Home
Gadgets

2000 ரூபாய்க்கு டேஷ் கேமராவா? 360 டிகிரியும் பாதுகாப்பு.. கட்டாயம் உங்க காருக்கு வாங்கி போடுங்க.. எந்த மாடல்?

சமீபத்தில் புனேவில் நடைபெற போர்ஷே கார் விபத்திற்கு பிறகு, இந்தியா முழுவதிலும் டேஷ் கேம் (Dash Cam) பயன்பாடு அதிகரிக்க துவங்கியுள்ளது. கார் (Car), வேன் (Van), லாரி (Lorry) போன்ற நான்கு சக்கர வாகனங்கள் அனைத்திற்கும் டேஷ் கேமரா (Dash camera) ஒரு கூடுதல் பாதுகாப்பு கருவியாக வேலை செய்கிறது. டேஷ் கேமரா பொறுத்தப்படுவதினால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. இப்போது இந்தியாவில் வெறும் 2000 ரூபாய் விலை பிரிவில் ஒரு அட்டகாசமான டேஷ் கேமரா சாதனத்தை போல்ட் (Boult) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அது பற்றிய விபரங்கள் இதோ.

டேஷ் கேமரா சாதனம் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள். ஆனால், ஒரு டேஷ் கேமரா மூலம் வாகன ஒட்டினர் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை முதலில் தெளிவாக பார்த்துவிட்டு பதிவிற்குள் செல்லலாம். உங்கள் கார் அல்லது நான்கு சக்கர வாகனத்தில் டேஷ் கேம் பொருத்தப்பட்டிருந்தது என்றால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

2000 ரூபாய்க்கு டேஷ் கேமராவா? 360 டிகிரியும் பாதுகாப்பு..

கட்டாயம் உங்க காருக்கு வாங்கி போடுங்க.. 360 டிகிரியும் பாதுகாப்பு ஏன் அவசியம்?

- விபத்துச் சாட்சியங்களை நேரடியாகப் பிடிக்க உதவுகிறது.
- பெற்றோர்கள் முதல் முறை ஓட்டுனர்களை கண்காணிக்க அனுமதிக்கிறது.
- காப்பீட்டு நிறுவனங்களுக்கு டாஷ் கேம் காட்சிகளை சமர்ப்பிக்க உதவுகிறது.
- பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் காவல்துறையுடன் டேஷ் கேம் வீடியோக்களைப் பகிர உதவுகிறது.
- இயற்கை காட்சிகள் அல்லது சாலை பயணங்களை ஆவணப்படுத்த பயன்படுகிறது.
- நிறுத்தப்பட்ட வாகனத்தின் சுற்றுப்புறங்களை பதிவு செய்து பாதுகாப்பை வழங்குகிறது.
- திருட்டு பயத்தில் இருந்து பாதுகாக்கிறது.

இதுவரை டேஷ் கேமராக்கள் விலை உயர்ந்த சாதனமாக இருந்து வந்தது. ஆனால், இனி அப்படி இருக்க போவதில்லை. போல்ட் (BOULT) நிறுவனம் புதிதாக போல்ட் க்ரூயிஸ்கேம் X1 (BOULT CruiseCam X1) மற்றும் போல்ட் க்ரூயிஸ்கேம் X1 ஜிபிஎஸ் டேஷ் கேமரா (BOULT CruiseCam X1 GPS Dash Camera) என்ற இரண்டு மாடல்களை மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது.

இது 2MP சென்சார் உடன் 1080p முழு எச்டி (Full HD) ரெசொலூஷன் ஆதரவை கொண்டுள்ளது. இது 170° வைடு ஆங்கிள் லென்ஸ் உடன் பிளைண்ட் ஸ்பாட் இல்லாத பாதுகாப்புடன் வருகிறது. இரண்டு டேஷ் கேமெராவிலும் இந்த அம்சங்கள் கிடைக்கிறது. X1 ஜிபிஎஸ் மாடல் GPS லொக்கேஷன் ட்ராக்கிங் (Location tracking) மற்றும் காரின் வேகம் (Car speed) போன்ற தகவலை ரெக்கார்ட் செய்கிறது.

போல்ட் க்ரூயிஸ்கேம் X1 (BOULT CruiseCam X1) மற்றும் போல்ட் க்ரூயிஸ்கேம் X1 ஜிபிஎஸ் டேஷ் கேமரா (BOULT CruiseCam X1 GPS Dash Camera):

இந்த டேஷ் கேமரா சாதனங்கள் போல்ட் ஆப்ஸ் (BOULT app) அம்சத்துடன் வருகிறது. இதில் ஜிபிஎஸ் இன்டெக்ரேஷன் (GPS integration), வீடியோ கேலரி (organized video galleries), வைஃபை டைரக்ட் ஸ்ட்ரீமிங் (Wi-Fi direct streaming), விரும்பிய நேரத்தில் மேனுவல் ரெக்கார்டிங் (Mannual ரெகார்டிங்) போன்ற பல அம்சங்களை ஆதரிக்க இந்த ஆப்ஸ் அனுமதி தருகிறது. இந்த குறைந்த விலை டேஷ் கேமராவில் பிரீமியம் அம்சம் ஒன்று இருக்கிறது.

அது தான், கோலிஷன் டிடெக்ஷன் (Collision Detection) அம்சம். இந்த டிவைஸில் உள்ள G சென்சார் ஏதேனும் இடித்தல் அல்லது விபத்திற்கான அறிகுறிகளை அதிர்வின் மூலம் உணர்ந்தால், உடனே எமெர்ஜென்சி வீடியோ ரெக்கார்டிங் (emergency video recording) அம்சத்தை ஆன் செய்து விடுகிறது. இந்த டேஷ் கேமராவில் சூப்பர் கெப்பாசிட்டர்கள் (supercapacitor) வழங்கப்பட்டுள்ளது. இது வழக்கமான லித்தியம் பேட்டரிகளை (lithium battery) விட அதிக வெப்பத்தை தாங்கக்கூடியது.

இந்த இரண்டு போல்ட் க்ரூயிஸ்கேம் X1 சீரிஸ் கேமராக்களும் 360° ரொட்டேஷனை ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், BOULT CruiseCam X1 கேமரா ரூ. 2,999 என்ற விலையிலும், BOULT CruiseCam X1 GPS Dash Camera மாடல் விலை ரூ. 3,999 என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது. இவை அமேசான், பிளிப்கார்ட் மற்றும் www.BOULTaudio.com. வழியாக வாங்க கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
BOULT CruiseCam X1 and BOULT X1 GPS Dash Camera For Cars Launched Under Rs 2999 and Rs 3999 In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X