போட்றா ஆளுக்கொன்னு.. ரூ.1,099 போதும்.. வாய்ஸ் அசிஸ்டன்ட்.. ப்ளூடூத் காலிங்.. வாட்டர் ரெசிஸ்டன்ட்.. எந்த மாடல்?
பட்ஜெட்டை பார்த்தால் ஆளுக்கொரு ஆர்டர் போடலாம் போலயே என்று தோன்ற வைக்கும்படி ரூ.1,099 விலையில் வாய்ஸ் அசிஸ்டன்ட், ப்ளூடூத் காலிங், வாட்டர் ரெசிஸ்டன்ட், ஹெல்த் மானிட்டர், ஆக்டிவிட்டி டிராக்கர், கிளவுட் பேஸ்டு வாட்ச் பேஸ்கள் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் போன்ற எக்கச்சக்க பீச்சர்களுடன் போல்ட் டிரிஃப்ட் மேக்ஸ் (Boult Drift Max) ஸ்மார்ட்வாட்ச் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த போல்ட் டிரிஃப்ட் மேக்ஸ் மாடலின் முழு பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
போல்ட் டிரிஃப்ட் மேக்ஸ் அம்சங்கள் (Boult Drift Max Specifications): இந்த போல்ட் மாடலில் 2.01 இன்ச் (240 x 260 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டி (HD) ரெசொலூஷன் மற்றும் 350 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ப்ளூடூத் 5.2 (Bluethooth 5.2) கனெக்டிவிட்டி மற்றும் ப்ளூடூக் காலிங் (Bluethooth Calling) சப்போர்ட் கிடைக்கிறது.

ஆகவே, பாடியில் மைக் (Mic) மற்றும் ஸ்பீக்கர்கள் (Speakers) கிடைக்கிறது. ஒன் கிளிக் கனெட்விட்டி, கான்டாக்ட்ஸ் (Contacts) மற்றும் டயல் கீபாட் (Dial Keypad) சப்போர்ட் உள்ளது. ஆகவே, ஸ்மார்ட்போனை போலவே கால்களை செய்து கொள்ளலாம். போல்ட் ஹெல்த் சூட் சப்போர்ட் கிடைக்கிறது. இதில் டிராக்கர்கள் மற்றும் மானிட்டர்கள் கிடைக்கின்றன.
ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ஸ்ட்ரெஸ் மானிட்டர் (Stress Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SPO2 Monitor), ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor) கிடைக்கிறது. மேலும், வாட்டர் ரீமைண்டர் (Water Reminder), மென்சுரல் டிராக்கர் (Mensural Tracker), கலோரி டிராக்கர் (Calorie Tracker) மற்றும் பிளட் பிரசர் (Blood Pressure) சப்போர் கிடைக்கிறது. டஸ்ட் ப்ரூப் கிடைக்கிறது.
IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water Resistant) பேக் செய்துள்ளது. சின்க் நோட்டிபிகேஷன் (Sync Notifications) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, பேஸ்புக், வாட்ஸ்அப், ஈமெயில், மெசேஜ் போன்ற ஆப்களின் நோட்டிபிகேஷன்களை தெரிந்து கொள்ளலாம். கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் உள்ளது. ஆகவே, ரீமைண்டர்கள், டச்-லெஸ் கன்ட்ரோல் கிடைக்கிறது.
ரன்னிங், வாக்கிங், ஜாக்கிங், டிரக்கிங் போன்ற 120+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) கிடைக்கின்றன. இதுபோக யோகா, பேட்மிட்டன், கிரிக்கெட் போன்றவையும் இருக்கின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் சிலிகான் ஸ்ட்ராப் வேரியண்ட்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஃபைண்ட் மை போன் (Find My Phone) சப்போர்ட் உள்ளது.
ரிமோட் கேமரா (Remote Camera), ஃபிளாஷ் லைட் (Flash Light), வெதர் அப்டேட் (Weather Update), வேர்ல்டு கிளாக் (World Clock) போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. சில்வர் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Silver Stainless Steel), ஜேட் பிளாக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Jet Black Stainless Steel) மற்றும் பிளாக் சிலிகான் ஸ்ட்ராப் (Black Silicon Strap) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
போல்ட் டிரிஃப்ட் மேக்ஸ் விலை (Boult Drift Max Price): இந்த போல்ட் மாடலின் சிலிகான் ஸ்ட்ராப் வேரியண்ட்டின் விலை ரூ.1,099ஆக இருக்கிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்ட்ராப் வேரியண்ட்டின் விலை ரூ.1,199ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) போன்ற தளங்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. பட்ஜெட்டில் பக்கா ஆப்ஷனாகும்.


Click it and Unblock the Notifications








