கின்னு.. கின்னுன்னு.. வெறும் ரூ.14999 போதும்.. 500W ஆடியோ.. டால்பி டிஜிட்டல்.. சப்வூப்பர் சவுண்ட்.. எந்த பார்?
கம்மியான பட்ஜெட்டில் வீடே அதிரும்படி 500W ஆடியோ அவுட்புட், டால்பி டிஜிட்டல் பிளஸ், பூம்எக்ஸ் டைனாமிக் டிரைவர்கள், 5.1 சேனல் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், ரியர் சாட்டிலைட்களுடன் போல்ட் (BOULT) நிறுவனத்தின் பேஸ்பாக்ஸ் எக்ஸ்500 (Bassbox X500) சவுண்ட்பார் இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் ரிமோட் கன்ட்ரோல், இன்டிகிரேடெட் கன்ட்ரோல் பேனல் போன்ற மற்ற பீச்சர்களிலும் பின்னிப்பெடல் எடுத்துள்ள இந்த பேஸ்பாக்ஸ் எக்ஸ்500 மாடலின் முழு பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த பேஸ்பாக்ஸ் எக்ஸ்500 மாடல் மட்டுமல்லாமல், அதைவிட கம்மியான பட்ஜெட்டில் பேஸ்பாக்ஸ் எக்ஸ்60 (Bassbox X60) மற்றும் பேஸ்பாக்ஸ் எக்ஸ்250 (Bassbox X250) ஆகிய 2 மாடல்களையும் போல்ட் நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. அடிமட்ட விலைக்கு மிட்-ரேஞ்ச் ஆடியோ கொடுக்கும்படி இந்த மூன்று மாடல்களின் பீச்சர்கள் இருக்கின்றன. முதலில் எக்ஸ்500 மாடலை பார்ப்போம்.

பேஸ்பாக்ஸ் எக்ஸ்500 அம்சங்கள் (Bassbox X500 Specifications): இந்த போல்ட் மாடலில் 500W ஆடியோ அவுட் கிடைக்கிறது. பூம்எக்ஸ் டைனாமிக் டிரைவர்கள் (BoomX Dynamic Drivers) வருகின்றன. டால்பி டிஜிட்டல் சவுண்ட் (Dolby Digital Sound) சப்போர்ட் வருகிறது. அதேபோல டிஜிட்டல் சிக்னல் ப்ராஸசிங் (Digital Signal Processing) வருவதால், ஆடியோ அவுட்புட் பக்கா பிரீமியமாக இருக்கும்.
இந்த சவுண்ட் பார் மட்டுமல்லாமல், கூடவே சப்வூப்பர் (Subwoofer) மற்றும் 2 ரியல் சாட்டிலைட் (Rear Satellites) ஸ்பீக்கர்கள் வருகின்றன. 5.1 சேனல் ஆடியோ அவுட்புட் (Audio Output) கொண்டிருக்கிறது. மூவி (Movie), மியூசிக் (Music), நியூஸ் (News) போன்ற ஈகியூ மோட்கள் (EQ Modes) வருகின்றன. மொபைல், லேப்டாப், டேப்லெட் போன்ற அனைத்து ப்ளூடூத் டிவைஸ் கனெட்டிவிட்டி வருகிறது.
ஆகவே, ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3), ஏயுஎக்ஸ் (AUX), யுஎஸ்பி (USB), ஆப்டிகல் அவுட் (Optical Out) மற்றும் எச்டிஎம்ஐ (HDMI) கனெக்டிவிட்டியும் வருகிறது. மாஸ்டர் ரிமோட் கன்ட்ரோல் (Master Remote Control) வருகிறது. இதுபோக இன்டிகிரேடெட் கன்ட்ரோல் பேனல் (Integrated Control Panel) சப்போர்ட் வருகிறது. வால் மவுண்ட் (Wall Mount), டேபிள் டாப் (Tabletop) டிசைன் கொண்டிருக்கிறது.

பேஸ்பாக்ஸ் எக்ஸ்60 அம்சங்கள் (Bassbox X60 Specifications): இந்த சவுண்ட்பாரில் 60W ஆடியோ அவுட் வருகிறது. பூம்எக்ஸ் டைனாமிக் டிரைவர்கள் உள்ளது. 2.1 சேனல் ஆடியோ வருகிறது. ஈகியூ மோட்கள், ப்ளூடூத் டிவைஸ் கனெக்டிவிட்டி உள்ளது. முந்தைய மாடலை போலவே, ரிமோட் மற்றும் கன்ட்ரோல் பேனல் வருகிறது. வால்மவுண்ட் டிசைன் கொண்டிருக்கிறது.
பேஸ்பாக்ஸ் எக்ஸ்250 அம்சங்கள் (Bassbox X250 Specifications): இந்த மாடலில் பூம்எக்ஸ் டூயல் டைனாமிக் டிரைவர்கள் வருகின்றன. 250W ஆடியோ அவுட்புட் கொண்டிருக்கிறது. டால்பி டிஜிட்டல் சவுண்ட் மற்றும் டிஎஸ்பி சப்போர்ட் வருகிறது. முந்தைய மாடல்களை போலவே சப்வூப்பர் வருகிறது. 2.1 சேனல் ஆடியோ அவுட்புட் வருகிறது. ஈகியூ மோட்கள் உள்ளன.
இந்த பேஸ்பாக்ஸ் எக்ஸ்250 ப்ளூடூத் வி5.3, ஏயுஎக்ஸ், யுஎஸ்பி, ஆப்டிகல் மற்றும் எச்டிஎம்ஐ கனெக்டிவிட்டி வருகிறது. இந்த சவுண்ட்பார் மாடலிலும் மாஸ்டர் ரிமோட் கன்ட்ரோல் மற்றும் கன்ட்ரோல் பேனல் வருகிறது. அதேபோல வால்மவுண்ட் மற்றும் டேபிள் டாப் டிசைன் கொண்டிருக்கிறது. இதுவொரு வயர்டு சப்வூப்பர் மாடலாகும்.
இந்த சவுண்ட்பார்களின் விலையை பார்க்கையில், பேஸ்பாக்ஸ் எக்ஸ்500 மாடலின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. அதேபோல பேஸ்பாக்ஸ் எக்ஸ்60 மாடலின் விலை ரூ.2,999ஆகவும், பேஸ்பாக்ஸ் எக்ஸ்250 மாடலின் விலை ரூ.9,999ஆகவும் இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் போல்ட் தளங்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications