OnePlus, Samsung-ஐ ஓரங்கட்டிய boAt Xtend Talk ஸ்மார்ட்வாட்ச்.! ப்ளூடூத் காலிங் உடன் இவ்வளவு கம்மி விலையிலா?
OnePlus, Samsung, Fitbit, போன்ற முன்னணி நிறுவனங்களால் வழங்க முடியாத கம்மி விலை ஸ்மார்ட் வாட்ச் மாடலை இப்போது boAt நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னணி நிறுவனங்களுடன் boAt நிறுவனத்தை இந்த நேரத்தில் ஒப்பிட ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. அது என்னவென்றால், நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள boAt Xtend Talk Smartwatch-ல் ப்ளூடூத் காலிங் அம்சம் இடம்பெற்றுள்ளது.

இவ்வளவு கம்மி விலையில் ப்ளூடூத் காலிங் அம்சத்துடன் ஸ்மார்ட் வாட்சா?
இந்த அம்சத்தைக் கொண்ட முன்னணி பிராண்ட்களின் ஸ்மார்ட் வாட்ச் டிவைஸ்கள் ரூ.8,000 முதல் ரூ.20,000 விலைக்குள் இந்தியாவில் கிடைக்கும் நிலையில், boAt நிறுவனம் இப்போது Bluetooth calling அம்சத்துடன் இயங்கும் புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலை வெறும் ரூ. 3,000 விலைக்குள் அறிமுகம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உண்மையிலேயே, இது இந்தியர்களுக்குக் கிடைத்த லக்கி சான்ஸ் தான் என்பதில் சந்தேகமில்லை.

புதிய boAt Xtend Talk ஸ்மார்ட் வாட்ச்
இந்திய பிராண்டான boAt நிறுவனம், இப்போது நாட்டில் புதிய boAt Xtend Talk என்ற ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் புளூடூத் காலிங், அலெக்சாவுக்கான ஆதரவு, IP68 சான்று போன்ற பல அம்சங்களுடன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பட்ஜெட் பிரைஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலாக இப்போது விற்பனைக்கு கிடைக்கிறது. இது 2.5D கர்வுடு டிஸ்பிளே உடன் வருகிறது.

ரூ.3000 விலைக்குள் இந்த ஸ்மார்ட் வாட்ச் சிறந்தது தானா?
ப்ளூடூத் காலிங் அம்சத்துடன் கிடைக்கும் இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் இப்போது வெறும் ரூ. 3,000 என்ற விலைக்கு கீழ் கிடைக்கிறது என்பது தான் நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது. உண்மையிலேயே, ரூ.3000 விலைக்குக் கீழ் வாங்க இந்த ஸ்மார்ட் வாட்ச் சிறந்தது தானா? இதில் என்னென்ன ஸ்பெஷாலிட்டி எல்லாம் இருக்கிறது? இதை எங்கிருந்து வாங்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

10 நாட்கள் வரை பேட்டரி ஆயுளா?
இந்த ஸ்மார்ட் வாட்ச் டிவைஸ் இதயத் துடிப்பு சென்சார், SpO2 மானிட்டர் மற்றும் VO2 மேக்ஸ் மானிட்டர் போன்ற அம்சங்களுடன் ஸ்டெப்ஸ் கவுண்ட்டர், கலோரி கண்காணிப்பு போன்ற பல அம்சங்களுடன் வருகிறது. இந்த சாதனம் 60+ ஸ்போர்ட்ஸ் மோடுகளுடன் வருகிறது. ஆட்டோ ஒர்க்அவுட் அம்சத்தையும் கொண்டுள்ளது. வழக்கமான பயன்பாட்டுடன் 10 நாட்கள் வரை இதன் பேட்டரி ஆயுள் நீடித்து நிலைக்கிறது.

150-க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ்
புளூடூத் காலிங் இயக்கப்பட்டால் 2 நாட்கள் வரை மட்டுமே பேட்டரி நீடிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. boAt Xtend Talk வாட்ச் IP68 மதிப்பீட்டிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த வாட்ச் 150-க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. இதனால் பயனர்கள் அடிக்கடி அவர்கள் விரும்பும் வாட்ச் பேஸ் உடன் கஸ்டமைஸ் செய்துகொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். இது 300mAh பேட்டரியை பேக் செய்கிறது.

boAt Xtend Talk என்ன விலையில் எங்கிருந்து வாங்க கிடைக்கிறது?
இந்த ஸ்மார்ட் வாட்ச் இப்போதைய டிரெண்டில் உள்ள செவ்வக டயலைக் கொண்டுள்ளது. இது HD குவாலிட்டியில் செயல்படும் 1.69 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. boAt Xtend Talk ஸ்மார்ட் வாட்சியென் ஆரம்ப விலை ரூ.2,999 ஆகும். இது இப்போது அமேசான் இந்தியா மற்றும் பிற இணையதளங்கள் வழியாக வாங்க கிடைக்கிறது. இது பிட்ச் பிளாக், செர்ரி ப்ளாசம் மற்றும் டீம் கிரீன் உள்ளிட்ட மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

அம்மாடி! Fitbit ஸ்மார்ட் வாட்ச்களின் விலை இவ்வளவா?
Fitbit போன்ற பிற பிரபலமான பிராண்டுகளும் வெவ்வேறு விலை புள்ளிகளில் மூன்று புதிய ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்துள்ள. ஆனால், அவை அதிக விலை வரம்பில் கிடைக்கின்றன. குறிப்பாக, Fitbit இன்ஸ்பயர் 3 என்ற மாடல் தான் விலை குறைவானது, இதுவே இப்போது இந்தியாவில் ரூ.8,999 என்ற விலையில் இருந்து துவங்குகிறது. Fitbit Versa 4 ஸ்மார்ட் வாட்சின் விலை ரூ.20,499 ஆகவும், Fitbit Sense 2 ஸ்மார்ட் வாட்சின் விலை இந்தியாவில் ரூ. 20,499 ஆகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications