போல்ட் வயர்லெஸ் ஹெட்போன் விலை மற்றும் விபரக்குறிப்பு.!
போல்ட் ஆடியோ நிறுவனம் இந்தியா சந்தையில் தனது புதிய வயர்லெஸ் ஹெட்போன் ஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் ஹெட்பேன்ட் மற்றும் இயர்கப்கள் ஸ்வெட்-ப்ரூஃப் செய்யப்பட்டு ப்ரோட்டீன் லெதர் மூலம் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஹெட்போன்களில் இன்லைன் கன்ட்ரோல்கள் இருப்பதால் மியூசிக், வால்யூம் கன்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அழைப்புகளை ஏற்க முடியும். மேலும் இவை 2 வெவ்வேறு நிலைகளில் மடங்கும் டூயல் மோட் வசதியில் இயங்குகிறது. இதனால் சார்ஜ் குறைவாக இருக்கும் போது ஆக்சிலரி கேபிள் கொண்டு பயன்படுத்த முடியும்.
போல்ட் கியூ ஹெட்போன் ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் வேலை செய்யும். இதன் பேட்டரி சேவை இரண்டு நாட்கள் ஸ்டான்ட்பை மற்றும் 8 முதல் 10 மணி நேர பிளேபேக் வழங்கும் என போல்ட் தெரிவித்துள்ளது. வயர்லெஸ் சிறப்பான ஆடியோ டிரான்ஸ்மிஷன் சேவையை வழங்குகிறது.
இந்தியாவில் போல்ட் கியூ ஹெட்போன் விலை ரூ.1,710 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், மிந்த்ரா தளத்தில் ரூ.1,449 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் அடிக்கடி சிக்கிக் கொள்ளாத வகையிலான கேபிள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








