பட்ஜெட் விலையில் தரமான நெக்பேண்ட் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்த Boult.!
இந்தியாவில் மிகவும் பிரபலமான போல்ட் நிறுவனம் புதிய போல்ட் ஆடியோ கர்வ் ANC எனும் நெக்பேண்ட் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த நெக்பேண்ட் இயர்பட்ஸ் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் மெல்லிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
நெக்பேண்ட் இயர்பட்ஸ்
இந்த புதிய நெக்பேண்ட் இயர்பட்ஸ் மாடல் ஆனது 12எம்எம் டிரைவர்கள், பூம் எக்ஸ் ரிச் பேஸ் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. அதேபோல் ப்ளூடூத் 5.3, ப்ளின்க் அண்ட் பேர் தொழில்நுட்பம், பிரீமியம் டச் கண்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்டண்ட், IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளிட்ட பல அசத்தலான வசதிகளுடன் போல்ட் ஆடியோ கர்வ் ANC எனும் நெக்பேண்ட் இயர்பட்ஸ் வெளிவந்துள்ளது.

போல்ட் ஆடியோ கர்வ் ANC எனும் நெக்பேண்ட் இயர்பட்ஸ் மாடல் ஆனது மேக்னடிக் டிரைவர்கள் உள்ளன. பின்பு இந்த சாதனம் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேசஷன் மற்றும் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது. அதேபோல் 40 மணி நேரத்திற்கான பிளேடைம் கொண்டிருக்கிறது இந்த அட்டகாசமான சாதனம்.
போல்ட் ஆடியோ கர்வ் ANC எனும் நெக்பேண்ட் இயர்பட்ஸ் ஆனது டைப்-சி பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இதை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 15 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது. இந்த புதிய சாதனத்தில் 60ms அல்ட்ரா லோ லேடன்சி Combat கேமிங் மோட் உள்ளது. இது கேமிங்கின் போது சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. அதேபோல் டூயல் பேரிங் வசதி இருப்பதால், இதைக் கொண்டு ஒரே சமயத்தில் அழைப்புகளைப் பேசுவது மற்றும் கேமிங் செய்ய முடியும்.

பிளாக் மற்றும் கிரீன் இந்த போல்ட் ஆடியோ கர்வ் ANC எனும் நெக்பேண்ட் இயர்பட்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் விலை ரூ.1299-ஆக உள்ளது. அதேபோல் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தில் இந்த அட்டகாசமான போல்ட் ஆடியோ கர்வ் ANC எனும் நெக்பேண்ட் இயர்பட்ஸ் மாடலை வாங்க முடியும்.
ஸ்மார்ட் வாட்ச்
அதேபோல் சமீபத்தில் போல்ட் நிறுவனம் போல்ட் ஸ்டிரைக்கர் எனும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. இந்த போல்ட் ஸ்டிரைக்கர் ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆனது 1.3-இன்ச எச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட் வாட்ச் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போல்ட் நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் வட்ட வடிவ டயல், சிலிகான் ஸ்டிராப் மற்றும் 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் கொண்டுள்ளது.
100-க்கும் அதிக வொர்க் அவுட் மோட்கள், 24x7 இதயத் துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டரிங், ரத்த அழுத்தத்தை மாணிட்டர் செய்யும் வசதி எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போல்ட் ஸ்டிரைக்கர் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ப்ளூடூத் 5.1 ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்.

ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட போல்ட் ஸ்டிரைக்கர் ஸ்மார்ட்வாட்ச் ஆனது வாய்ஸ் அசிஸ்டண்ட், பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் என ஏராளமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன் உள்ளிட்ட அசத்தலான வசதிகளை வழங்குகிறது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்.
இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை முழு சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என போல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த போல்ட் ஸ்டிரைக்கர் ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆனது கிரீம், புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது ரூ.1499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications








