வீடு இல்ல தெருவே அதிரும்.. பட்ஜெட்டில் 100W பார்ட்டி ஸ்பீக்கர்.. ட்ராலி டிசைன்.. 8 மணிநேர பேட்டரி வேற!
மொபைல் ஆக்சஸெரீஸ் பிராண்ட் ஆன இன்பேஸ் டெக்னாலஜிஸ், விநாயகர் சதுர்ச்சி தொடங்கி வரிசையாக வரும் பண்டிகை காலத்தை மனதிற்கொண்டு, பூம் பார்ட்டி 210 (Boom Party 210) மற்றும் பூம் பார்ட்டி 110 (Boom Party 110) என்கிற 2 புதிய பார்ட்டி ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தி உள்ளது
பூம் பார்ட்டி 210 மற்றும் பூம் பார்ட்டி 110 ஸ்பீக்கர்களின் முக்கிய அம்சங்கள்: இவ்விரு புதிய பார்ட்டி ஸ்பீக்கர்களுமே 100W சக்திவாய்ந்த சவுண்ட்டை, பாஸ்-ஹெவி ஆடியோ அனுபவத்துடன் வழங்குகின்றன. மேலும் ஒரே சார்ஜில் 8 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தையும் வழங்குகின்றன.

ஒரு ஜோடி வயர்லெஸ் கரோக்கி மைக்ரோஃபோன்கள், ரிமோட் கண்ட்ரோல் மற்றும் ஒரு பிரத்யேக கிட்டார் இன்புட் ஆகியவற்றை கொண்டுள்ள இந்த ஸ்பீக்கர்கள் மிகவும் இலகுரக வடிவமைப்பை பெற்றுள்ளதால், இதை எங்கும் எளிதாக எடுத்து செல்லக்கூடியவைகளாக உள்ளன,
மேலும் இந்த இரண்டு ஸ்பீக்கர்களும் சக்கரங்கள் மற்றும் ஒரு புல் ஹேண்டில் கொண்ட டிராலி பாணியிலான வடிவமைப்பை கொண்டுள்ளன. ஆகையால் இதை எங்கும் எடுத்து செல்ல முடியும். இந்த ஸ்பீக்கர்களின் பில்ட்-இன் எல்இடி லைட் சிங்க்ரனைஸ் அம்சமானது பிளே ஆகும் மியூசிக்கின் துடிப்புகளுடன் ஒத்திசைக்கிறது. இது ஃபன் ஆக இருப்பது மட்டுமன்றி, நல்ல பார்ட்டி மூட்-ஐயும் செட் செய்கிறது.

வெளிப்புற இடங்களில் உணவு அருந்தும் போது, வீட்டில் நடக்கும் விருந்தின் போது அல்லது கேம்ப்ஃபயர் கரோக்கி நைட்டின் போது.. என எதுவாக இருந்தாலும், பூம் பார்ட்டி 210 மற்றும் பூம் பார்ட்டி 110 ஆகிய 2 பார்ட்டி ஸ்பீக்கர்களுமே பெஸ்டிவல் மோட்-ஐ டக்கென்று ஆன் செய்யும் என்பதில் சந்தேகமே வேண்டாம். சரி வாருங்கள் பூம் பார்ட்டி 210 மற்றும் பூம் பார்ட்டி 110 ஸ்பீக்கர்களின் விரிவான அம்சங்களை பற்றி பார்ப்போம்.
100W சக்திவாய்ந்த சவுண்ட் ஒலி: பிளே ஆகும் ரூமை ஆற்றலால் நிரப்பும் மிருதுவான, பாஸ்-ஹெவியான மற்றும் சிதைவு இல்லாத ஆடியோவை வழங்கும்.
8 மணிநேரம் வரை இடைவிடாத ப்ளே டைம்: 8 மணிநேரம் வரை பிளேபேக் மற்றும் 6-8 மணிநேரம் மட்டுமே ரீசார்ஜ் நேரத்துடன் நீண்ட பார்ட்டியை கொண்டாட அனுமதிக்கும்.
எல்இடி சென்ஸ் லைட்: கொண்டாட்ட உணர்வுகளையும் இசை அனுபவத்தையும் மேம்படுத்த, பார்ட்டி பூம் ஸ்பீக்கரின் இரண்டு வகைகளுமே எல்இடி சென்ஸ் லைட்களுடன் வருகின்றன
கரோக்கி மோட்: இது 2 வயர்லெஸ் மைக்ரோஃபோன்களுடன் வருகிறது. நீங்கள் தேர்வு செய்யும் சரியான டூயட்டுக்கான சரியான மைக் ஒலியளவு மற்றும் விளைவுகளை எளிதாக சரிசெய்யலாம்.
பிரத்யேக கிட்டார் போர்ட்: இதிலுள்ள போர்ட் அனைத்து வகையான கிட்டார் பிளக்-இன்களையும் ஆதரிக்கிறது. உயர்தர அவுட்புட்டை ழங்க ஸ்பீக்கரில் பாஸ், எக்கோ மற்றும் வால்யூம் கட்டுப்பாடுகள் உள்ளன.
மல்டி கனெக்டிவிட்டி ஆதரவு: ப்ளூடூத், ஆக்ஸ் (AUX), யூஎஸ்பி (USB), எச்டி (SD) கார்டு மற்றும் எப்எம் (FM) ரேடியோ இணைப்பை ஆதரிக்கிறது.
புல் ஹேண்டில் கொண்ட டிராலி டிசைன்: உட்புற மற்றும் வெளிப்புற அமைப்புகளில் எளிதான இயக்கத்திற்காக சக்கரங்கள் மற்றும் புல் ஹேண்டில் கொண்ட டிராலி-பாணி வடிவமைப்பை பெற்றுள்ளது.
ரிமோட் கண்ட்ரோல்: இரண்டு ஸ்பீக்கர்களும் தூரத்திலிருந்து மியூசிக் மற்றும் ஸ்பீக்கர் செயல்பாடுகளை வசதியாக நிர்வகிக்க ரிமோட் கண்ட்ரோலுடன் வருகின்றன.
பிரத்யேக இக்யூ (EQ) மோட்கள்: பார்ட்டியின் அதிர்வுடன் ஒலி தரத்தை மேம்படுத்த முன்கூட்டியே டியூன் செய்யப்பட்ட பிரத்யேக ஐக்யூ மோட்களையும் கொண்டுள்ளன.
பூம் பார்ட்டி 210 மற்றும் பூம் பார்ட்டி 110 ஸ்பீக்கர்களின் விலை விவரங்கள்: பூம் பார்ட்டி 210 பார்ட்டி ஸ்பீக்கர் ஆனது ரூ.9,499 என்கிற அறிமுக விலையில் வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள பூம் பார்ட்டி 110 ஸ்பீக்கர் ஆனது ரூ. அறிமுக விலையில் ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது
இந்த 2 மாடல்களுமே பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் வழியாக மற்றும் இன்பேஸ் டெக்னாலஜிஸ் பிராண்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் முன்னணி ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








