ஆரம்பமே அதிருது.. 80 மணிநேர பிளேடைம்.. பிசுறு இல்லாத கிரிஸ்டல் ஆடியோ.. ரூ.999 விலையில் BOULT இயர்பட்ஸ்..
போல்ட் (BOULT) நிறுவனம் இந்தியாவில் புதிதாக இரண்டு TWS இயர்பட்ஸ் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இவை போல்ட் க்ளாரிட்டி 1 (BOULT Klarity 1) மற்றும் போல்ட் க்ளாரிட்டி 3 இயர்பட்ஸ் (BOULT Klarity 3 Earbuds) என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு இயர்பட்ஸ் மாடல்களும் போல்ட் நிறுவனத்தின் போல்ட் கிளாரிட்டி சீரிஸ் கீழ் வெளிவந்துள்ளது. இதில் ஒரு மாடல் மிகவும் மலிவு விலையான ரூ. 999 விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. மற்றொரு மாடல் விலை என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
புதிய போல்ட் க்ளாரிட்டி 1 இயர்பட்ஸ் (BOULT Klarity 1 Earbuds) மற்றும் போல்ட் க்ளாரிட்டி 3 இயர்பட்ஸ் (BOULT Klarity 3 Earbuds) ஆகிய இந்த இரண்டு மாடல்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டுள்ளன. இருப்பினும், போல்ட் க்ளாரிட்டி 3 இயர்பட்ஸ் சாதனம் பிரீமியம் தரத்தில் அடுத்த உயர்நிலை ஆடியோவை வழங்குகிறது. இந்த இரண்டு இயர்பட்ஸ்களும் 13mm BoomX டிரைவர்களுடன் வருகிறது.

போல்ட் க்ளாரிட்டி 1 (BOULT Klarity 1) மற்றும் போல்ட் க்ளாரிட்டி 3 இயர்பட்ஸ் (BOULT Klarity 3 Earbuds):
இதில் க்ளாரிட்டி 1 சாதனம் க்ளாரிட்டி சிக்னேச்சர் சவுண்ட் (Klarity Signature Sound) ஆதரவை பெறுகிறது. மறுபுறம், க்ளாரிட்டி 3 சாதனம் ஸ்பேசியல் ஆடியோ (Spatial Audio) ஆதரவை கொண்டுள்ளது. இரண்டு சாதனங்களும் ப்ளூடூத் v5.4 ஆதரவுடன் இயங்குகின்றன. க்ளாரிட்டி 1 டிவைஸ் SBC, AAC codec சப்போர்ட் ஆதரவை பெறுகிறது. இது ஹவர்கிளாஸ் வடிவமைப்பு டிஸைனை பெறுகிறது.
போல்ட் க்ளாரிட்டி 3 சாதனம் 50dB ஹைபிரிட் ஏஎன்சி (Hybrid ANC), 6 மைக் ஹெக்ஸ் இஎன்சி (6 Mic Hex ENC), மற்றும் விண்ட் நாய்ஸ் ரிடக்ஷன் (Wind Noise Reduction) போன்ற ஆதரவுகளை பெறுகிறது. இந்த இயர்பட்ஸ் சாதனம் பிளூடட் டிசைன் வடிவமைப்பை கொண்டுள்ளது. இது தவிர மற்ற அம்சங்கள் எல்லாமே இரண்டு இயர்பட்ஸ்களிலும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளது.
போல்ட் க்ளாரிட்டி 1 இயர்பட்ஸ் (BOULT Klarity 1 Earbuds) மற்றும் போல்ட் க்ளாரிட்டி 3 இயர்பட்ஸ் (BOULT Klarity 3 Earbuds) இரண்டும் ஜென் குவாட் மைக் ENC, 45ms அல்ட்ரா லோ-லேடன்சி, டச் கண்ட்ரோல், டூயல் டிவைஸ் பேரிங், ஆட்டோமேட்டிக் டிவைஸ் ஸ்விட்சிங், வாய்ஸ் அசிஸ்டன்ஸ், IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ஸ், போன்ற அம்சங்களை இந்த இரண்டு சாதனங்களும் ஒன்றாக பெற்றுள்ளன.
போல்ட் க்ளாரிட்டி 1 மற்றும் போல்ட் க்ளாரிட்டி 3 விலை என்ன (BOULT Klarity 1 and Klarity 3 Price):
இதில் போல்ட் க்ளாரிட்டி 1 இயர்பட்ஸ் (BOULT Klarity 1 Earbuds) சாதனம் 80 மணிநேர பிளேடைம் நேரத்தை வழங்குகிறது. இது லைட்டனிங் போல்ட் டைப்-சி சார்ஜிங் உடன் 10 நிமிட சார்ஜில் 180 நிமிட பிளேடைம் நேரத்தை வழங்குகிறது. அதேபோல், போல்ட் க்ளாரிட்டி 3 இயர்பட்ஸ் (BOULT Klarity 3 Earbuds) சாதனம் 50 மணிநேர பிளேடைம் நேரத்தை வழங்குகிறது.
இது 10 நிமிட சார்ஜில் 120 நிமிட பிளேடைம் நேரத்தை வழங்குகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், இது ரூ. 1,999 என்ற விலையுடன் விற்பனைக்கு வந்துள்ளது. போல்ட் க்ளாரிட்டி 1 இயர்பட்ஸ் (BOULT Klarity 1) சாதனம் ரூ. 999 என்ற விலையுடன் அக்வாமரைன் (Aquamarine), மிட்நைட் பிளாக் (Midnight Black), மற்றும் ஸ்கைலைன் (Skyline) நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
போல்ட் க்ளாரிட்டி 3 டிவைஸ் அபிசிடியன் பிளாக் (Obsidian Black) மற்றும் ஸ்மோக்கி மெட்டல் (Smoky Metal) நிறங்களில் வருகிறது. இந்த இரண்டு புதிய இயர்பட்ஸ் மாடல்களும் அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் இந்தியா வலைத்தளம் மற்றும் போல்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் வழியாக வாங்க கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது .


Click it and Unblock the Notifications








