற்ற மற்றும் மாறுபாட்டை தனித்து காட்ட நுட்பமான பிங்க் அஸென்ட்களையும் சேர்த்துள்ளது. இந்த ஒரு சார்ம் (Charm) ஆக அணியும் படியாக - இந்த மாடல் ஹார்ட் ஷேப்ட்டு ஹாஃப் ஒயிட் சிலிகான் ஹோல்டர் (heart-shaped off-white silicone holder) உடன் வருகிறது.

மறுகையில் உள்ள BGD10KH-7 மாடல் ஆனது கிரீம் அலர் ஆஃப்-ஒயிட் ரெசின் கேஸ் மற்றும் ஸ்ட்ராப்பை பயன்படுத்துகிறது. இது மிகவும் முக்கியமான பிங்க் அஸென்ட்களுடன் மிகவும் வெளிப்படையான மற்றும் பிளேஃபுல் ஆன தோற்றத்தை வழங்குகிறது. ஒயிட் மாடல் ஆனது ரெட் ஹார்ட் ஷேப்ட்டு ஹோல்டர் மற்றும் பிங்க் ஸ்ட்ராப் உடன் வருகிறது, இது காதலர் தின தீமை (Theme) இன்னும் வலுப்படுத்துகிறது.

மேலும் கேசியோ நிறுவனம் இந்த இரண்டு மாடல்களையும் டூ-வே கன்வெர்ட்டபிள் வாட்ச்களாக (two-way convertible watches) வடிவமைத்துள்ளது. மையசென்ட்ரல் கேஸை ஸ்ட்ராப்பில் இருந்து அகற்றி, சேர்க்கப்பட்டுள்ள சிலிகான் ஹார்ட் ஷேப்ட்டு ஹோல்டரில் செருகலாம், இதனால் பயனர்கள் கடிகாரத்தை ஒரு சாரம் (Charm) ஆக அணிய வழிவகுக்கும்.

இரண்டு மாடல்களும் பேபி-ஜி சீரீஸின் ஷாக்-ப்ரூப் கட்டுமானத்தையும், 100-மீட்டர் ஆழம் வரையிலான நீர் எதிர்ப்பையும் தக்கவைத்துக்கொள்கின்றன. ஒவ்வொரு வாட்சும் 29 நேர மண்டலங்களுக்கான உலக நேர ஆதரவையும், 1/100-வினாடி ஸ்டாப்வாட்ச், ஒரு கவுண்டவுன் டைமர், ஐந்து தினசரி அலாரங்கள், ஒரு மணிநேர நேர சமிக்ஞை மற்றும் 2099 வரை செல்லுபடியாகும் முழு தானியங்கி காலெண்டரையும் வழங்குகிறது.

இதன் எல்இடி பேக்லைட் ஒரு ஒளியை எல்இடி-ஐ பயன்படுத்துகிறது மற்றும் இதில் ஆப்டர்க்ளோ உடனான இரண்டு-வினாடி வெளிச்ச காலமும் அடக்கம். ஒவ்வொரு மாடலும் 33 கிராம் எடையும், மினரல் கிளாஸுடன் 42.8 x 39 x 14.7 மிமீ ரெசின் கேஸையும் பயன்படுத்துகிறது. CR1616 பேட்டரியை பயன்படுத்தி கேசியோ தோராயமாக மூன்று ஆண்டுகள் பேட்டரி லைஃப்பை மதிப்பிடுகிறது.

வாட்சின் பேண்ட் ஆனது 125 மிமீ முதல் 180 மிமீ வரையிலான மணிக்கட்டு அளவுகளுக்கு பொருந்துகிறது. விலையை பொறுத்தவரை கேசியோ நிறுவனத்தின் இந்த இரண்டு புதிய வாட்ச் மாடல்களுமே அமெரிக்கவில் $89 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.8000 க்கு) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது அமெரிக்காவில் ப்ரீ-ஆர்டடீ செய்ய கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Casio launches two new Valentine's-themed Baby-G watches in US Design Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X