Home
Gadgets

SONY-க்கு ஆப்பு.. Bose-ன் புது ஓபன் இயர்பட்ஸ்.. சில நிமிடத்தில் ஸ்டாக் காலி.. விலையை கேட்டா ஆடிப்போய்டுவீங்க..

போஸ் (Bose) நிறுவனம் அதன் TWS தயாரிப்பி வரிசையில் புதிதாக போஸ் அல்ட்ரா ஓபன் இயர்பட்ஸ் (Bose Ultra Open Earbuds) என்ற சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுவொரு ஓபன் இயர் (open ear earbuds) இயர்பட்ஸ் சாதனமாகும்.

இந்த புதிய போஸ் அல்ட்ரா ஓபன் இயர்பட்ஸ் (Bose Ultra Open Earbuds) சாதனம் தனித்துவமான கஃப் ஷேப் வடிவமைப்பை கொண்டுள்ளது. இதனால், இதை எளிமையாகவும், நீண்ட நேர பயன்பாட்டிற்காகவும் நீங்கள் பயன்படுத்தலாம். இதுவொரு ஓபன் இயர் இயர்பட்ஸ் மாடல் என்பதனால், இதை நீங்கள் ஒரு காதணி போல பயன்படுத்தலாம்.

SONY-க்கு ஆப்பு.. Bose-ன் புது ஓபன் இயர்பட்ஸ்.. விலை என்ன தெரியுமா?

போஸ் அல்ட்ரா ஓபன் இயர்பட்ஸ் (Bose Ultra Open Earbuds): குறிப்பாக உங்கள் தலையை எவ்வளவு வேகமாக அசைந்தாலும் இது தவறி கீழே விழாமல் இருக்கும் ஒரு உறுதியான பிடிப்பை வழங்குகிறது. அதேபோல், இந்த சாதனத்தை நீங்கள் கண்ணாடி அணியும் பொழுதும், அல்லது நகைகளை அணியும் பொழுதும், தொப்பி அணியும் பொழுதும் கூட எந்தவித தொந்தரவும் இல்லாமல் உறுதியான பொருத்தத்தை உங்கள் காதுகளுக்கு வழங்குகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்மூத் எட்ஜ் வடிவமைப்பு: இந்த போஸ் அல்ட்ரா ஓபன் இயர்பட்ஸ் (Bose Ultra Open Earbuds) சாதனம் ஸ்மூத் எட்ஜ் வடிவமைப்புடன் மெட்டாலிக் பினிஷ் உடன் மிகவும் எலைட்டான தோற்றத்துடன் வருகிறது. இதில் ஒரு புறம் மிகவும் மெருதுவான சிலிக்கான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உங்கள் காது எந்தவித வலியையும் பெறுவதில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஓபன் ஆடியோ டெக்னாலஜி: இந்த போஸ் அல்ட்ரா ஓபன் இயர்பட்ஸ் (Bose Ultra Open Earbuds) சாதனம் நிறுவனத்தின் ஓபன் ஆடியோ டெக்னாலஜி (OpenAudio technology) அம்சத்துடன் இயங்குகிறது. இது ஹை-குவாலிட்டி ஆடியோவை வழங்குகிறது. இதன் ஆடியோ துல்லியம் போஸ் இம்மெர்சிவ் ஆடியோ (Bose Immersive Audio) மூலம் டியூன் செய்யப்பட்டுள்ளது.

SONY-க்கு ஆப்பு.. Bose-ன் புது ஓபன் இயர்பட்ஸ்.. விலை என்ன தெரியுமா?

எத்தனை மணிநேர பிளேடைம்? இதில் நீங்கள் ஸ்டில் (Still) அல்லது மோஷன் (Motion) என்று 2 மோடிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம். உங்கள் மோடிற்கு ஏற்றார் போல ஆடியோ பிளே செய்யப்படும். இது பிஸிக்கல் பட்டன் (physical button) உடன் வருகிறது. இந்த போஸ் அல்ட்ரா ஓபன் இயர்பட்ஸ் (Bose Ultra Open Earbuds) டிவைஸ் 7.5 மணி நேர பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது.

சோனி கதை முடிந்ததா? இம்மெர்சிவ் ஆடியோ மோடில் (Immersive Audio) இயக்கும் பொழுது 4.5 மணிநேர பேட்டரி (battery) ஆயுளை வழங்குகிறது. இது ஸ்னாப்டிராகன் சவுண்ட் டெக்னாலஜி சூட் மற்றும் குவால்காம் aptX அடாப்டிவ் கோடெக் அம்சத்துடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சோனியின் கதையை முடிக்க போஸ் இத்தகைய தொழில்நுட்பத்தை அதன் சாதனத்தில் பயன்படுத்தியுள்ளது போல் தெரிகிறது.

கூகிள் பாஸ்ட் பேர் (Google Fast Pair): அம்சத்துடன் வருகிறது. இது ப்ளூடூத் 5.3, IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்புடன் வருகிறது. இது போஸ் சவுண்ட்பார், ப்ளூடூத் ஸ்பீக்கர் உடன் இணக்கமாகும் போஸ் சிம்பிள் சிங்க் டெக்னாலஜி அம்சத்துடன் வருகிறது. இது ஆட்டோ வால்யூம் அடஜஸ்ட்மென்ட் போன்ற உயர்திறன் அம்சங்களையும் கொண்டுள்ளது.

விலை: அமெரிக்காவில் இந்த Bose Ultra Open Earbuds சாதனம் 299 டாலர் விலையில் விற்பனைக்கு வந்ததது. இந்திய மதிப்பின் படி இதன் விலை வேறு ரூ. 24,820 மட்டுமே. விற்பனைக்கு வந்த சில நிமிடங்களில் இந்த புதிய Bose Ultra Open Earbuds சாதனத்தின் 100K யூனிட்களை விற்பனையாகி முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Bose Ultra Open Earbuds with cuff-shaped design launched check price and specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X