வாங்க வைக்கும் விலை! ரூ.1,299 போதும்! 30 நாள் பேட்டரி பேக்கப்! மெட்டல் பாடி வேற! எந்த மாடல்?
இந்தியாவில் பட்ஜெட் விலையில் ப்ளூடூத் காலிங் மட்டுமல்லாமல், 30 நாட்கள் பேட்டரி பேக்கப், மெட்டல் பாடி, பிடி (BT) சிப் என்று அட்டகாசமான அம்சங்களுடன் போட் (boAt) நிறுவனத்தின் போட் வேவ் ப்யூரி (boAt Wave Fury) ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வருகிறது.
இந்த வாட்ச் புதிதாக மார்க்கெட்டுக்கு வருவதால் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த சில வாரங்களில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் போட் வேவ் ப்யூரி ஸ்மார்ட்வாட்ச்சில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன. எப்போது விற்பனைக்கு வருகிறது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

இப்போதெல்லாம் காலையில் வாக்கிங் போனாலும் சரி, பார்க்கில் உடற்பயிற்சி செய்தாலும் சரி பல பேரிடம் ஸ்மார்ட்வாட்ச் இருப்பதையும், அதை அவர்கள் அடிக்கடி பார்த்துக் கொண்டே இருப்பதையும் கவனிக்க முடிகிறது. அப்படி என்னதான், அதில் இருக்கிறது என்று கேட்கக் கூட சிலருக்கு தோன்றிருக்க வாய்ப்புள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் வெறும் ஆடம்பரத்துக்காக மட்டுமே விற்கப்பட்டால், அதை வாங்குவது தேவையற்றது. ஆனால், ஸ்மார்ட்வாட்ச்கள் அப்படியல்ல, ஒரு குட்டி மருத்துவரைப் போல உடல்நலம் குறித்த அப்டேட்களை உடனுக்குடன் உங்களுக்கு சொல்லக்கூடியது. இந்த ஸ்மார்ட்வாட்களில் இருக்கும், ஹெல்த் மானிட்டர்கள் மூலம், உங்களது இதயத்துடிப்பு முதல் ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் லெவல் வரையில் கண்காணிக்க முடியும்.
இப்படிப்பட்ட ஸ்மார்ட்வாட்ச்களின் விலை சற்று அதிகமாக இருக்கும். ஆனால், இப்போது மார்க்கெட்டுக்கு வரும் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுக விலை என்ற பெயரில் மலிவான விலைக்கு வருகின்றன. அதைப்பயன்படுத்தி வாங்கிக்கொள்ள வேண்டும். அந்த வரிசையில், பட்ஜெட் விலையில், போட் நிறுவனத்தின் போட் வேவ் ப்யூரி ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வர இருக்கிறது.
போட் வேவ் ப்யூரி அம்சங்கள் (boAt Wave Fury Specifications): இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.83 இன்ச் ((240*284 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் உள்ளது. ஹெல்த் மானிட்டர்களை பொறுத்தவரையில், ஹார்ட் ரேட் (Heart Rate) மானிட்டர், ப்ளட் ஆக்ஸிஜன் லெவல் (Blood Oxygen Level) மானிட்டர், ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor), டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கர் (Daily Activity Tracker) உள்ளிட்டவை உள்ளன.
அதோபோல, IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குயிக் டயல் பேட் (Quick Dial Pad), கேமரா கன்ட்ரோல் (Camera Control), மியூசிக் கன்ட்ரோல் (Music Control), வெதர் (Weather) அப்டேட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வருகின்றன. முக்கிய அம்சமாக 30 நாட்கள் ஸ்டான்ட்பை பேட்டரி பேக்கப் கிடைக்கிறது.
5 நாட்கள் பேட்டரி பேக்கப் கிடைக்கும். இந்த வாட்ச் ஜூலை 9ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. போட் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் ஆர்டர் செய்துகொள்ளலாம். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








