கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்! விலை என்ன தெரியுமா?

|

கேனான் இந்தியா தனது புதிய மிரர்லெஸ் கேமரா மாடலான EOS M200 என்ற புதிய மாடல் கேமராவை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா நாட்டின் அனைத்து கேனான் கடைகளிலும் இன்று முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது என்று கேனான் நிறுவனம் அறிவித்துள்ளது.

கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா

கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா

கேனனின் சமீபத்திய எம்(M) சீரிஸ் மிரர்லெஸ் கேமரா இது, இந்த கேமரா சிறந்த செயல்திறனை வழங்குவதற்காகப் பெரிய ஏபிஎஸ்-சி(APS-C) சென்சாருடன் காம்பெக்ட் டிசைனில் விற்பனைக்கு வந்துள்ளது. கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா, 24.1 மெகாபிக்சல் சென்சாருடன் கூடிய டிஜிக் 8(DIGIC 8) இமேஜ் பிராசஸர் அமைப்புடன் களமிறக்கப்பட்டுள்ளது.

180 டிகிரி டில்ட் எல்சிடி டிஸ்பிளே

180 டிகிரி டில்ட் எல்சிடி டிஸ்பிளே

கேனனின் இந்த கேமரா வினாடிக்கு 24 பிரேம் ரேட் கொண்ட 4K வீடியோக்களைப் படம் பிடிக்கிறது. அதேபோல் கேனனின் டூயல் பிக்சல் சிஎன்ஓஎஸ்(Dual Pixel CMOS) ஆட்டோஃபோகஸ் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இத்துடன் கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமராவில் 180 டிகிரி டில்ட் எல்சிடி டிஸ்பிளேயும் வழங்கப்பட்டுள்ளது.

ஜியோவிற்கு அடிமேல் அடி: அனைத்து நெட்வொர்க் அழைப்புகளுக்கு இலவசம் அறிவித்த ஏர்டெல்.!ஜியோவிற்கு அடிமேல் அடி: அனைத்து நெட்வொர்க் அழைப்புகளுக்கு இலவசம் அறிவித்த ஏர்டெல்.!

வைஃபை மற்றும் ப்ளூடூத் இணைப்பு

வைஃபை மற்றும் ப்ளூடூத் இணைப்பு

அதேபோல் இந்த கேமராவில் ஆட்டோமேட்டிக் அட்வான்ஸ்டு ஐ டிடெக்ஷன் தொழில்நுட்பம் போட்டோ மற்றும் வீடியோ என இரண்டு சேவைக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் விபிளாக்கர்கள் சிரமம் இல்லாமல் வீடியோகளை பதிவு செய்துகொள்ளலாம். கேனான்EOS M200 மிரர்லெஸ் கேமராவில் வைஃபை மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் உடன் இணைத்துக்கொள்ளலாம்

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் உடன் இணைத்துக்கொள்ளலாம்

உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் உடன் உங்கள் கேமராவை கனெக்ட் செய்துகொள்வதற்கென்று பிரத்தியேக பயன்பாடு செயலியையும் கேனான் வெளியிட்டுள்ளது. அதேபோல் அனைத்து எம் சீரிஸ் லென்ஸ்களுடனும் கேனான்EOS M200 மிரர்லெஸ் கேமரா ஒத்துப்போகும். இத்துடன் EF மவுண்ட் அடாப்டருக்கான மவுண்டரும் இந்த கேமராவில் உள்ளது.

வாட்ஸ்அப் இல் உங்களை யார் பிளாக் செய்துள்ளனர் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?வாட்ஸ்அப் இல் உங்களை யார் பிளாக் செய்துள்ளனர் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

கேனான்EOS M200 அடிப்படை மாடலின் விலை

கேனான்EOS M200 அடிப்படை மாடலின் விலை

இந்தியாவில் கேனான்EOS M200 மிரர்லெஸ் கேமராவின் அடிப்படை மாடல் வெறும் ரூ.43,995 என்ற விற்பனை விலையில் தொடங்குகிறது. இந்த துவக்க மாடலுடன் ஈஎஃப்-எம் 15-45 ஐஎஸ் எஸ்.டி.எம் (EF-M15-45 IS STM) கிட் லென்ஸும் வழங்கப்படுகிறது.

ஹை வேரியண்ட் மாடலின் விலை

ஹை வேரியண்ட் மாடலின் விலை

அதேபோல் கேனானின் மற்றொரு வேரியண்ட் மாடலான கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா வெறும் ரூ.57,995 என்ற விலையில் ஈஎஃப்-எம் 15-45 ஐஎஸ் எஸ்.டி.எம் (EF-M15-45 IS STM) மற்றும் ஈஎஃப்-எம் 55-200 ஐஎஸ் எஸ்.டி.எம் (EF-M55-200 IS STM) கிட் லென்ஸ்களுடன் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Canon EOS M200 mirrorless camera now available for purchase in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X