Home
Gadgets

பட்ஜெட் விலையில் Nothing Headphone (a) மாடல்.. நத்திங் Phone 4a சீரிஸ் உடன் அறிமுகம்?

நத்திங் (Nothing) நிறுவனம் பட்ஜெட் விலை வாசிகளை குறிவைத்து அதன் அடுத்த புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. இந்நிறுவனம் வருகிற 2026 மார்ச் 5 ஆம் தேதி அன்று இந்தியா மற்றும் உலகளவில் அதன் நத்திங் போன் 4ஏ சீரீஸ் (Nothing Phone 4a Series) மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்கள் - 2026 ஆம் ஆண்டில் நத்திங் நிறுவனத்தின் முக்கியமான அறிமுகங்கள் ஆக இருக்கும். ஏனென்றால் இந்நிறுவனம் இந்தாண்டு பிரீமியம் பிளாக்ஷிப் மாடல்கள் எதையும் அறிமுகம் செய்யப்போவது இல்லை. சுவாரசியமாக நத்திங் போன் 4ஏ சீரிஸ் உடன் சேர்த்து நத்திங் ஹெட்போன் ஏ (Nothing Headphone a) மாடலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது போல் தெரிகிறது.

பட்ஜெட் விலையில் Nothing Headphone (a) மாடல்?

நத்திங் ஹெட்போன் ஏ மாடல் ஆனது நத்திங் ஹெட்போன் 1 மாடலுக்கான "புதிய குறைந்த விலை மாற்றாக" அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹெட்போன் சிங்கப்பூரின் IMDA சான்றிதழை பெற்றுள்ளதால், இதுவும் மார்ச் 5 ஆம் தேதி அன்றோ அல்லது அதன் பின்னரோ அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

நத்திங் ஹெட்போன் ஏ மாடல் ஆனது டிரான்ஸ்பரென்ட் டிசைனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹெட்போன் 1 க்கு ஒரு மலிவு விலை மாற்றாக இருக்கும் என்பதால் - இதன் விலை நிர்ணயமும் இங்கே முக்கியமாகும். ஹெட்போன் ஏ மாடல் ஐரோப்பாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.17,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் ஹெட்போன் 1 மாடல் ஆனது ரூ.21,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, எனவே ஹெட்போன் ஏ மாடல் ஆனது ரூ.15,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. ஹெட்போன் 1-ஐ வாங்க விரும்புவோருக்கு, ஆனால் அவ்வளவு பணம் செலுத்த விரும்பாதவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

நத்திங் போன் 4ஏ சீரீஸ்: இந்த சீரீஸின் கீழ் நத்திங் போன் 4ஏ மற்றும் நத்திங் போன் 4எ ப்ரோ என்கிற மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வழக்கம் போலவே இம்முறையும் நத்திங் போன் 4ஏ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டதும், அவைகள் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கும் என்பதை நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.

நத்திங் நிறுவனத்தின் இந்த புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களுக்கான பிரத்யேக பிளிப்கார்ட் மைக்ரோசைட் தற்போது நேரலையில் உள்ளது. நினைவூட்டும் வண்ணம் இதுவரை வெளியான அனைத்து நத்திங் தயாரிப்புகளுமே பிளிப்கார்ட் வழியாகவே ஆன்லைனில் விற்கப்பட்டுள்ளன. எனவே நத்திங் போன் 4ஏ சீரிஸிலும், நத்திங் இந்த போக்கை தொடர்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரல் 4 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இது 12GB RAM உடன் இணைக்கப்படலாம். இது ஒரு பெரிய 5,080mAh பேட்டரியை பேக் செய்யலாம், இது 50W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலாம்.

இந்த மாடல் ஆண்ட்ராய்டு 16 OS அடிப்படையிலான நத்திங் OS கஸ்டம் ஸ்கின் கொண்டு இயங்க வாய்ப்புள்ளது. மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களில் இது 256GB வரை UFS 3.1 ஸ்டோரேஜ், நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP65 ரேட்டிங் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இது இரண்டு கலர் ஆப்ஷன்களில் வெளியாகலாம் - பிளாக் மற்றும் ஒயிட்.

குறிப்பாக நத்திங்கின் சிக்னேச்சர் டிசைனான டிரான்ஸ்பரென்ட் டிசைனையும் நாம் எதிர்பார்க்கலாம். அதாவது இந்த ஸ்மார்ட்போன் Glyph LED லைட்டிங் அமைப்புடன் வரும் என்று எதிர்பார்க்கலாம். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 144Hz வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான டிஸ்பிளேவை பேக் செய்யலாம். கேமராக்களை பொறுத்தவரை நத்திங் போன் 3ஏ மாடலை போலவே ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம்.

Best Mobiles in India

English summary
Budget Price Nothing Headphone A May Launch Along With or Soon after Phone 4a series march 5 launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X