Home
Gadgets

அடேங்கப்பா 5 வருட பேட்டரி லைஃப்-ஆ? கலக்குறியே சித்தப்பு.. கலக்கலான Casio கால்குலேட்டர் வாட்ச்.. விலை என்ன?

கேசியோ (Casio) நிறுவனம், நேற்று உலக சந்தையில் மூன்று புதிய கால்குலேட்டர் வாட்ச் (Calculator watch) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த மூன்று புதிய மாடல்களும் 3 வெவ்வேறு நிறத்துடன், கால்குலேட்டர் அம்சம் மற்றும் பல சுவாரசியமான அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக, இந்த வாட்ச்கள் ஒருமுறை ஆன் செய்யப்பட்டால் அடுத்த 5 ஆண்டு வரை ஆப் செய்யாமல் நீடித்து உழைக்கும் பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது என்று கேசியோ நிறுவனம் விளம்பரம் செய்து அசத்தியுள்ளது. இந்த கேசியோ கால்குலேட்டர் வாட்ச்களின் விலை மற்றும் முழு விபரத்தை பார்க்கலாம்.

தெரியாதவர்களுக்கு, கேசியோ என்பது மிகவும் பிரபலமான ஒரு எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமாகும். கேசியோ கம்ப்யூட்டர் கோ., லிமிடெட் (Casio computer co., Limited) என்பது ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஷிபுயாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு ஜப்பானிய பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனமாகும். இதன் தயாரிப்புகளில் கால்குலேட்டர்கள், மொபைல் போன்கள், டிஜிட்டல் கேமராக்கள், எலக்ட்ரானிக் இசைக்கருவிகள் மற்றும் அனலாக் மற்றும் டிஜிட்டல் வாட்ச்கள் போன்றவை அடங்கும்.

அடேங்கப்பா 5 வருட பேட்டரி லைஃப்-ஆ? கலக்குறியே சித்தப்பு.. Casio வாட்ச்

இந்த வரிசையில், கேசியோ நிறுவனம் இப்போது மூன்று புதிய கேசியோ கால்குலேட்டர் வாட்ச் (Casio calculator watch) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இது கேசியோவின் CA53 சீரிஸ் வாட்ச் வரிசையின் கீழ் வருகிறது. இதில் நிறுவனம் Casio CA53WB-8B, Casio CA53WB-1B மற்றும் Casio CA53WB-3B ஆகிய மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை சிறிய LCD டிஸ்பிளேவுடன் முழு கீபேட் (Keypad) அம்சத்துடன் வருகின்றன.

என்ன தான் சந்தையில் பல கால்குலேட்டர் வாட்ச்கள் விற்பனை செய்யப்பட்டாலும், கேசியோவின் இந்த கால்குலேட்டர் வாட்ச்களை அவை நெருங்கவே முடியாது. காரணம், இந்த Casio CA53WB-8B, Casio CA53WB-1B மற்றும் Casio CA53WB-3B ஆகிய மூன்று மாடல்களும் 5 வருட பேட்டரி ஆயுளை வழங்குகிறது. இதை வேற எந்த நிறுவனம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய கால்குலேட்டர் வாட்ச்சை நிறுவனம் 1972 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்த கேசியோ மினி கால்குலேட்டர் (Tribute to Casio Mini calculator launched in 1972) வாட்ச்சிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த் CA53 சீரிஸ் வாட்சப் நெகட்டிவ் எல்சிடி டிஸ்பிளேயுடன் (negative LCD display) கிரீன் நிற எழுத்துக்களை (green colour text) காண்பிக்கிறது.

இது ரிசைன் கிளாஸ் (resin glass) பாதுகாப்புடன் முழு கீபேட் அம்சத்துடன் வருகிறது. இதில் மொத்தம் 16 பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை கால்குலேட்டர் பன்க்ஷன்களை மேற்கொள்ள அனுமதிக்கிறது. குறிப்பாக எட்டு இலக்கங்கள் வரை கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகியவற்றை செய்ய அனுமதிக்கிறது. கூடுதலாக, 1/100 வினாடி ஸ்டாப்வாட்ச் (stopwatch) மற்றும் அலாரம் (alarm) போன்ற அம்சங்களை இந்த வாட்ச் கொண்டுள்ளது.

இந்த கேசியோ வாட்ச் சாதனம் டூயல் டைம் மண்டலங்களை (dual time zone) ஆதரிக்கின்றது. மாதத்திற்கு 15 வினாடிகளுக்குள் துல்லியமானவை மற்றும் இது 2099 ஆம் ஆண்டு வரையிலான முழு தானியங்கி காலெண்டரைக் (calendar) கொண்டுள்ளது. இந்த வாட்ச் கேஸ் 43.2 × 34.4 × 8.2 மிமீ (~1.7 x 1.4 x 0.3 அங்குலங்கள்) அளவில் வருகிறது. இது கேஜெட்டுகள் CR2016 பேட்டரியில் இயங்குகிறது. இதனால் இது ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கிறது.

இதன் விலை பற்றி பேசுகையில், இந்த புதிய Casio CA53WB-8B (கிரீம் நிறம்), Casio CA53WB-1B (கருப்பு நிறம்) மற்றும் Casio CA53WB-3B (ப்ளூஷ்-கிரீன் நிறம்) மாடல்கள் $35.95 டாலர் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 29,631 ஆகும். இந்தியாவில் விரைவில் வெளிவருமென்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Casio CA53 Series Calculator Watches Launched With 5 Years Battery Life Check Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X