Home
Gadgets

தம்பி தள்ளு.. Nothing Headphone 1-ஐ 3 மடங்கு கம்மி விலை.. புது Boult ஹெட்போன்ஸ்.. 70 மணிநேர பேட்டரி, ANC!

நத்திங் நிறுவனத்தின் முதல் ஹெட்போன்ஸ் ஆக நத்திங் ஹெட்போன் 1 (Nothing Headphone 1) மாடல் இந்தியாவில் அறிமுகமான வேகத்தில், அதற்கு "வேட்டு வைக்கும்" விலை மற்றும் அம்சங்களுடன் போல்ட் (Boult) நிறுவனத்தின் 2 புதிய இயர்போன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன

என்ன மாடல்கள்? போல்ட் நிறுவனம் அதன் போல்ட் ஃப்லுயிட்எக்ஸ் (Boult FluidX) மற்றும் போல்ட் ஃப்லுயிட்எக்ஸ் ப்ரோ (Boult FluidX Pro) என்கிற 2 புதிய ஓவர்-தி-இயர் ஹெட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இவ்விரு மாடல்களுமே நத்திங் ஹெட்போன் 1 மாடலை விட மிகவும் மலிவான விலை நிர்ணயத்தை கொண்டுள்ளன.

Nothing Headphone 1-ஐ 3 மடங்கு கம்மி விலை.. புது Boult ஹெட்போன்ஸ்!

என்ன விலை? அசல் விலையை பொறுத்தவரை போல்ட் ஃப்லுயிட்எக்ஸ் மற்றும் போல்ட் ஃப்லுயிட்எக்ஸ் ப்ரோ ஆகிய இரண்டும் முறையே ரூ.5,999 மற்றும் ரூ. 7,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் போல்ட் ஃப்லுயிட்எக்ஸ் மாடல் ரூ.2,299 க்கும், போல்ட் ஃப்லுயிட்எக்ஸ் ப்ரோ மாடல் மின்த்ராவில் ரூ.2,499 க்கும் வாங்க கிடைக்கிறது (இந்த ஆபர் விலை எப்போது வேண்டுமானாலும் அசல் விலைக்கு திரும்பலாம்)

மேலும் இந்த ஹெட்போன்கள் அமேசான் இந்தியா வழியாகவும் வாங்குவதற்கு கிடைக்கின்றன. போல்ட் ஃப்லுயிட்எக்ஸ் மாடல் ஆனது கருப்பு, பச்சை மற்றும் ஐவரி ஒயிட் ஆகிய 3 கலர்களில் விற்கப்படுகிறது. போல்ட் ஃப்லுயிட்எக்ஸ் ப்ரோ மாடல் ஆனது ரேவன் பிளாக் மற்றும் ஸ்கின் பீஜ் ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கிறது

குறிப்பிடத்தக்க வகையில் இந்தியாவில் நத்திங் ஹெட்போன் 1 மாடலின் விலை ரூ.21,990 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15 ஆம் தேதி நடக்கும் முதல் நாள் விற்பனையின் போது நத்திங் ஹெட்போன் 1 மாடல் ரூ. 19,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போல்ட் ஃப்லுயிட்எக்ஸ் மற்றும் போல்ட் ஃப்லுயிட்எக்ஸ் ப்ரோ முக்கிய அம்சங்கள்:
- 40mm பாஸ்-பூடட் டிரைவர்ஸ் (40mm bass-booted drivers)
- நீர் எதிர்ப்பிற்கான ஐபிஎக்ஸ்5 ரேட்டிங் (IPX5-rating)
- ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் (ANC)
- என்விராய்ன்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (ENC)

- போல்ட் ஃப்லுயிட்எக்ஸ் மாடலில் 60 மணிநேரம் வரை பேட்டரி லைஃப் (Up to 60 Hours Battery Life)
- போல்ட் ஃப்லுயிட்எக்ஸ் ப்ரோ மாடலில் 70 மணிநேரம் வரை பேட்டரி லைஃப் (Up to 70 Hours Battery Life)
- இரண்டுமே பாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) திறன்களை கொண்டுள்ளன

போல்ட் ஃப்லுயிட்எக்ஸ் மற்றும் போல்ட் ஃப்லுயிட்எக்ஸ் ப்ரோ மாடல்களின் மற்ற அம்சங்கள்: இரண்டுமே ரொடேட்டா ஆகக்கூடிய வட்டமான மூலைகளை கொண்ட, பேடட் செய்யப்பட்ட மற்றும் மடிக்கக்கூடிய ஹெட்பேண்டுகளுடன் கூடிய ஓவர்-இயர் டிசைனை பெற்றுள்ளன.

இந்த ஹெட்போன்கள் பூம்எக்ஸ் (BoomX) தொழில்நுட்ப ஆதரவு உடனான 40மிமீ பாஸ்-பூஸ்ட் டிரைவர்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. இது ஆடியோ டெப்த் மற்றும் டைனமிக் பாஸை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் தெளிவான கால்களுக்கு இதில் ஏஎன்சி (ANC) மற்றும் இஎன்சி (ENC) அம்சங்களும் உள்ளன.

இந்த ஹெட்போன்கள் இரண்டும் பிரத்யேக காம்பாட் கேமிங் மோட் உடன் வருகின்றன. இது குறைக்கப்பட்ட ஆடியோ-விஷுவல் லேக்கிற்கு 60ms வரையிலான லோ லேடன்சியை ஆதரிக்கிறது. இவ்விரு ஹெட்போன்களுமே ப்ளூடூத் 5.4 மற்றும் Blink & Pair கனெக்டிவிட்டியை ஆதரிக்கின்றன. கூடவே டச் கண்ட்ரோல்கள் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவையும் வழங்குகின்றன.

போல்ட் ஃப்லுயிட்எக்ஸ் ப்ரோ ஹெட்போன்ஸ் ஆனது (ஏஎன்சி இல்லாமல்) ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 மணிநேர பேட்டரி லைஃப்பை வழங்குவதாக கூறப்படுகிறது. இதே நிலைமைகளின் கீழ் போல்ட் ஃப்லுயிட்எக்ஸ் மாடல் ஆனது 60 மணிநேரம் வரை பிளேபேக்கை வழங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் போல்ட் நிறுவனத்தின் கூற்றுப்படி, ப்ரோ மாடலில் 10 நிமிட விரைவான சார்ஜிங்கின் கீழ் ஐந்து மணிநேர பயன்பாட்டை வழங்குகிறது/ அதே நேரத்தில் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆனது அதே 10 நிமிட விரைவான சார்ஜிங்கின் கீழ் மூன்று மணிநேர பிளேபேக்கை வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Boult FluidX and FluidX Pro Headphones With ANC 70 Hours Battery Launched in India Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X