மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகளில் ஹேக்கிங் என்பது சாத்தியமா.? இவிஎம்-களின் மூலம் போலியான வாக்குகளை அல்லது கள்ள ஓட்டுகளை உருவாக்க முடியுமா.?
இவிஎம் (EVM - Electronic Voting Machines) எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களானது, கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் இந்திய பொது மற்றும் மாநிலத் தேர்தல்களில் வாக்குப்பதிவுகளை செயல்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதற்கு முன்பு வரை காகித வாக்கு முறையை கையாண்ட இந்திய அரசியல்வாதிகளையும் சேர்த்து, பெரும்பாலான மக்களுக்கும் கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமானது, தந்திரமான சில ஏமாற்று வேலைகளுக்குள் ஈடுபடுத்தப்படலாமென்ற சந்தேகம் முதல் நாளில் இருந்தே கிளம்பியது.

போட்டுடைத்த பிபிசி.!
இந்த "இயந்திரம்" பாதுகாப்பற்றது என்ற குற்றசாட்டுகள் பல எழுந்தன, தொடர்ந்து ஹேக்கிங் குற்றசாட்டுகளுக்குள் சிக்கினாலும் கூட இன்று நடக்கும் ஆர்.கே இடைத்தேர்தல் வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகளில் ஹேக்கிங் என்பது சாத்தியமா.? இவிஎம்-களின் மூலம் போலியான வாக்குகளை அல்லது கள்ள ஓட்டுகளை உருவாக்க முடியுமா.? இவிஎம்-களை ஒருவரால் கட்டுப்படுத்த முடியுமா.? - ஆம் என்று போட்டுடைத்துள்ளது பிபிசி.!

சட்டவிரோதமான முறையில்
பொதுவாகவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் வலுவானவைகள் மற்றும் எதனை கொண்டும் தலையிடவோ அல்லது ஊடுருவவோ முடியாதவைகள் ஆகும். அவ்வளவு ஏன் இவிஎம்-களை அதன் உற்பத்தியாளர்களால் கூட சட்டவிரோதமான முறையில் கையாள முடியாது என்று தான் நம்பப்பட்டு வந்தது.

நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது
ஆனால் தற்போதுள்ள நிலைமையோ முற்றிலும் வேறு, பலவகையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் இவிஎம் இயந்திரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது என்றே கூற வேண்டும். ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் இவிஎம் பாதுகாப்பு சார்ந்த அறிக்கையில் "வழக்கம் போல" இவிஎம்களை ஹேக் செய்ய இயலாது என்று தான் கூறப்படுகிறது.

நுட்பத்தினை உருவாக்கி காட்டினர்
ஆனால் 2010-ஆம் ஆண்டிலேயே அமெரிக்க விஞ்ஞானிகள் நமது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து, அதை பிபிசி அம்பலப்படுத்தியது பற்றி உங்களுக்கு தெரியுமா.? ஆம். கடந்த 2010-ஆம் ஆண்டில் அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நமது இந்திய மின்னணு வாக்கு இயந்திரங்களுள் ஊடுருவக்கூடிய ஒரு நுட்பத்தினை உருவாக்கி காட்டினர்.

உரை செய்திகளை அனுப்புவதன் மூலம்
2010-ஆம் ஆண்டிலேயே இந்த தகவலை வெளியிட்ட பிபிசி, உத்திர பிரதேசத்தில் நடந்த தேர்தலில் பா.ஜா.க-வின் அபாரமான வெற்றியை தொடர்ந்து பிபிசி மீண்டும் அந்த தகவலை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது. மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மூலம் சொந்தமாக உருவாக்கப்பட்ட ஒரு கணினியோடு, இவிஎம் இயந்திரம் இணைக்கப்பட்ட பின்னர் மொபைலில் இருந்து இயந்திரங்களுக்கு உரை செய்திகளை அனுப்புவதன் மூலம் ஒட்டு எண்ணிக்கை முடிவுகளை மாற்ற முடிந்தது.

இமிடேஷன் டிஸ்பிளே
இந்த ஹேக்கிங் நிகழ்வில், இவிஎம் இயந்திரங்களின் உண்மையான டிஸ்பிளேவை போன்ற காட்சியளிக்கும், கிட்டத்தட்ட அதேபோன்ற தோற்றமுள்ள இமிடேஷன் (Imitation - சாயல்) டிஸ்பிளே பலகை செய்யப்பட்டு அதற்கு அடியில் ஒரு நுண்செயலி மற்றும் ஒரு ப்ளூடூத் ரேடியோ மறைத்து வைக்கப்பட்டது.

நிஜமான ஒட்டு எண்ணிக்கைகள் இடைமறிக்கப்பட்டு
ஆய்வு செய்து பார்க்கும் நோக்ககத்தில் உருவாக்கப்பட்ட போலியான இவிஎம் டிஸ்ப்ளே வழியாக, முழுக்க முழுக்க அதனை அடிப்படையாக கொண்டு போலியான ஒட்டு எண்ணிக்கை முடிவுகளை ஹேக்கிங் நிகழ்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்களை காட்சிப்படுத்தியுள்ளனர். அதாவது இவிஎம் இயந்திரங்களில் பதிவான நிஜமான ஒட்டு எண்ணிக்கைகள் இடைமறிக்கப்பட்டு, நேர்மையற்ற போலியான எண்ணிக்கைகள் காட்சிப்படுத்தப்படும்.

தேர்தல் நடக்கும் நேரம் மற்றும் நடந்து முடிந்த பின்னர்
கூடுதலாக இவிஎம்-களுள் இணைக்கப்படும் சிறிய நுண்செயலியின் உதவியுடன் இயந்திரம் சேமித்து வைத்துள்ள வாக்குகளை மாற்ற முடியும் என்றும் விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளன. இந்த எண்ணிக்கை மாற்றத்தை தேர்தல் நடக்கும் நேரம் மற்றும் நடந்து முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கை நிகழும் நேரம் ஆகியவைகளுக்கு இடையே நடத்தப்படலாம் என்றும் ஆரய்ச்சியாளர்கள் நிரூபித்து காட்டினர்.

முற்றிலும் சாத்தியமற்றது
இந்த இவிஎம் ஹேக்கிங் ஆராய்ச்சி குறித்து அப்போதைய இந்திய துணை தேர்தல் ஆணையர் "இவிஎம் என்பது வெறும் ஒரு இயந்திரம் அல்ல, ஒட்டுமொத்த நிர்வாக பாதுகாப்பின்படி பார்க்கும் போது இதை கட்டுப்படுத்துவது என்பது முற்றிலும் சாத்தியமற்றது" என்று விளக்கம் கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நேர்மையான தொழிநுட்பம்
2010-ஆம் ஆண்டிலேயே இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்படலாம் என்று நிரூபணம் ஆகியுள்ள நிலைப்பாட்டில், இது அடுத்த தேர்தலிலும் நிகழ வாய்ப்புள்ளது என்று அப்போதே உறக்கச் சொல்லப்பட்டது. இன்றைய தேர்தல் காலத்தில் 'இது' சாத்தியம் தானா? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இப்போதைய அதி நவீனத்துவத்தை பற்றிய விளக்கமே நமக்கு தேவையில்லை. இம்மாதிரியான டெக் யுகத்தில் எதையும் சாத்தியப்படுத்தலாம் என்பதே உண்மை. இதை உங்களுக்கு விளக்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை. தெளிவான காலமும், நேர்மையான தொழிநுட்பமும் தான் இதற்கு பதில் கூற வேண்டும்.

நம்பிக்கையின்கீழ் வாக்குகளை அளிப்போம்
இந்திய தேர்தல் அதிகாரிகளை பொறுத்தமட்டில், இவிஎம் இயந்திரங்களானது பிழையேற்படுத்த முடியாதவைகள் மற்றும் திருத்தங்கள் எதுவும் நிகழ்த்த முடியாதவைகள் என்பதில் உறுதியாக உள்ளனர். இவிஎம் மிகவும் கடினமான ஒரு கருவி என்றும் கூறி வருகின்றனர். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்ற நம்பிக்கையின்கீழ் வாக்குகளை அளிப்போம்.


Click it and Unblock the Notifications