அட்ராசக்கை.. ரூ.1799 விலை.. தெறிக்கவிடும் BOULT இயர்பட்ஸ்.. 100 மணிநேர பிளேடைம்.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
போல்ட் (BOULT) நிறுவனம் தற்போது இந்தியாவில் மூன்று புதிய TWS இயர்பட்ஸ் (Earbuds) சாதனங்களை மஸ்டாங் (Mustang) சீரிஸ் என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. போல்ட் பிராண்ட், ஃபோர்ட் மஸ்டாங் (Ford Mustang) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்த புதிய இயர்பட்ஸ் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. போல்ட் மஸ்டாங் டார்க் (BOULT Mustang Torq), போல்ட் மஸ்டாங் டேஷ் (BOULT Mustang Dash), மற்றும் போல்ட் மஸ்டாங் டெர்பி (BOULT Mustang Derby) என்ற மூன்று மாடல்கள் மிகவும் மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது.
ஃபோர்ட் மஸ்டாங் என்ற பிரபலமான கார் மாடலை அடிப்படையாக வைத்து, இந்த புதிய போல்ட் மஸ்டாங் டார்க் (BOULT Mustang Torq), போல்ட் மஸ்டாங் டேஷ் (BOULT Mustang Dash), மற்றும் போல்ட் மஸ்டாங் டெர்பி (BOULT Mustang Derby) மூன்று இயர்பட்ஸ் மாடல்களும் உருவாக்கப்பட்டுள்ளது. இவை மிகவும் அட்டகாசமான வடிவமைப்புடன், 100 மணி நேரம் வரையிலான ஆடியோ பிளேநேரத்தை வழங்கும் திறனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

போல்ட் மஸ்டாங் டார்க் (BOULT Mustang Torq), டேஷ் (Dash), மற்றும் டெர்பி (Derby) இயர்பட்ஸ்:
இதில் போல்ட் மஸ்டாங் டார்க் (BOULT Mustang Torq) என்ற மாடல் மிகவும் வித்தியாசமான தோற்றத்தை பெறுகிறது. போல்ட் நிறுவனம் இந்த போல்ட் மஸ்டாங் டார்க் TWS இயர்பட்ஸ் (BOULT Mustang Torq TWS Earbuds) சாதனத்தை எல்இடி லைட் (LED light) சிங்கரனைசேஷன் அம்சத்துடன் வழங்கியுள்ளது. அதவாது, இந்த இயர்பட்ஸ் சாதனத்தை நீங்கள் பயன்படுத்தும் பொழுது உங்கள் கேமிங் சவுண்டிற்கு ஏற்றார் போல லைட்டிங்கை வழங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.
போல்ட் மஸ்டாங் டார்க் இயர்பட்ஸ், போல்ட் மஸ்டாங் டேஷ் (BOULT Mustang Dash), மற்றும் போல்ட் மஸ்டாங் டெர்பி (BOULT Mustang Derby) மூன்று இயர்பட்ஸ் மாடல்களும் 13mm பாஸ் டிரைவர்ஸ்களை (13mm Bass Drivers) பூம்எக்ஸ் டெக்னாலஜி (BoomX Technology) அம்சத்துடன் வழங்குகிறது. கேமிங் அனுபவத்தை சிறப்படைய செய்ய இவை அனைத்தும் 45ms அல்ட்ரா லோ-லேடன்சி (45ms ultra-low latency) அம்சத்தையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் போல்ட் மஸ்டாங் டார்க் இயர்பட்ஸ் (BOULT Mustang Torq Earbuds) சாதனம் 50 மணி நேரம் பிளேடைம் (50 hours playtime) நேரத்தை வழங்குகிறது. அதேபோல், போல்ட் மஸ்டாங் டேஷ் (BOULT Mustang Dash), மற்றும் போல்ட் மஸ்டாங் டெர்பி (BOULT Mustang Derby) ஆகிய இரண்டு மாடல்களும் 100 மணி நேர பிளேடைம் நேரத்தை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
100 மணி நேர பிளேடைம்.. போல்ட் மஸ்டாங் சீரிஸ் இயர்பட்ஸ் விலை என்ன? (BOULT Mustang Series Earbuds Price):
டெர்பி மற்றும் டேஷ் ஆகிய மாடல்கள் டூயல் டிவைஸ் பேரிங் அம்சத்தை வழங்குகிறது. இவை போல்ட் ஆம்ப் ஆப்ஸ் இன்டெக்ரேஷன் (BOULT amp app integration), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் சூப்பர் பாஸ்ட் இணைப்பிற்காக ப்ளிங்க் அண்ட் பேர் அம்சத்தையும் (Blink & Pair) பெறுகின்றன. இந்த இயர்பட்ஸ் மாடல்கள் ரேபிட் போல்ட் சார்ஜிங் (rapid Boult charging) அம்சத்தை வழங்குகிறது.
இது ஜென் குவாட் மைக் ENC டெக்னாலஜி உடன் வருகிறது. இவை IPX5 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்புடன் முழுமையான டச் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் ஆதரவுடன் வருகிறது. இந்த BOULT x Mustang Torq, Dash and Derby இயர்பட்ஸ் சாதனங்களை நிறுவனம் அறிமுகம் சலுகையாக வெறும் ரூ. 1,799 விலையில் விற்பனைக்கு அறிவித்துள்ளது. இதன் அசல் விலை ரூ. 5999 ஆகும்.


Click it and Unblock the Notifications