Home
Gadgets

விட்ராதீங்க ப்ரோ.. ரூ.1499 போதும்.. 3D டிஸ்பிளே.. AI அசிஸ்டன்ட்.. IP68 ரெசிஸ்டன்ட்.. 120 மோட்கள்.. எந்த மாடல்?

மார்கெட் அதிரும்படியான பட்ஜெட்டில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட், IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட், ஹெல்த் மானிட்டர், கிளவுட் வாட்ச் பேஸ்கள், ப்ளூடூத் காலிங் போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் போல்ட் டிரெயில் ப்ரோ (BOULT Trail Pro) ஸ்மார்ட்வாட்ச் களமிறங்கி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாச்சின் பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

போல்ட் டிரெயில் ப்ரோ அம்சங்கள் (BOULT Trail Pro Specifications): இந்த போல்ட் மாடலில் 2.01 இன்ச் (2650 x 2650 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED Display) வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 260+ கிளவுட் வாட்ச் பேஸ்கள் (Cloud Watch Faces) மற்றும் கஸ்டம் வாட்ச் பேஸ்கள் (Custom Watch Faces) கிடைக்கிறது.

விட்ராதீங்க ப்ரோ.. ரூ.1499 போதும்.. 3D டிஸ்பிளே.. AI அசிஸ்டன்ட் மாடல்!

கன்ட்ரோல் கிரவுண் (Control Crown) மற்றும் மெட்டாலிக் பினிஷிங் பாடி வருகிறது. சிலிகான் ஸ்ட்ராப் (Silicone Strap) மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்ட்ராப் (Stainless Steel Strap) வேரியண்ட்கள் இருக்கின்றன. இந்த மாடலில் ரிமோட் கேமரா கன்ட்ரோல் (Remote Camera Control) மற்றும் ஃபிளாஷ்லைட் (Flashlight) சப்போர்ட் கிடைக்கிறது. ஹெல்த் மானிட்டர்களில் பின்னியெடுக்கிறது.

ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor), ஸ்ட்ரெஸ் மானிட்டர் (Stress Monitor) மற்றும் எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) கிடைக்கிறது. ரன்னிங், ஜாக்கிங், வாக்கிங் போன்றவற்றுக்காக ஆக்டிவிட்டி டிராக்கர் (Activity Tracker) கிடைக்கிறது. மேலும், மென்சுரல் டிராக்கர் (Menstrual Tracker), கலோரி டிராக்கர் (Calorie Tracker) இருக்கிறது.

இதுபோக ப்ரீத் டிரெயினிங் (Breath Training) மற்றும் வாட்டர் ரீமைண்டர் (Reminder) கிடைக்கிறது. ஆகவே, பட்ஜெட்டில் ஒட்டுமொத்த ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் ஹெல்த் டிராக்கர்களை பெற்று கொள்ளலாம். ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டியுடன் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, மைக் (Mic) மற்றும் ஸ்பீக்கர் (Speaker) வருகிறது.

காலிங் செய்ய ஏதுவாக டயல் கிபேட் (Dial Keypad), கான்டாக்ட் சிங்க் (Contacts Sync) மற்றும் ஒன் கிளிக் கனெக்சன் கன்ட்ரோல் கிடைக்கிறது. ரியல்-டைம் நோட்டிபிகேஷன்கள் சப்போர்ட் உள்ளது. ஆகவே, ஸ்மார்ட்போனுடன் சிங்க் செய்து கொண்டு எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், மெயில் மற்றும் ஆப்கள் போன்றவற்றின் நோட்டிபிகேஷன்களை தெரிந்து கொள்ளலாம்.

ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் கிடைக்கிறது. கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டன்ட் (Siri Voice Assistant) கிடைக்கிறது. ஆகவே, எளிதாக கனெக்ட் செய்து பயன்படுத்த முடியும். 120+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் கிடைக்கின்றன. இந்த பீச்சர்களுக்கு ஏற்ப IP68 வாட்டர் ரெசிஸ்டன் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

வேல்ர்டு கிளாக் சப்போர்ட் உள்ளது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்ட்ராப் டிசைனில் சில்வர் (Silver) கலரிலும், சிலிகான் ஸ்ட்ராப் டிசைனில் ஜேட் பிளாக் (Jet Black) கலரிலும் கிடைக்கிறது. கர்வ்ட் டிஸ்பிளேவுக்கு ஏற்ப டயலும் கர்வ்ட் டிசைனில் கிடைக்கிறது. இந்த போல்ட் டிரெயில் ப்ரோ மாடலுக்கு 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது.

இதன் விலையை பார்க்கையில், சிலிகான் ஸ்ட்ராப் கொண்ட பிளாக் வேரியண்ட் ரூ.1,499-க்கும், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்ட்ராப் கொண்ட சில்வர் வேரியண்ட் ரூ.1,699-க்கும் வெளியாகி இருக்கிறது. போல்ட் தளத்தில் ஆர்டருக்கு கிடைக்கிறது. மேலும், அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளத்திலும் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BOULT Trail Pro With 3D Curved Display IP68 Water Resistance Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X