Home
Gadgets

10 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் தரமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்த போல்ட்.!

ஆடியோ சாதனங்களை தயாரிக்கும் நிறுவனமான போல்ட் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ரோவர்
என்று அழைக்கப்படும் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் தனித்துவமான அம்சங்களுடன் குறைந்த விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.3 இன்ச் HD AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளவிந்துள்ளது. மேலும் 360x360பிக்சல்ஸ், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்து. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

10 நாட்கள் பேட்டரி பேக்கப்: தரமான போல்ட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!

புதிய போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 150-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் வட்ட வடிவம் கொண்ட
டயர் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்வாட்ச். இதுதவிர கிளாசிக் ஸ்விட்ச் மற்றும் ஃப்ளிப் என இருவித ஸ்டைலிங்கில் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச் ஆனது இதய துடிப்பு சென்சார், SpO2, ஸ்லீப், மென்ஸ்டுரல் சைக்கில் டிராக் செய்வது போன்ற பல அதிகமான உடல்நல அம்சங்களை வழங்குகிறது. பின்பு 100-க்கு அதிகமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட் கொண்டுள்ளது இந்த ரோவர் ஸ்மார்ட்வாட்ச்.

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்வாட்ச் மாடலை முழு சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. மேலும் மியூசிக் பிளேபேக், வாய்ஸ் அசிஸ்டண்ஸ் மற்றும் போன் ஃபைண்டர் போன்ற அசத்தலான வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச்.

ஏற்கனவே கூறியபடி இந்த போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச் கிளாசிக் ஸ்விட்ச் மற்றும் ஃபிளிப் வெர்ஷன்களில் கிடைக்கிறது. பின்பு இதன் விலை ரூ.2,999-ஆக உள்ளது. குறிப்பாக போல்ட் ஆடியோ வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சில நாட்களுக்கு முன்பு பிட்ஷாட் நிறுவனம் இந்தியாவில் மகளிருக்கான தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஃபிட்ஷாட் ஃபிளேர் என்று அழைக்கப்படும் என்று புதிய ஸ்மார்ட்வாட்ச் அருமையான வடிவமைப்புடன் தரமான அம்சங்களை வழங்குகிறது என்றே கூறலாம். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஃபிட்ஷாட் ஃபிளேர் ஸ்மார்ட்வாட்ச் பிரீமியம் பாங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு 1.43-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச். பின்பு 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது புதிய ஃபிட்ஷாட் ஃபிளேர் ஸ்மார்ட்வாட்ச். அதேபோல் இததில் டேலைட் ஸ்கிரீன், 60-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த ஸ்மார்ட்வாட்ச் பெண்களுக்கு தேவையான வெல்னஸ் டிராக்கர் போன்றும் செயல்படுகிறது. மேலும் இதில் இதய துடிப்பு, உடல் வெப்பநிலை, SpO2, UV லைட், மென்ஸ்டுரேஷன் டிராக்கர் போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதிகள் அனைத்து மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இதுதவிர கால் ரிமைண்டர்கள், ஷெட்யுல் ரிமைண்டர்கள், அலாரம், நோட்டிபிகேஷன், ஆப் புஷ் ரிமைண்டர்கள் போன்ற பல அட்டகாசமான வசதிகளை கொண்டுள்ளது இந்த ஃபிட்ஷாட் ஃபிளேர் ஸ்மார்ட்வாட்ச். அதேபோல் பயனர்களுக்கு வழங்கும் அழைப்புகள் அல்லது குறுந்தகவல் போன்றவற்றிக்கு இதில் உள்ள குயிக் மெசேஜ் அம்சம் முதல் பதில் அளிக்க முடியும்.

ஃபிட்ஷாட் ஃபிளேர் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் மிகவும் சிறப்பான வசதி என்னவென்றால் அது பேட்டரி வசதிதான். அதாவது 300 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபிட்ஷாட் ஃபிளேர் ஸ்மார்ட்வாட்ச் மாடல் பின்க், புளூ மற்றும் கிரீன் ஆகிய நிறங்களில கிடைக்கிறது. பினபு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கு சிறப்பு சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்வாட்ச் மாடலை ரூ.1,999-விலையில் வாங்க முடியும். இதுதவிர ஃபிட்ஷாட் ஃபிளேர் ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கு ஒரு வருட வாரண்டியும் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Boult Rover with 10-day battery Launched in India: Specs, Features and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X