Home
Gadgets

வாரி தூக்கும் பட்ஜெட்.. 2.01-இன்ச் எச்டி டிஸ்பிளே.. 5 நாட்களுக்கு பேட்டரி.. அசத்தும் புதிய போட் ஸ்மார்ட்வாட்ச்

போட் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்வாட்ச், ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது போட் நிறுவனம்.

அதாவது சில வாரங்களுக்கு முன்புதான் போட் ஸ்டார்ம் பிளஸ் எனும் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது போட் வேவ் சிக்மா (boAt Wave Sigma) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்துள்ளது போட் நிறுவனம். குறிப்பாக பட்ஜெட் விலையில் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.

5 நாட்களுக்கு பேட்டரி.. அசத்தும் புதிய போட் ஸ்மார்ட்வாட்ச்.,

இந்த புதிய போட் வேவ் சிக்மா ஸ்மார்ட்வாட்ச் ஆனது 2.01-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச். குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் மற்றும் IP67 என ஏராளமான அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது.

கிரெஸ்ட் பிளஸ் ஒ.எஸ், குயிக் டல் பேட் மற்றும் அதிகபட்சமாக பத்து கான்டாக்ட்களை ஸ்டோர் செய்து கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளது இந்த போட் வேவ் சிக்மா ஸ்மார்ட்வாட்ச். அதேபோல் 700-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், உடல்நலத்தை டிராக் செய்யும் ஏராள சென்சார்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்வாட்ச்.

புதிய போட் வேவ் சிக்மா ஸ்மார்ட்வாட்ச் 230 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் ஐந்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் ப்ளூடூத் காலிங் வசதியைப் பயன்படுத்தினால், இதனை அதிகபட்சம் இரண்டு நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் கேமராவை இயக்கும் வசதி, மியூசிக் பிளேபேக் போன்ற ஆப்ஷன்கள் உள்ளன. அதேபோல் வானிலை விவரங்கள், அலாரம், ஸ்டாப்வாட்ச், டைமர், ஃபைன்ட் மை போன் மற்றும் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்வாட்ச். ஆக்டிவ் பிளாக், கூல் புளூ, ஜேட் பர்பில், செர்ரி பிளாசம் மற்றும் கூல் கிரே நிறங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கு மெட்டல் பிளாக் நிற ஆப்ஷனில் மெட்டாலிக் ஸ்டிராப் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.1,299-ஆக உள்ளது. மேலும் போட் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் போட் வேவ் சிக்மா ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்க முடியும்.

சில நாட்களுக்கு முன்பு போட் ஆவன்டே பார் 520 சவுண்ட்பார் மாடலை அறிமுகம் செய்தது போட் நிறுவனம். இந்த சவுணட்பார் சிறந்த ஹோம் தியேட்டர் அனுபவத்துக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக போட் சிக்னேச்சர் சவுண்ட் (boAt Signature Sound) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சவுண்ட்பாரில் 16W அவுட்புட் கொண்ட 2 இன்ச் ஸ்பீக்கர்கள் இரண்டு கொடுக்கப்பட்டுள்ளன.

5 நாட்களுக்கு பேட்டரி.. அசத்தும் புதிய போட் ஸ்மார்ட்வாட்ச்.,

போட் ஆவன்டே பார் 520 சவுண்ட்பார் MdJ டூயல் பாசிவ் ரேடியேட்டர் (Dual Passive Radiators) மாடலாகும். இந்த சவுண்ட்பாரில் கிரிஸ்டல் - கிளியர் ஆடியோ (Crystal Clear Audio) அனுபவத்துக்காக 2.0 சேனல் ஆடியோ பிரில்லியன்ஸ் (2.0 Channel Audio Brilliance) ஸ்டீரியோ சவுண்ட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் வி5.0 (Bluetooth v5.0), யுஎஸ்பி (USB) மற்றும் ஏயுஎக்ஸ் (AUX) ஆகிய மல்டிபிள் கனெக்டிவிட்டி
கொண்டு வெளிவந்துள்ளது போட் ஆவன்டே பார் 520 சவுண்ட்பார்.

இந்த ஆவன்டே பார் 520 சவுண்ட்பார் 2000mAh பேட்டரி கொண்டுள்ளது. இதை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 5 மணி நேரம் பயன்படுத்தலாம். இதற்காக டைப் - சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சவுண்ட்பார் சார்கோல் பிளாக் (Charcoal Black) கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. குறிப்பாக ரூ.1500 பட்ஜெட்டில் இந்த ஆவன்டே பார் 520 சவுண்ட்பார் மாடலை பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Wave Sigma Smartwatch with 5 Days Battery Life Launched in India: Check Specifications Price: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X