Home
Gadgets

நச்சுனு இருக்கு லுக்.. ஃப்ளோரசன்ட் கிரீன் நிறத்தில் Casio விர்ச்சுவல் மிக்ஸ் வாட்ச்கள்.. 3 மாடல்.. விலை என்ன?

கேசியோ (Casio) நிறுவனம் புதிதாக மூன்று வாட்ச் மாடலை அதன் விர்ச்சுவல் மிக்ஸ் சீரிஸ் (Virtual Mix series) வரிசையின் கீழ் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய புதிய விர்ச்சுவல் மிக்ஸ் சீரிஸ் வாட்ச் சாதனங்கள் ஃப்ளோரசன்ட் கிரீன் நிற ஸ்ட்ராப் மற்றும் டிசைன் ஹைலைட்ஸ் உடன் மிகவும் டிரெண்டியான வடிவமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கேசியோ விர்ச்சுவல் மிக்ஸ் வாட்ச் (Casio Virtual Mix series watch) சீரிஸ் இல் இடம்பெறும் மாடல்கள் என்னென்ன மற்றும் இதன் விலை என்ன? இதை எப்போது வாங்கலாமென்பது போன்ற தகவலை இப்போது பார்க்கலாம்.

கேசியோ (Casio) நிறுவனம், அதன் வாட்ச் பிரிவின் கீழ் இப்போது புதிதாக கேசியோ ஜி-ஷாக் விர்ச்சுவல் மிக்ஸ் காலெக்ஷனை (Casio G-Shock Virtual Mix collection) ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய Casio G-Shock Virtual Mix collection சீரிஸ் கீழ் நிறுவனம் Casio G-Shock Virtual Mix collection GA-B001MW-8AJF, GD-B500MW-8JF மற்றும் GA-2300MW-8A ஆகிய மூன்று மாடல் எண் கொண்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது.

நச்சுனு இருக்கு லுக்.. ஃப்ளோரசன்ட் நிறத்தில் Casio விர்ச்சுவல் மிக்ஸ்

நச்சுனு இருக்கு லுக்.. ஃப்ளோரசன்ட் கிரீன் நிறத்தில் Casio விர்ச்சுவல் மிக்ஸ் வாட்ச்கள்:

இதில் கேசியோ ஜி-ஷாக் விர்ச்சுவல் மிக்ஸ் GA-B001MW-8AJF மற்றும் கேசியோ ஜி-ஷாக் விர்ச்சுவல் மிக்ஸ் GD-B500MW-8JF ஆகிய இரண்டு மாடல்கள் மட்டும் இப்போது விற்பனைக்கு வெளிவந்துள்ளது. இந்த புதிய வாட்ச்சின் சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இது கண்களை கவர்ந்திழுக்கும் ஃப்ளோரசன்ட் கிரீன் (fluorescent green) நிற டிசைனை கொண்டுள்ளது. இது வாட்சின் ஒட்டுமொத்த லுக்கை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது.

இதில் கேசியோ ஜி-ஷாக் விர்ச்சுவல் மிக்ஸ் GA-B001MW-8AJF வாட்ச் மாடல் டாப் எண்டு மாடலாக (Top end model) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச் 2 வருடம் வரை நீடித்து நிலைக்கும் பேட்டரி ஆயுளை (2 years of battery life) கொண்டுள்ளது. இத்துடன், இந்த வாட்ச் உலக கடிகார நேரம் (world clock time), 1/100 வினாடி ஸ்டாப்வாட்ச் (stopwatch) போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்.

2 வருட பேட்டரி லைப் உறுதி.. ப்ளூடூத் கனெக்டிவிட்டி கூட இருக்கா?

இது 5 நாள் அலாரம் சேமிக்கும் (five daily alarms ) அம்சம், பேட்டரி இண்டிகேஷன் வார்னிங் (battery indication warning), பவர் சேவிங் மோட் (power-saving mode) மற்றும் LED பேக்லைட் அம்சம் போன்றவற்றை கொண்டுள்ளது. புதிய அம்சமாக இந்த இதில் கேசியோ ஜி-ஷாக் விர்ச்சுவல் மிக்ஸ் சீரிஸ் சாதனங்களில் நிறுவனம் ப்ளூடூத் கனெக்டிவிட்டி (Bluetooth connectivity) ஆதரவையும் வழங்குகிறது.

இதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனுடன் இந்த வாட்ச்சை இணைத்து, ஆட்டோமேட்டிக் டைம் அடஜஸ்ட்மென்ட் (automatic time adjustment) மற்றும் மொபைல் போன் பைண்டர் (mobile phone finder) போன்ற அம்சங்களை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அடுத்தபடியாக, GD-B500MW-8JF மாடல், நாம் முதலில் பார்த்த மாடலை விட சற்று குறைந்த விலையில் வருகிறது. 2 வருட பேட்டரி ஆயுள் உடன், இதிலும் அடிப்படை அம்சங்களை எல்லாம் ஒரே மாதிரியாக அமைந்துள்ளது.

Casio G-Shock Virtual Mix GA-B001MW-8AJF மற்றும் GD-B500MW-8JF விலை என்ன?

இருப்பினும், GA-B001MW-8AJF மாடலின் டிஸ்பிளே அளவை காட்டிலும் GD-B500MW-8JF மாடலின் டிஸ்பிளே அளவு சற்று பெரிதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சாதனங்களின் விலை பற்றி பேசுகையில், Casio G-Shock Virtual Mix GA-B001MW-8AJF இந்திய மதிப்பில் ரூ.12,706 என்ற விலையிலும், Casio G-Shock Virtual Mix GD-B500MW-8JF மாடல் ரூ.11,774 விலையிலும் வெளிவந்துள்ளது. தற்போது ஜப்பானில் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் இந்தியா மற்றும் உலக சந்தையில் கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Casio G-Shock Virtual Mix collection has arrived in Japan with 3 model check price and specification details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X