Home
Gadgets

அறக்க பறக்கும் ஆஃபர்.. ரூ.1,799 பட்ஜெட்ல அமோலெட் டிஸ்பிளே.. 30 நாட்கள் பேட்டரி.. எந்த வாட்ச்?

கம்மியான பட்ஜெட்டில் அமோலெட் டிஸ்பிளே, 30 நாட்கள் பேட்டரி பேக்கப், சிலிகான் ஸ்ட்ராப், ப்ளூடூத் காலிங், ஹெல்த் மானிட்டர்கள் போன்ற பக்காவான அம்சங்களுடன் பாஸ்டன் லெவின் இன்ஃபினிட்டி (BOSTON LEVIN Infinity) ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

பாஸ்டன் லெவின் இன்ஃபினிட்டி அம்சங்கள் (BOSTON LEVIN Infinity Specifications): இந்த இன்ஃபினிட்டி மாடல் ஸ்குவார் ஷேப்ட் (Square Shaped) டயல் மற்றும் சிலிகான் வாட்ச் ஸ்ட்ராப் (Silicone Watch Strap) கொண்டுள்ளது. இதன் பாடி ஜிங்க் அலாய் (Zinc Alloy) மற்றும் ஸ்பியர்கல் டஃப்ஹெண்ட் கிளாஸ் (Spherical Toughened Glass) கொண்டுள்ளது.

ரூ.1,799 பட்ஜெட்ல அமோலெட் டிஸ்பிளே.. 30 நாட்கள் பேட்டரி.. எந்த வாட்ச்?

இந்த பாஸ்டன் லெவின் இன்ஃபினிட்டி ஸ்மார்ட்வாட்ச்சில் 1.85 இன்ச் (380 x 420 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு டிஃஎப்டி (TFT) மாடல் டிஸ்பிளேவாகும். இதில் ஃபுல் ஸ்கிரீன் டச் கன்ட்ரோல் (Full Screen Touch Control) வருகிறது. ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இன்-பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் (Mic and Speaker) வருகின்றன. அதோடு ப்ளூடூத் வி5.0 (Bluetooth v5.0) கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச்சில் ஜி-சென்சார் (G-Sensor) மற்றும் என்ஃஎப்சி (NFC) சப்போர்ட்டும் இருக்கிறது. இந்த பாஸ்டன் லெவின் இன்ஃபினிட்டி வாட்ச்சை ஃபுல் சார்ஜ் செய்ய 2 மணி நேரம் தேவைப்படும்.

அதன்பிறகு தொடர்ந்து 5 நாட்கள் ப்ளூடூத் காலிங் மோடில் (Bluetooth Calling Mode) பேக்கப் கொடுக்கும். அதுவே ஸ்டாண்ட்-பை மோடில் (Stand-by Mode) தொடர்ந்து 30 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கக்கூடியது. இந்த வாட்ச்சில் 60+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sport Modes) உள்ளன.

அதில் ரன்னிங், ஜாக்கிங், ஸ்விம்மிங், சைக்கிளிங் போன்ற முக்கிய மோட்களும் இடம் பெற்றிருக்கின்றன. 100+ கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (Customizable Watch Faces) வருகின்றன. இந்த வாட்ச்சின் ஹெல்த் மானிட்டர் டேட்டாக்களை ஃபிட்கிளவுட்ப்ரோ ஆப் (FitCloudPro App) மூலம் கண்காணித்துக்ககொள்ள முடியும். இந்த ஆஃப் கூகுள் ஸ்டோர் மற்றும ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைக்கிறது.

இந்த வாட்ச்சின் ஹெல்த் மானிட்டர்களை (Health Monitors) பொறுத்தவரையில், எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ஸ்டெப் கவுன்டர் (Step Counter), மைலேஜ் டிராக்கிங் (Mileage Tracking), ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking), செடண்டரி ரீமைண்டர் (Sedentary Reminder) ஆகியவை வருகின்றன.

வெதர் போர்காஸ்ட் (Weather Forecast), அலாரம் (Alarm), கேமரா மற்றும் மியூசிக் கன்ட்ரோல் (Camera And Music Control), ஃபைண்ட் மொபைல் (Find Mobile) போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு பில்ட்-இன் கேம்ஸ் (Built-in Games), வாட்ஸ்அப் (WhatsApp), எக்ஸ் (X) மற்றும் பேஸ்புக் (Facebook) போன்ற பல்வேறு ஆப்கள் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த பாஸ்டன் லெவின் இன்ஃபினிட்டி வாட்ச் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 4.4+ (Android 4.4+) மற்றும் ஐஓஎஸ் 9.0+ (IOS 9.0+) ஆகியவை அல்லது அதற்கு மேற்பட்ட ஓஎஸ்களை கொண்ட டிவைஸ்களில் மட்டுமே, இந்த இன்ஃபினிட்டி வாட்ச்சை கனெக்ட் செய்துகொள்ள முடியும்.

இந்த வாட்ச் வெறும் 39 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. ரோஸ் கோல்டு (Rose Gold), பிளாக் (Black) மற்றும் கிரே (Grey) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த பாஸ்டன் லெவின் இன்ஃபினிட்டி வாட்ச் வெறும் ரூ.1799க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விலை அறிமுக சலுகை மட்டுமேயாகும். ஆகவே, விரைவில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த வாட்ச்சை அமேசான்.இன் (Amazon.in) தளத்தில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். மிகவும் கம்மியான பட்ஜெட்டில் அமோலெட் டிஸ்பிளே, 30 நாட்கள் பேட்டரி பேக்கப், ஹெல்த் மானிட்டர்கள் போன்ற பெரும்பாலான அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்வாட்ச் வேண்டுமானால், இந்த பாஸ்டன் லெவின் இன்ஃபினிட்டி மாடலை தேர்ந்தெடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BOSTON LEVIN Infinity With AMOLED Display, Bluetooth Calling on Sale in India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X