43-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியை கம்மி விலையில் அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.!

|

இந்தியாவில் பிரபலமான கேண்டிஸ் (Candes) நிறுவனம் புதிய 43-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் டிவி கம்மி விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

என்ன விலை?

என்ன விலை?

அதாவது 43-இன்ச் கொண்ட Candes 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.19,499-ஆக உள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆனது அமேசான், பிளிப்கார்ட், Candesworld மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இப்போது Candes 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

கோடீஸ்வரர் பில்கேட்ஸ் பயன்படுத்தும் போன் இதுதான்- ஐபோன் இல்ல., அவரே இதைதான் யூஸ் பண்றாரு!கோடீஸ்வரர் பில்கேட்ஸ் பயன்படுத்தும் போன் இதுதான்- ஐபோன் இல்ல., அவரே இதைதான் யூஸ் பண்றாரு!

சூப்பர் டிஸ்பிளே

சூப்பர் டிஸ்பிளே

400 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவு கொண்ட அல்ட்ரா டிஸ்பிளே பேனல்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி.

குறிப்பாக சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் இந்த 43-இன்ச் கொண்ட Candes 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

ரெடியா., இந்தியாவில் ஹைப்பர்லூப்- விமான வேகம் பயணம்: சென்னை ஐஐடி உடன் கூட்டு சேர்ந்த இந்தியன் ரயில்வே!ரெடியா., இந்தியாவில் ஹைப்பர்லூப்- விமான வேகம் பயணம்: சென்னை ஐஐடி உடன் கூட்டு சேர்ந்த இந்தியன் ரயில்வே!

அருமையான ஆடியோ

அருமையான ஆடியோ

ரிச் & சரவுண்ட் சவுண்ட் சவுண்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது 43-இன்ச் கொண்ட Candes 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி. கண்டிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.

நார்மல் ரீசார்ஜை விட இது பெஸ்ட் போலயே.. OTT நன்மையுடன் கிடைக்கும் பெஸ்ட் Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்கள்..நார்மல் ரீசார்ஜை விட இது பெஸ்ட் போலயே.. OTT நன்மையுடன் கிடைக்கும் பெஸ்ட் Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்கள்..

குவாட்-கோர் பிராசஸர்

குவாட்-கோர் பிராசஸர்

இந்த புதிய ஸ்மார்ட் டிவி 1.9ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர் மூலம் இயங்குகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது Candes 4கே ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஏலியன்ஸ் இருக்கா? இது எப்படி வந்துச்சு?- செவ்வாய் கிரகத்தில் இருந்த கதவு வாசல்: நாசா ரோவர் எடுத்த புகைப்படம்!ஏலியன்ஸ் இருக்கா? இது எப்படி வந்துச்சு?- செவ்வாய் கிரகத்தில் இருந்த கதவு வாசல்: நாசா ரோவர் எடுத்த புகைப்படம்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், யூடியூப், சோனி லிவ் மற்றும் பல ஆப்ஸ்களை புதிய Candes 4கே ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஓடிடி-இல் வெளியாகும் படங்களை இந்த டிவியில் எளிமையாக பார்க்க முடியும்

இறந்த மனிதனின் கண்களை இயங்க வைத்த விஞ்ஞானிகள்.. முதல் முறையாக இது எப்படி சாத்தியமானது?இறந்த மனிதனின் கண்களை இயங்க வைத்த விஞ்ஞானிகள்.. முதல் முறையாக இது எப்படி சாத்தியமானது?

 வாய்ஸ் அசிஸ்டன்ட்

வாய்ஸ் அசிஸ்டன்ட்

அதேபோல் இந்த 43-இன்ச் கொண்ட Candes 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. கண்டிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

'ஓ மை காட்' சந்திர மண்ணில் வளர்ந்த தாவரங்கள்.. இது என்ன செடி தெரியுமா? வியந்து போன விஞ்ஞானிகள்..'ஓ மை காட்' சந்திர மண்ணில் வளர்ந்த தாவரங்கள்.. இது என்ன செடி தெரியுமா? வியந்து போன விஞ்ஞானிகள்..

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

3 எச்டிஎம்ஐ 2.0 போர்ட்கள், 2 யுஎஸ்பி போர்ட்கள், ஆர்எப் கனெக்டிவிட்டி போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது 43-இன்ச் கொண்ட Candes 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி. கம்மி விலையில் இதுபோன்ற தரமான அம்சங்களுடன் எந்த நிறுவனமும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்ததில்லை.

கண்டிப்பாக இந்தியச் சந்தையில் 43-இன்ச் கொண்ட Candes 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Candes has launched an affordable 43-inch 4K Android Smart TV: Specs, Price, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X