Home
Gadgets

சும்மா கிழி.. வெறும் ரூ.1,299க்கு கேமிங் மோட்.. டச் கன்ட்ரோல்.. 100H பேட்டரி.. ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

இசை பிரியர்களை தட்டித் தூக்கும் வகையில் அறிமுக சலுகை காரணமாக மிகவும் கம்மியான விலைக்கு போல்ட் கர்வ் பட்ஸ் ப்ரோ (BOULT Curve Buds Pro) இயர்பட்ஸ் மற்றும் போல்ட் கர்வ் மேக்ஸ் (BOULT Curve Max) நெக்பேண்ட் விற்பனைக்கு வந்துள்ளன.

போல்ட் கர்வ் பட்ஸ் ப்ரோ அம்சங்கள் (BOULT Curve Buds Pro Specifications): இந்த இயர்பட்ஸ் 10மிமீ பூம்எக்ஸ் (BoomX) டிரைவர்கள் கொண்டுள்ளது. எஸ்பிசி மற்றும் ஏஏசி கோடெக் சப்போர்ட் (AAC Codec Support) கொண்டிருக்கிறது. ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்விட்டி வருகிறது. கேமிங் பிரியர்களுக்கான காம்பேட் கேமிங் மோட் (Combat Gaming Mode) வருகிறது.

வெறும் ரூ.1,299க்கு கேமிங் மோட்.. ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

அதோடு 40எம்எஸ் லோவ் லேட்டன்சி கொடுக்கப்பட்டுள்ளது. கிரிஸ்டல் கிளியர் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட்டுக்காக ஜென் குவாட் மைக் (Zen Quad Mic) கொடுக்கப்பட்டுள்ளது. என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) சப்போர்ட் உள்ளது. அதேபோல டச் கன்ட்ரோல் (Touch Controls) வருகிறது. பிளிங் மற்றும் பேர் (Blink & Pair) கொண்டுள்ளது.

ஹை-பை (Hifi), ராக் (Rock) மற்றும் பேஸ் பூஸ்ட் (Bass Boost) ஆகிய மூன்று ஈகியூ மோட்ஸ் (EQ Modes) வருகின்றன. இந்த போல்ட் கர்வ் பட்ஸ் ப்ரோ ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்டுள்ளது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 100 மணி நேரம் பிளேபேக் டைம் கொடுக்கக்கூடியது. அதேபோல வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 130 நிமிடங்கள் பிளேடைம் கொடுக்கும்.

இந்த போல்ட் கர்வ் பட்ஸ் ப்ரோ IPX5 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்ஸ் நாட்டிகல் பிளாக் (Nautical Black), ஒயிட் வேவ் (White Wave) மற்றும் பீச் ரோஸ் (Beach Rose) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த இயர்பட்ஸ் விலை ரூ.1,799ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

இருப்பினும், அறிமுக சலுகையாக வெறும் ரூ.1,299க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த இயர்பட்ஸ் அமேசான் (Amazon) மற்றும் போல்ட்ஆடியோ.காம் (boultaudio.com) ஆகிய தளங்களில் கிடைக்கும். மலிவான விலையில் பிரம்மாண்ட பேட்டரி பேக்கப், நாய்ஸ் கேன்சலேஷன், டச் கன்ட்ரோல் போன்ற அம்சங்கள் வேண்டுமானால், இந்த போல்ட் கர்வ் பட்ஸ் ப்ரோ நல்ல தேர்வாக இருக்கும்.

போல்ட் கர்வ் மேக்ஸ் நெக்பேண்ட் அம்சங்கள் (BOULT Curve Max Neckband Specifications): இதுவொரு நெக்பேண்ட் மாடலாகும். இந்த நெக்பேண்ட்டில் 13மிமீ பூம்எஸ்க் டிரைவர்கள் வருகின்றன. ப்ளூடூத் வி5.3 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இந்த போல்ட் கர்வ் மேக்ஸ் நெக்பேண்ட்டிலும் 50எம்எஸ் லோவ் லேட்டன்சி கொண்ட காம்பேட் கேமிங் மோட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு ஈஎன்சி டெக்னாலஜி (ENC Technology) மற்றும் ஜென் மோட் (ZEN Mode) கொண்டிருக்கிறது. இது வயர்டு மாடல் என்பதால் இன்-லைன் கன்ட்ரோல் (In-line Control) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நெக்பேண்ட்டில் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது. ஒரு ஃபுல் சார்ஜில் தொடர்ந்து 100 மணி நேரம் பிளே டைம் கொடுக்கும்.

அதேபோல 10 நிமிட லைட்னிங் சார்ஜில் 24 மணி நேரம் பிளேடைம் கொடுக்கக்கூடியது. இதற்கு IPX5 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த நெக்பேண்ட் பிளாக் (Black மற்றும் ப்ளூ (Blue) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை ரூ.1,299ஆக நிர்யணம் செய்யப்பட்டிருந்த நிலையில், அறிமுக சலுகையில் ரூ.999க்கு கிடைக்கிறது. இதையும் அமேசான் மற்றும் போல்ட் தளங்களில் ஆர்டர் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BOULT Curve Buds Pro Curve Max Neckband Sale on Amazon in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X