எஸ்1 ப்ரோ மல்டி-பொஷிசன் பிஏ சிஸ்டம்: இந்தியாவில் அறிமுகம்

எஸ்1 ப்ரோவில் 70 - 16கேஹெச்இசட் அலைவரிசை கிடைப்பதோடு, ஒரு அதிகபட்ச எஸ்பிஎல் மதிப்பீடாக 103 டெசிபேல் வரை உருவாக்கப்படுகிறது.

|

போஸ் நிறுவனம் மூலம் எஸ்1 ப்ரோ மல்டி பொஷிசன் பிஏ சிஸ்டம், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் அமைந்த போஸ் நிறுவனத்தின் நவீன கால தயாரிப்புகளின் வரிசையில் உட்படும் இதற்கு, ரூ.60,624 என்று விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

எஸ்1 ப்ரோ மல்டி-பொஷிசன் பிஏ சிஸ்டம்: இந்தியாவில் அறிமுகம்

இசை அமைப்பாளர்கள், டிஜே-க்கள் மற்றும் பொதுவாக பிஏ சிஸ்டம் பயன்படுத்த விரும்புவோரை கருத்தில் கொண்டு இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் எல்லா முக்கிய நகரங்களிலும் கிடைக்கும் வகையில், தனது சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மூலம் ஆடம்பரமான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த தயாரிப்பின் தேசிய விநியோகஸ்தராக திகழ்கிறது.

நாடெங்கிலும் உள்ள எல்லா பிரபல ஆடியோ ஸ்டோர்களிலும் கிடைக்கப் பெறுகிறது. இதுமட்டுமின்றி பன்முக பிரண்டு விற்பனையகங்களான க்ரோமா போன்ற கடைகள் மற்றும் போஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வமான கடைகளிலும், இந்த தயாரிப்பு கிடைக்கப் பெற வேண்டும் என்று போஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

போஸ் எஸ்1 ப்ரோ 6.8 கிலோ எடைக் கொண்டுள்ளதோடு, எளிதாக எடுத்து சொல்லும் வகையில் உள்ளக கைப்பிடிகள் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மூன்று 2.5 இன்ச் டிரைவர்கள், இரு ஒலிசார்ந்த போர்ட்கள் மற்றும் ஒரு 6 இன்ச் வூஃப்பர் ஆகியவை மூலம் ஒலி வெளியீடு நடைபெறுகிறது.

எஸ்1 ப்ரோ மல்டி-பொஷிசன் பிஏ சிஸ்டம்: இந்தியாவில் அறிமுகம்

இந்த சாதனத்தில் 3 சேனல் மிக்ஸர் உடன் 2 மைக் / எதிர் முழக்க கட்டுப்பாடுகளைக் கொண்ட உள்ளீடுகளில் உள்ள லைன் மற்றும் துணை வினை உடன் கூடிய ஒரு மூன்றாவது சேனல் மற்றும் ஒருங்கிணைந்த ப்ளூடூத் ஸ்ட்ரீம்மிங் ஆகியவை காணப்படுகின்றன. மேலும் இந்த சாதனத்தில் மைக்ரோபோன்கள் மற்றும் ஒலிசார்ந்த கித்தார்கள் ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த டோன்மேட்ச் செயலி காணப்படுகிறது.

எஸ்1 ப்ரோவில் 70 - 16கேஹெச்இசட் அலைவரிசை கிடைப்பதோடு, ஒரு அதிகபட்ச எஸ்பிஎல் மதிப்பீடாக 103 டெசிபேல் வரை உருவாக்கப்படுகிறது. இந்த சாதனம் மூலம் ஏறக்குறைய 50 நபர்கள் கொண்ட பார்வையாளர் பகுதிக்கு சிறந்த சேவையை அளிக்க முடியும் என்று போஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. போஸ் எஸ்1 ப்ரோ-வில் 6 மணிநேரம் தாக்குபிடிக்க கூடிய லித்தியம் ஐயன் பேட்டரி இருப்பதால், நடமாடும் போது கூட இதை பயன்படுத்த முடியும். நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சாதனத்தில், ட்ரிக்கிள் சார்ஜ் அல்லது விரைவு சார்ஜ் தேர்வும் இருப்பது கூடுதல் சிறப்பு.

எஸ்1 ப்ரோ மல்டி-பொஷிசன் பிஏ சிஸ்டம்: இந்தியாவில் அறிமுகம்

எஸ்1 ப்ரோவில் உள்ள மிகப்பெரி யூஎஸ்பி இருப்பதால், உயர்ந்த இடங்கள், இதன் பக்கவாட்டில் (தரையில் இருக்கும் போது), சாய்ந்த வண்ணம் இருத்தல், ஒரு ஸ்பீக்கர் ஸ்டெண்டு மீது வைக்கப்படுதல் என்ற நான்கு விதமான வேறுபட்ட நிலைகளில் வைக்கப்பட்டாலும் பயன்படுத்தும் வகையில், இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்பீக்கரின் நிலை எவ்வாறு வைக்கப்பட்டுள்ளது என்பதை, இந்த சாதனத்தின் உள்கட்டமைப்புடன் உள்ள சென்ஸர்கள் கண்டறிந்து, ஆட்டோ இக்யூ என்று அழைக்கப்படும் அம்சத்தை இயக்கி, எந்த நிலையில் இருந்தாலும் ஒலி வெளியீடு தகுந்த முறையில் இருப்பதை உறுதி செய்கிறது. இந்த சாதனத்தில் உள்ள ஒரு லைன் அவுட் ஜெக் இருக்கிறது. இது 35 மிமீ ஸ்பீக்கர் ஸ்டேண்டு உடன் கச்சிதமாக பொருந்துகிறது.

Best Mobiles in India

English summary
Bose Professional Launches S1 Pro Multi-Position PA System in India: Price, Specifications, Features : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X