பெண்களுக்கான பாதுகாப்பு எலெக்ட்ரோ ஷாக் ஜாக்கெட்-"தொட்ட ஷாக் அடிக்கும்": இந்தியாவுக்கு உடனே தேவை.!
மெக்சிகோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ரோபோவியல் மாணவர்கள், ஜேம்ஸ் பாண்ட் பாணியில் பிரத்தியேகமாக பெண்களுக்கான கேஜெட்டை ஐ தயாரித்துள்ளனர்.
மெக்சிகோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ரோபோவியல் மாணவர்கள், ஜேம்ஸ் பாண்ட் பாணியில் பிரத்தியேகமாக பெண்களுக்கான கேஜெட்டை ஐ தயாரித்துள்ளனர்.
உலக அளவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்துவரும் நிலையில். அணைத்து நிறுவனங்களும் பெண்களுக்கான பாதுகாப்பு தயாரிப்புகளை தயாரிக்க முன்வந்துள்ளனர்.

எலெக்ட்ரோ ஷாக் ஜாக்கெட்
அந்த வரிசையில் ஜெர்மனி ரோபோடிக்ஸ் கல்லூரி மாணவர்கள் புதிய "எலெக்ட்ரோ ஷாக் ஜாக்கெட்" ஐ உருவாக்கியுள்ளனர். இந்த ஜாக்கெட் பெண்களுக்கான சிறந்த பாதுகாப்பு காவலனாக இருப்பான் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளார். எலெக்ட்ரோ ஷாக் ஜாக்கெட் பெண்களிடம் தாக்குதல் மற்றும் திருட முயல்பவர்கள் மேல் 90 வோல்ட் எலக்ட்ரிக் கரண்டை செலுத்தி, நொடியில் அவர்களைச் சுருங்கி விடச் செய்கிறது.

பாதுகாப்பு ஆயுதம்
பருத்தியால் தயாரிக்கப்பட்ட இந்த ஜாக்கெட் இன் எடை 400 கிராம், இந்த பருத்தி ஜாக்கெட்டின் மேல் பரப்பில் மின்சாரம் பரவும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெண்களுக்கான ஜாக்கெட் பாதுகாப்பு ஆயுதமாகப் பயன்படுமென்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொட்டா ஷாக் அடிக்கும்
பெண் மற்றும் குழந்தைகள் பாலியல் தாக்குதலால் பாதிக்கப்படுகின்றனர், இவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் எண்ணத்தை மனதில் கொண்டு இந்த எலெக்ட்ரோ ஷாக் ஜாக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஜாக்கெட் இன் கைகளில் ஒரு மறைத்து வைக்கப்பட்ட பட்டன் உள்ளது, ஆபத்து வரும் நேரத்தில் அதை நீங்கள் தொட்டால் மட்டும் போதும். உங்களை நெருங்கிய நபர் சிறு நொடியில் மின்சாரம் தாக்கி சுயநினைவின்றி கிடப்பார்.

எலெக்ட்ரோ ஷாக் பேண்ட் & சட்டை
இந்தப் பெண்களுக்கான பாதுகாப்பு ஜாக்கெட் அமெரிக்க சந்தையில் 50 டாலர்க்குக் கிடைக்கிறது. மேலும் அடுத்த பாதுகாப்பு உடைகளாக எலெக்ட்ரோ ஷாக் பேண்ட், சட்டை விரைவில் விற்பனைக்கு வருமென்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த எலெக்ட்ரோ ஷாக் ஜாக்கெட் கைகளில் மட்டுமே மின்சார பட்டைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications