Home
Gadgets

வீடுனு வந்தா இதான்.. 1000 சதுர அடி கிளீன்.. ஒரே சார்ஜ்.. ஹோம் வேக்கம் கிளீனர்.. எந்த மாடல்?

வீட்டில் சுத்தம் செய்வதற்கு மட்டும் ஒரே ஆளையே வேலைக்கு போடவேண்டும் என்று சொல்லும் அளவுக்கு வேலை இருக்கிறது. ஆனால், இந்த வேலையை நாம் பாக்கப்போகும் ஒரேவொரு வேக்கம் கிளீனர் செய்து முடித்துவிடும். சோபா முதல் கிட்சன் வரையில் இதை வைத்தே செய்யலாம்.

தூங்கி எழுந்தவுடன் எவ்வளவு நேரம் எடுத்து வீட்டை கூட்டிப் பெருக்கினாலும் மதியத்துக்குள் மீண்டும் தூசி படிந்துவிடும். அதிலும், சோபா, கிட்சன், பீரோ கார்னர் போன்ற இடங்களில் ஒருநாள் சுத்தம் செய்யாமல் விட்டாலும் தூசிகள் அதிகரித்துவிடும். அதிலும் குழந்தைகள் இருந்தால் சொல்லவே வேண்டியதில்லை.

வீடுனு வந்தா இதான்.. 1000 சதுரஅடி கிளீன்.. ஒரே சார்ஜ்.. பக்கா கிளீனர்!

வீட்டை சுத்தம் செய்வதற்கே பாதி நாள் போய்விடும். இதனால், வேக்கம் கிளீனர்கள் வாங்கும் வழக்கம் நம்மிடையே அதிகரித்து வருகிறது. ஏனென்றால், ஒரு வேக்கம் கிளீனரை வைத்தே பல வேலைகளை செய்து கொள்ள முடியும். அதோடு நேரம் மற்றும் உடல் உழைப்பு மிச்சமாகிறது. கூடுதல் சுத்தமும் கிடைக்கிறது.

இப்படிப்பட்ட வேக்கம் கிளீனர் வாங்குவதில் கவனம் இருக்க வேண்டும். பேட்டரி பேக்கப், மோட்டார் பவர், ஸ்டோரேஜ், ஃபிலெக்சிபல் ட்யூப் போன்றவற்றை கவனத்தின் கொள்ள வேண்டும். அதோடு வாங்கும் வேக்கம் கிளீனர் பெயர்பெற்ற கம்பெனியின் மாடலாக இருப்பதையும் நாம் பார்த்து கொள்ள வேண்டும்.

இந்த அனைத்தையும், போஷ் நிறுவனத்தின் போஷ் அன்லிமிடெட் 7 ஹேண்ட்ஸ்டிக் வேக்கம் கிளீனர் (Bosch Unlimited 7 Handstick Vacuum Cleaner) கொண்டிருக்கிறது. லைட் வெயிட்டில் 1000 சதுர அடி கிளீன் கேபாசிட்டி கொண்டிருக்கிறது. முதலில் இந்த மாடலின் பீச்சர்களை தெரிந்துகொண்டு பிறகு விலையை பற்றி பார்ப்போம்.

வீடுனு வந்தா இதான்.. 1000 சதுரஅடி கிளீன்.. ஒரே சார்ஜ்.. பக்கா கிளீனர்!

போஷ் அன்லிமிடெட் 7 வேக்கம் கிளீனர் அம்சங்கள் (Bosch Unlimited 7 Vacuum Cleaner Specifications): இந்த மாடலானது, ஸ்மூத் ஹேண்டிலுக்கு ஏதுவாக லைட்வெயிட் (Lightweight), எர்கோனாமிக் (Ergonomic) டிசைன் கொண்டிருக்கிறது. 99.9 சதவீத டஸ்ட் பிக்கப் எஃபிசியன்சி (Dust Pickup Efficiency) கொண்டுள்ளது.

ஆகவே, வெறும் கைகளால் செய்யப்படும் சுத்தத்தைவிட பல மடங்கு சுத்தம் இந்த வேக்கம் கிளீனர் மூலம் கிடைக்கும். டர்போஸ்பின் மோட்டார் (TurboSpin Motor) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டாரில் 66,000 ஆர்பிஎம் பவர் வருகிறது. 3.0Ah பேட்டரி கேபாசிட்டி (Battery Capacity) கொண்டிருக்கிறது.

ஆகவே, இதன் ரன்டைமிங்கை பொறுத்தவரையில், ஒரு ஃபுல் சார்ஜில் தொடர்ந்து 40 நிமிடங்கள் பயன்படுத்த முடியும். இந்த மோட்டர் பவரின் அடிப்படையில், 1000 சதுர அடிக்கும் மேல் சுத்தம் செய்து கொள்ளலாம். சுலபமாக நேவிகேஷன் செய்துகொள்ள ஃபிலெக்சிபல் ட்யூப் கொடுக்கப்பட்டுள்ளது. பேக்லெஸ் (Bagless) ஸ்டோரேஜ் வருகிறது.

நைட் டைம் அல்லது வெளிச்சம்படாத இடங்களில் சுத்தம் செய்ய ஏதுவாக எல்இடி லைட்ஸ் (LED Lights) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆட்டோ மோட் (Auto Mode) சப்போர்ட் உள்ளது. இதன் மூலம் பவர் கம்மியாக தேவைப்படும் இடங்களை அதுவாகவே டிடெக்ட் செய்து குறைக்கும். அதேபோல நீட்டிக்கவும் செய்யும்.

வீடு மட்டுமல்லாமல், சோபா, பீரோ, வார்ட்ரோப் கார்னர்களிலும் சுத்தம் செய்துகொள்ள அதற்கேற்ப கிட்களும் கிடைக்கின்றன. இந்த போஷ் அன்லிமிடெட் 7 வேக்கம் கிளீனரின் விலையானது, ரூ.30,000ஆக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்திலும், போஷ் ரீடெயில் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Bosch Unlimited 7 Handstick Vacuum Cleaner Launched Sale From Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X