கேசினோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அபார திறமை கொண்ட புரொஜக்டர்கள்.!
இந்த புரொஜக்டரின் இயங்கும் கால அளவு என்பது 20 ஆயிரம் மணி நேரம் ஆகும். அதாவது நீங்கள் தினமும் ஆறு மணி நேரம் இந்த புரொஜக்டர்களை பயன்படுத்தினால் சுமார் 10 வருடங்களுக்கு பயன்படுத்தலாம் என்று அர்த்தம்.
ஜப்பானை சேர்ந்த கேசினோ நிறுவனம் உலகம் முழுவதும் பல்வேறு நுகர்வோர்களுக்கான பொருட்களை தயாரித்து நல்ல பெயரை பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது இந்தியாவில் ரூ. 54,999 விலையில் இருந்து ஐந்து வகைகளில் புதிய புரொஜக்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய புரொஜக்டர்கள் அனைத்துமே எல்.இ.டி ஹைப்ரிட் டெக்னாலஜியில் இயங்குவது மட்டுமின்றி குறைந்த அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி நமது சுகாதாரத்திற்கும் உதவுகிறது. மேலும் இந்த புரொஜக்டர்களை ஏற்கனவே வெளிவந்து சந்தையில் இருக்கும் டைப்பிகல் லேப்ம் புரொஜக்டர்களைவிட நவீனமானது.
கோர் சீரிஸில் அட்வான்ஸ் தன்மை கொண்டது:
இந்த புரொஜக்டரின் இயங்கும் கால அளவு என்பது 20 ஆயிரம் மணி நேரம் ஆகும். அதாவது நீங்கள் தினமும் ஆறு மணி நேரம் இந்த புரொஜக்டர்களை பயன்படுத்தினால் சுமார் 10 வருடங்களுக்கு பயன்படுத்தலாம் என்று அர்த்தம். மேலும் இந்த அதிநவீன புரொஜக்டர்களில் 1.5 அளவில் லென்ஸ் இருப்பதால் அட்ஜெஸ்மெண்ட் செய்வதற்கு ஏற்றது. இந்த உபகரணம் டஸ்ட் புகா வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதால் இயங்கும்போது எந்த பிரச்சனையும் இருக்காது.
அல்ட்ரா ஷார்ட் த்ரோ சீரிஸ் தன்மை கொண்டது:
கேசினோ நிறுவனத்தின் இந்த புரொஜக்டர்கள் ஒரு நிலையான லென்ஸை கொண்டு இருப்பினும் அதன் திறன் 3100 லூமன்ஸ் அளவில் பிரைட்டாகவும், அதே நேரத்தில் 1280 x 800 ரெசலூசனையும் தரும் வல்லமை கொண்டது. மேலும் இந்த சீரிஸ் புரஜொக்டர்கள் 20,000:1 காண்ட்ராஸ்ட் விகிதத்தையும் கொண்டது என்பதால் கம்ப்யூட்டர் மற்றும் அனைத்து நெட்வொர்க்கிலும் சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மிகவும் மெல்லியதான ஒரு தயாரிப்பு:
இந்த புரொஜக்டர்களின் சிறப்பு அம்சமே இதன் மெல்லிதான வடிவம்தான். மிகவும் மெல்லிய வடிவில் தயாரிக்கப்பட்ட இந்த புரொஜக்டர்கள் வெறும் 2.25 கிலோ எடை மட்டுமே கொண்டது. மேலும் இதன் திக்னெஸ் 1.7 செமீ அளவு மட்டுமே இருப்பதால் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். இந்த கோர் சீரியஸ் புரொஜக்டர்கள் மெல்லிய வடிவம், 20 ஆயிரம் மணி நேரம் இயங்கும் திறம் மற்றும் சரியான வண்ணத்தை காட்டும் திறன் ஆகியவைகளை கொண்டுள்ளதால் சிறப்பானதாகும். எனவேதன் இது அனைத்து தரப்பினர்களுக்கும் தேவையான ஒரு சிறந்த புரொஜக்டர்களாக பார்க்கப்படுகிறது.

அல்ட்ரா ஹெச்டிதன்மை கொண்டது:
மேலும் இந்த புரொஜக்டர்களில் அல்ட்ரா ஹெச்டி புரொஜக்டர்களாக இருப்பதால் 4K வடிவத்தில் நமக்கு வீடியோ கிடைக்கின்றது. மேலும் இதில் உள்ள சிறப்பு வாய்ந்த லென்ஸ் குறைவான ரெசலூசனில் உள்ள வீடியோவாக இருந்தாலும் அதனை மேம்படுத்தி நல்ல ரெசலூசனுக்கு மாற்றி நமக்கு நல்ல வீடியோ பார்த்த அனுபவத்தை கொடுக்கும். மேலும் இந்த புரொஜக்டர்களில் உள்ள ஒரு சிறப்பு தன்மை என்னவெனில் அதிகபட்ச பிரைட்னெஸ் ஆன 5000 லூமன்ஸ் வரை கொடுக்கும் திறன் கொண்டது
முடிவுரை: மொத்தத்தில் புரொஜக்டர்கள் தேவைப்படுபவர்களுக்கு தேவையான ஒன்றுதான் இந்த கேசினோ புரொஜக்டர்கள். தகுந்த சோதனைக்கு பின்னர் வெளிவந்துள்ள இந்த புரொஜக்டர்கள் உண்மையில் நமது வாழ்க்கைக்கு தேவையான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








