சுட்டெரிக்கும் வெயில்.. சரியான நேரத்தில் பிராண்டட் ஏர் கூலர் மாடல்களுக்கு ஆஃபர் போட்ட பிளிப்கார்ட்..
தமிழ்நாட்டில் குளிர் காலம் முடிந்து, பெரும்பாலான இடங்களில் மெல்ல மெல்ல வெப்பம் அதிகரித்து வருகிறது. அதுவும் வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாத துவக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பலர் ஏசி (AC), ஏர் கூலர் (air coolers) போன்ற சாதனங்களை வாங்க தொடங்கிவிட்டனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிளிப்கார்ட் தளத்தில் சலுகை விலையில் கிடைக்கும் சிறந்த ஏர் கூலர் மாடல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
கென்ஸ்டார் 45 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் (Kenstar 45 L Room/Personal Air Cooler) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏர் கூலர் மாடலை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த கென்ஸ்டார் 45 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலரை ரூ.4499 விலையில் வாங்கிவிட முடியும்.

45 லிட்டர் வாட்டர் கெப்பாசிட்டி கொண்டுள்ளது கென்ஸ்டார் 45 எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர். மேலும் 4200 m³/hr ஏர் டெலிவரி கொடுக்கும். அதேபோல் தேன்கூடு பட்டைகள் (honeycomb pads), 11 இன்ச் பவர்ஃபுல் பேன் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த கென்ஸ்டார் ஏர் கூலர் மாடலில் உள்ளன. குறிப்பாக ஒரு வருட வாரண்டி இந்த ஏர் கூலர் சாதனம் வெளிவந்துள்ளது.
கிராம்ப்டன் 75 எல் டெசர்ட் ஏர் கூலர் (Crompton 75 L Desert Air Cooler) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.7499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந் சாதனத்தை வாங்கினர் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஏர் கூலர் மாடலை கம்மி விலையில் வாங்கவிட முடியும்.
கிரே மற்றும் ஒயிட் நிறங்களில் கிராம்ப்டன் 75 எல் டெசர்ட் ஏர் கூலர் வெளிவந்துள்ளது. மேலும் 43 லிட்டர் வாட்டர் கெப்பாசிட்டி, இன்வெர்ட்டர் இணக்கமானது, ஐஸ் சேம்பர், கண்ட்ரோல் பேனல், 4-வே ஏர் டீஃபிளெக்சன் (Air Deflection) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கிராம்ப்டன் ஏர் கூலர் மாடல்.
ஓரியண்ட் எலக்ட்ரிக் 46 எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர் (Orient Electric 46 L Room/Personal Air Cooler) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.6190 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏர் கூலர் மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஏர் கூலர் மாடல் ரூ.4690 விலையில் வாங்கிவிட முடியும்.

2100 cfm டெலிவரி, 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), 46 லிட்டர் டேங்க் கெப்பாசிட்டி உள்ளிட்ட பல அம்சங்கள் ஓரியண்ட் எலக்ட்ரிக் 46 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் மாடலில் உள்ளன. மேலும் இது ஐஸ் சேம்பர் கொண்டுள்ளது அதேசமயம் இன்வெர்ட்டர்
இணக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இனி வரும் மாதங்களில் வெயில் இதை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இப்போதே இது போன்ற நல்ல ஏர் கூலர்கள் அல்லது ஏசி மாடல்களை கம்மி விலையில் வாங்குவது நல்லது. அதேபோல் இனி வரும் வெயில் காலங்களில் ஏசி மற்றும் ஏர் கூலர் மாடல்களின் விலை சற்று அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications