Home
Gadgets

சும்மா சுர்ருனு ஏறுது.. ரூ.1,299 போதும்.. QUAD மைக்.. சுப்ரீம் பேஸ்.. 60 ஹவர் பேக்கப்.. போல்ட் மஸ்டாங் மாடல்!

எதை வாங்குறதுனு தெரியலையேப்பா என்று மஸ்டாங் டிசைனில் பட்டையை கிளப்பும் ஆடியோ பீச்சர்களுடன் போல்ட் மஸ்டாங் டார்க் (BOULT Mustang Torq) மற்றும் போல்ட் மஸ்டாங் டைனோ (BOULT Mustang Dyno) டிடபுள்யூஎஸ் மாடல்கள் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கின்றன. குவாட் மைக், சுப்ரீம் பேஸ், 60 மணி நேர பேக்கப், லோவ் லேட்டன்சி மோட், ஆப் கனெக்டிவிட்டி, வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களை கொடுக்கும் இந்தடிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் மாடல்களின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

போல்ட் ஆடியோ (Boult Audio) நிறுவனமானது, போர்ட் மஸ்டாங் (Ford Mustang) நிறுவனத்துடன் கைகோர்த்து, மஸ்டாங் டார்க் மற்றும் போல்ட் மஸ்டாங் டைனோ டிசைனில் இயர்பட்களை களமிறக்கி இருக்கிறது. பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், மிட்-ரேஞ்ச் இயர்பட்களுக்கு நிகரான பீச்சர்களை பட்ஜெட் விலைக்கு கொடுத்துள்ளது. ஒவ்வொரு மாடலாக பார்ப்போம்.

சும்மா சுர்ருனு ஏறுது.. ரூ.1,299 போதும்.. QUAD மைக்.. சுப்ரீம் பேஸ்!

போல்ட் மஸ்டாங் டார்க் அம்சங்கள் (BOULT Mustang Torq Specifications): இந்த டார்க் மாடலில் 13 மிமீ டிரைவர்கள் கிடைக்கின்றன. இந்த டிரைவர்களில் பூம்எக்ஸ் டெக்னாலஜி (BoomX Technology) மற்றும் சுப்ரீம் பேஸ் (Supreme Bass) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, பேஸ் ஆடியோ பிரியர்களுக்கு பக்காவான மாடலாக இது இருக்கும். மோட் சிங்க் எல்இடி (Mode Sync LED) கிடைக்கிறது.

ஆகவே, சார்ஜிங் இன்டிகேட்டர் வருகிறது. போல்ட் ஏஎம்பி (Boult Amp) ஆப் கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ப்ளூடூத் வி5.4 (Bluetooth v5.4) கனெக்டிவிட்டி வருகிறது. இதில் ஏஏசி (AAC)மற்றும் எஸ்பிசி (SBC) ஆடியோ கோடக் சப்போர்ட் உள்ளது. எல்இடி இன்டிகேட்டரில் பிளிக் & பேர் தெரிந்து கொள்ளாம். போல்ட் ஏஎம்பி ஆப் மூலம் ஈகியூ (EQ) கன்ட்ரோல்கள் செய்யலாம்.

இந்த போல்ட் மஸ்டாங் டார்க் மாடலில் எண்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) சப்போர்ட் கொண்ட ஜென் குவாட் மைக் (Zen Quad Mic) கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கான 45ms லோவ் லேட்டன்சி (Low Latency) சப்போர்ட் கொண்ட கேமிங் காம்பாட் மோட் (Gaming Combat Mode) வருகிறது. டச் கன்ட்ரோல்கள் (Touch Controls) இருக்கின்றன.

ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (AI Voice Assistant) கிடைக்கிறது. IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. இந்த மாடலில் 60 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. ஆகவே, 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 நிமிடங்களுக்கு பிளே டைம் கிடைக்கும். இந்த போல்ட் மஸ்டாங் டார்க் மாடலில் எல்லோ (Yellow) மற்றும் கிரே (Grey) கலர்கள் கிடைக்கின்றன.

போல்ட் மஸ்டாங் டைனோ அம்சங்கள் (BOULT Mustang Dyno Specifications): இந்த டைனோ மாடலில் முந்தைய மாடலில் பார்த்த பெரும்பாலான பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆனால், டிசைனில் மாறுபடுகிறது. மெட்டாலிக் கிரே மற்றும் ரெட் ஸ்ட்ரிப் கலர் கிடைக்கிறது. பூம்எக்ஸ் டெக்னாலஜி மற்றும் சுப்ரீம் பேஸ் கொண்ட 13 மிமீ டிரைவர்கள் கிடைக்கின்றன.

45ms லோவ் லேட்டன்சி மோட், ப்ளூடூத் வி5.4 மற்றும் எஸ்பிசி, ஏஏசி கோடக் சப்போர்ட் கொடுக்கிறது. ஈஎன்சி சப்போர்ட் கொண்ட ஜென் குவாட் மைக் கிடைக்கிறது. 60 மணி நேர பிளேபேக் மற்றும் 10 நிமிட சார்ஜில் 120 நிமிட பிளேடைம் கொடுக்கிறது. டூயல் டிவைஸ் பேரிங், வாய்ஸ் அசிஸ்டன்ட் உள்ளது. IPX5 ரெசிஸ்டன்ட் மற்றும் ஏஎம்பி ஆப் சப்போர்ட் உள்ளது.

இரண்டு மாடல்களுக்கும் 1 வருட வாரண்டி கிடைக்கிறது. போல்ட் மஸ்டாங் டார்க் மாடலின் விலை ரூ.1,299ஆகவும், போல்ட் மஸ்டாங் டைனோ மாடலின் விலை ரூ.1,299ஆகவும் இருக்கிறது. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) போன்ற தளங்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இதுபோக போல்ட்ஆடியே தளத்திலும் இந்த மாடல்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
BOULT Mustang Torq and Dyno TWS Earbuds Launched Sale From Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X