வெறும் ரூ.499 போதும்.. மினி ஏசி.. போர்ட்டபிள் டிசைன்.. கரண்ட் பில் கவலை இருக்காது.. வீட்டுக்கு 1 வாங்கலாம்..
கதவைத் திற காத்து வரட்டும் என்ற காலம் போய் கதவை மூடு ஏசி வெளியே போகுது என்ற காலம் வந்துவிட்டது. அதாவது தற்போது கோடை வெயில் இந்த ஆண்டு மக்களைப் பாடாய் படுத்தி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் தனது கோரமுகத்தைக் காட்டத்தொடங்கியது வெயில்..
நாளுக்கு நாள் வெப்பநிலை இதை விட உயரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது என்பது தான் உண்மை. இந்நிலையில் பல முன்னணி நிறுவனங்கள் தனித்துவமான ஏசி மாடல்களை கம்மி விலையில் அறிமுகம் செய்து வருகின்றன.

அதுவும் கம்மி விலையில் ஏசி மாடல்கள் விற்பனைக்கு வருவதால் மக்கள் அதை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது அமேசான் தளத்தில் 499 ரூபாய் முதல் 2000 ரூபாய்க்குள் மினி ஏசி மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக சிலருக்கு ஏசிகளை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு முடியாமல் இருக்கும். அவர்களுக்கு உதவும் வகையில் தான் இதுபோன்ற மினி ஏசி ஃபேன்களை விற்பனை செய்துவருகின்றன அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற தளங்கள்.
அதேபோல் மினி ஏசி ஃபேன்கள் வாங்குவதால் நீங்கள் மின்சார செலவைச் சேமிக்கலாம். பின்பு இந்த வகை மினி ஃபேன்களை யூஎஸ்பி பேட்டரி கொண்டு நீங்கள் எளிமையாக சார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும் இவை போர்ட்டபிள் டிசைன் என்பதால், உங்களுக்குப் பிடித்த அறைகளில் வைத்துக் கொள்ளலாம். மேலும் நீங்கள் வேலை செய்யும் டேபிள்களில் வைப்பதற்கும் ஏதுவாக இருக்கும். சரி இப்போது அமேசான் தளத்தில் கம்மி விலையில் கிடைக்கும் சில அசத்தலான ஏசி மாடல்களை இப்போது பார்க்கலாம்.

AOXITO மினி கூலர் ஆனது அமேசானில் ரூ.499-க்கு வாங்க கிடைக்கிறது. இது யுஎஸ்பி மற்றும் பேட்டரி மூலம் இது இயங்குகிறது. மேலும் 10 மணிநேரம் வரை இயங்கும். எனவே அடிக்கடி நிரப்புவதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதேபோல் அனைத்து இடங்களிலும் இதைப் பயன்படுத்தலாம்.
NTMY மினி ஏர் கூலர் ஆனது யுஎஸ்பி டெஸ்க் ஃபேன் கொண்டுள்ளது. மேலும் 7 நிறங்கள் கொண்ட எல்இடி லைட் இதில் உள்ளது. 3 Spray மோட் கொண்டுள்ளது இந்த அசத்தலான NTMY மினி ஏர் கூலர். தண்ணீர், ஐஸ் க்யூப் போன்றவற்றை இதில் பயன்படுத்த முடியும். 12 மணிநேரம் இதைப் பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. இதன் விலை ரூ.1,187-ஆக உள்ளது.
SKYUP மினி ஏர் கூலர் மாடலை அமேசான் தளத்தில் ரூ.1,848 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் 500 தள்ளுபடியும் உள்ளது. குறிப்பாக 600Ml வாட்டர் டேங்க், 7 லைட்ஸ் மோட் மற்றும் பல சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளது இந்த மினி ஏசி. அதேபோல் இதன் மூலம் 90% மின்சாரத்தைச் சேமிக்க முடியும்.

இதேபோன்று பல்வேறு மினி ஏசி (Mini AC)மாடல்கள் அமேசானில் கிடைக்கின்றன. குறிப்பாக ஹைட்ரோ-சில் டெக்னாலஜி மற்றும் டூயல் கூலிங் ஜெட் போன்ற அம்சங்களுடன் இந்த சாதனங்கள் வருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இதன் டாப்-ஃபில் டேங்கில் தண்ணீர் ஊற்றினால் போதும் ஏசி போன்ற காற்றை அனுபவிக்க முடியும்.
குறிப்பாக இந்த மினி ஏசி சாதனங்கள் உங்களைச் சுற்றியுள்ள காற்றை குளிர்விக்கவும், ஈரப்பதமாக்கவும் உதவுகிறது. மேலும் இதுபோன்ற சாதனங்களை ஃபுல் சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் அல்லது 12 மணி நேரம் குளிர்ந்த காற்றை பெற முடியும். இதனால் அடிக்கடி தண்ணீர் நிரப்ப வேண்டும் என்ற கவலை இருக்காது.


Click it and Unblock the Notifications








