போல்ட் அறிமுகம் செய்யும் அசத்தலான இயர்போன் மாடல்.!
போல்ட் நிறுவனத்தின் புதிய ஆடியோ விலைப் பொறுத்தவரை ரூ.672-ஆக உள்ளது, ஆனால் மிந்த்ரா வலைதளத்தில் மட்டும் ரூ.530 விலையில் இந்த இயர்போன் மாடலை வாங்கிட முடியும்.
தற்சமயம் பிரபல போல்ட் நிறுவனம் அசத்தலான இயர்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த இயர்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போல்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய வயர்டு இயர்போன்கள் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது, மேலும் இந்த இயர்போனில் ஆங்கில்டு இயர் டிப்கள் மற்றும் பிரத்யேக இயர் லூப் ஃபாஸ்ட்னர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. மேலும் கேபிள்களை கொண்டிருக்கும் இந்த இயர்போனின் ஸ்டேபிலைசர் சீரான ஆடியோ தரத்தை வழங்கும் தன்மை கொண்டுள்ளது.

ஹை-ரிகிடிட்டி ஏ.எல்
இந்த இயர்போன் சாதனத்தில்; உள்ள ஹை-ரிகிடிட்டி ஏ.எல் அலாய் ஹவுசிங்கள் தொடர் பயன்பாடுகளிலும் சிறப்பாக அனுபவத்தை வழங்கும் தன்மை கொண்டவையாக உள்ளது. மேலும் இதன் சிலிகான் டிரான்ஸ்லூசென்ட் இயர் ஃபாஸ்ட்னர் காதுகளில் கச்சிதமாக பொருத்திக் கொண்டு அடிக்கடி கீழே விழாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பில்ட்-இன் கன்டெசர்
குறிப்பாக இந்த சாதனத்தில் 3எம்எம் கனெக்டர் வழங்கப்பட்டு இருப்பதோடு உயர் ரக அழைப்புகள் மற்றும் வாய்ஸ் கமான்ட் செய்ய ஏதுவாக இயர்போனில் பில்ட்-இன் கன்டெசர் மைக்ரோபோன் பொறுத்தப்பட்டுள்ளது.

மைக்ரோ ஊஃபர்கள்
உயர்-ரக கேபிள், 3டி சவுண்ட் மற்றும் மேம்பட்ட ஆடிட்டரி அனுபவம் வழங்க 3டி அகௌஸ்டிக்ஸ் அம்சங்கள் வெளிவந்துள்ளது.குறிப்பாக பில்ட்-இன் மைக்ரோ ஊஃபர்கள் - இயர்போனின் ஆடியோ தரம் மற்றும் ஒலியை சிறப்பாக வழங்குகிறது.

விலை:
போல்ட் நிறுவனத்தின் புதிய ஆடியோ விலைப் பொறுத்தவரை ரூ.672-ஆக உள்ளது, ஆனால் மிந்த்ரா வலைதளத்தில் மட்டும் ரூ.530 விலையில் இந்த இயர்போன் மாடலை வாங்கிட முடியும்.


Click it and Unblock the Notifications