டச் அம்சத்துடன் குறைந்த விலையில் போல்ட் ஆடியோ 'ட்ரூபட்ஸ்'! விலை என்ன தெரியுமா?
குறைந்த விலையில் சிறப்பான ட்ரூலி இயர்பட்ஸ் வாங்கத் திட்டமிடும் நபரா நீங்கள்? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான், குறைந்த விலையில் சிறந்த பொருளை வாங்குவது தான் அனைவரின் நோக்கமாக இருக்கிறது. இதை நன்கு உணர்ந்த போல்ட் ஆடியோ நிறுவனம் தற்பொழுது குறைந்த விலையில் ஒரு சிறப்பான ட்ரூலி இயர்பட்ஸ் சாதனத்தை விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது.

போல்ட் ஆடியோ நிறுவனம் சமீபத்திய தனது புதிய அறிமுகமாக 'ட்ரூபட்ஸ்'என்ற ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய போல்ட் ஆடியோ ட்ரூபட்ஸ் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் என இரண்டு தளங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது.

இந்த புதிய போல்ட் ஆடியோ ட்ரூபட்ஸ், சமீபத்திய டச் கண்ட்ரோல் அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இது பயனர்களுக்கு அழைப்புகளைப் பதிலளிக்கவும், பாடல்களை மாற்றவும், கூகிள் அசிஸ்டன்ட் உதவியை இயக்கவும் டச் அனுமதியை வழங்குகிறது. நீங்கள் கேட்கும் பாடலின் ஒலியை அதிகரிக்க 3 விநாடிகளுக்கு நீண்ட நேரம் பட்ஸை லாங் ப்ரெஸ் செய்து அழுத்த வேண்டும்.

இந்த சாதனம் புளூடூத் 5.0 இணக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 10 மீட்டர் தூரம் வரை, பயனரால் லேக்-ஃப்ரீ ஆடியோவை இயக்க இயலும். அதேபோல், இந்த புதிய போல்ட் ஆடியோ ட்ரூபட்ஸ் 6 மிமீ டிரைவர்களால் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் எச்டி பாஸுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த விலையில் இப்படிப் பல அம்சங்களுடன் வாங்கக் கிடைக்கும் ஒரு மிரட்டல் சாதனம் இது என்பதில் சந்தேகமில்லை.

இந்த போல்ட் ஆடியோ ட்ரூபட்ஸ் சாதனம் மிகக் குறைந்த அளவு கொண்ட லோ-லேட்டன்சியுடன் வருகிறது. மொத்தமாக 24 மணிநேர பிளே டைமுடன் 8 மணிநேர ஒற்றை பிளேபேக்கை சார்ஜிங் கேஸுடன் இந்த ட்ரூபட்ஸ் வருகிறது. கேமர்களுக்கு இந்த சாதனம் சிறப்பான பயனை வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ட்ரூபட்ஸ் சாதனம் டூயல் வண்ணத்துடன் வருகிறது, உங்கள் விருப்பப்படி அதை மாற்றிக்கொள்ளலாம்.

புத்தி போல்ட் ஆடியோ ட்ரூபட்ஸ் சாதனம் IPX7 வாட்டர் ப்ரூப் சான்றிதழுடன் வருகிறது என்பது கூடுதல் நன்மையாகப் பார்க்கப்படுகிறது. இந்த புதிய போல்ட் ஆடியோ ட்ரூபட்ஸ் இந்தியச் சந்தையில் வெறும் ரூ.2,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த ட்ரூபட்ஸ் ரெட் பிளாக் மற்றும் க்ரெய் பிளாக் என இரண்டு நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications