Home
Gadgets

எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.. 14550mAh பேட்டரி.. 12ஜிபி ரேம்.. அறிமுகமானது புதிய சாதனம்.. எந்த மாடல்?

இந்தியாவில் பிரேவ் நிறுவனம் தனது புதிய பிரேவ் ஆர்க் 2-இன்-1 ஆண்ட்ராய்டு சாதனத்தை (Brave Ark 2-in-1 Android device) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பிஎசி மோட் ஆதரவு கொண்ட ஆண்ட்ராய்டு 15 மூலம் இயங்குகிறது. குறிப்பாக பொழுதுபோக்கு மற்றும் தினசரி பணிகளைச் செய்யும் வகையில் இந்த புதிய சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த புதிய சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

பிரேவ் ஆர்க் அம்சங்கள் (Brave Ark Specifications): 12.95-இன்ச் 2.8கே எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் பிரேவ் ஆர்க் 2-இன்-1 ஆண்ட்ராய்டு சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் இதில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 2880 x 1840 பிக்சல்ஸ், எச்டிஆர்10, 700 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.

எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.. அறிமுகமானது புதிய சாதனம்.. எந்த மாடல்?

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) சிப்செட் உடன் இந்த பிரேவ் ஆர்க் சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் உடன் பிரேவ் ஆர்க் 2-இன்-1 ஆண்ட்ராய்டு மாடல் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த சாதனத்தில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ஆட்டோ போகஸ் ஆதரவு கொண்ட 13எம்பி ரியர் கேமரா உடன் பிரேவ் ஆர்க் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இதன் தெளிவான வீடியோக்கள் மற்றும் படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), 8 ஸ்பீக்கர்கள், 2 மைக், டிடிஎஸ் ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன. ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த சாதனம் இயங்குகிறது. அதுவும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது பிரேவ் நிறுவனம்.

14550mAh பேட்டரி உடன் இந்த பிரேவ் ஆர்க் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த சாதனம் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.. அறிமுகமானது புதிய சாதனம்.. எந்த மாடல்?

டூயல் பேண்ட் வைஃபை 6 802.11ஏஎக்ஸ், புளூடூத் 5.4, யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் பிரேவ் ஆர்க் 2-இன்-1 ஆண்ட்ராய்டு சாதனம் வெளிவந்துள்ளது. Galactic ப்ளூ நிறத்தில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட பிரேவ் ஆர்க் மாடலின் விலை ரூ.34,999-ஆக உள்ளது. அமேசான் தளத்தில் இந்த புதிய சாதனம் வாங்க கிடைக்கிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் பிரேவ் ஆர்க் மாடல் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Brave Ark launched in India with a 14550mAh battery: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X