குறைந்த விலையில் Boult நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்வாட்ச்: என்னென்ன அம்சங்கள்?
போல்ட் நிறுவனம் இந்தியச் சந்தையில் தொடர்ந்து தரமான ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போல்ட் நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
போல்ட் ஸ்டிரைக்கர் ஸ்மார்ட்வாட்ச்
அதாவது இந்திய சந்தையில் போல்ட் ஸ்டிரைக்கர் எனும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது போல்ட் நிறுவனம். இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

போல்ட் ஸ்டிரைக்கர் ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள்
அதாவது இந்த போல்ட் ஸ்டிரைக்கர் ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆனது 1.3-இன்ச எச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட் வாட்ச் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போல்ட் நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் வட்ட வடிவ டயல், சிலிகான் ஸ்டிராப் மற்றும் 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் கொண்டுள்ளது.
100-க்கும் அதிக வொர்க் அவுட் மோட்கள், 24x7 இதயத் துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டரிங், ரத்த அழுத்தத்தை மாணிட்டர் செய்யும் வசதி எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போல்ட் ஸ்டிரைக்கர் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ப்ளூடூத் 5.1 ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்.

ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட போல்ட் ஸ்டிரைக்கர் ஸ்மார்ட்வாட்ச் ஆனது வாய்ஸ் அசிஸ்டண்ட், பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் என ஏராளமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன் உள்ளிட்ட அசத்தலான வசதிகளை வழங்குகிறது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்.

போல்ட் ஸ்டிரைக்கர் ஸ்மார்ட்வாட்ச் விலை
அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை முழு சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என போல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த போல்ட் ஸ்டிரைக்கர் ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆனது கிரீம், புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. அதேபோல் அறிமுக சலுகையாக இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை ரூ.1499-விலையில் வாங்க முடியும்.
பிட்ரான் ஃபோர்ஸ் எக்ஸ்12என்
அதேபோல் சமீபத்தில் பலவிதமான ஆக்சஸெரீஸ்களை (Accessories) தயாரிப்பதற்கு பெயர்போன இந்திய பிராண்ட் ஆன பிட்ரான், அதம் ஃபோர்ஸ் ஸ்மார்ட்வாட்ச் (Force Smartwatch) சீரீஸின் கீழ் எக்ஸ்12என் (X12N0 என்கிற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. இளைய சமுதாயத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் விலையை மீறிய சில அம்சங்களை வழங்குகிறது.
பிட்ரான் ஃபோர்ஸ் எக்ஸ்12என் ஸ்மார்ட்வாட்ச்சின் அசல் விலை ரூ.1499 ஆகும். ஆனால் இது அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக வெறும் ரூ.1,199 க்கு வாங்க கிடைக்கும். பிட்ரானின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்வாட்ச் மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்: பிளேசிங் ப்ளூ (Blazing Blue), கோல்ட் பிளாக் (Gold Black), கார்பன் பிளாக் (Carbon Black) மற்றும் ஷாம்பெயின் பிங்க் (Champagne Pink); மற்றும் இந்த 4 கலர் ஆப்ஷன்களுமே இன்டர்சேன்ஜபிள் ஸ்டராப்ஸ் (Interchangeable straps) உடன் வருகின்றன.

பிட்ரான் ஃபோர்ஸ் எக்ஸ்12என் அம்சங்கள்
ஃபோர்ஸ் எக்ஸ்12என் மாடலானது அலாய் மெட்டல் கேஸிங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட கடினமான மற்றும் அதே சமயம் மிகவும் எடை குறைவான ஒரு ஸ்மார்ட்வாட்ச் ஆகும். இது சற்றே பெரிய, செவ்வக வடிவிலான 1.85-இன்ச் எச்டி டிஸ்பிளேவுடன் வருகிறது; மேலும் இதுவொரு ஃபுல்-டச் 2.5டி கர்வ்டு (Curved Display) டிஸ்பிளேவாகும்.
பிட்ரான் ஃபோர்ஸ் எக்ஸ்12என் ஸ்மார்ட்வாட்ச்சில் - ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart rate monitor), சுவாச பயிற்சிகள் (Breathing exercises), ஸ்லீப் ட்ராக்கர் (Sleep Tracker), எஸ்பிஓ2 மானிட்டர் (SPO2 Monitor) மற்றும் டெய்லி ஆக்டிவிட்டி மானிட்டர் என - உங்களுடைய உடல்நலன்களை கண்காணிக்கும் பலவகையான ட்ராக்கர்களும் உள்ளன. இந்த வாட்ச்சை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 5 நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப்பை (Battery Life) வழங்கும்.


Click it and Unblock the Notifications








