Home
Gadgets

வாங்கி கட்டுவீங்க.. 1.96-இன்ச் HD ஸ்கிரீன்.. 5 நாட்களுக்கு பேட்டரி.. மலிவு விலையில் போட் ஸ்மார்ட்வாட்ச்..

நாய்ஸ், ரெட்மி, ஃபாஸ்ட்ராக் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது போட் நிறுவனம். குறிப்பாக இந்த போட் நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் ஸ்மார்ட்வாட்சங்களை அறிமுகம் செய்கின்றன.

எனவேதான் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் போட் நிறுவனம் இந்தியாவில் போட் வேவ் எலிவேட் (boAt Wave Elevate) எனும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆனது கம்மி விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

வாங்கி கட்டுவீங்க.. மலிவு விலையில் போட் ஸ்மார்ட்வாட்ச்..

அதுவும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது இந்த போட் வேவ் எலிவேட் ஸ்மார்ட்வாட்ச். இப்போது இந்த புதிய போட் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த வாட்ச் மெட்டாலிக் பாடி, கிரவுன், பல்வேறு நிறங்களில் கிடைக்கும். மேலும் ஓசன் பேண்ட் ஸ்டிராப் உடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வரும்.

அதேபோல் 1.96-இன்ச் பெரிய எச்டி டிஸ்பிளே ஸ்கிரீன் கொண்டுள்ளது இந்த அசத்தலான போட் வேவ் எலிவேட் ஸ்மார்ட்வாட்ச். மேலும் கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர ப்ளூடூத் காலிங் வசதி, அதிக தரமுள்ள இன்-பில்ட் மைக், டயல் பேட், காண்டாக்ட்களை ஸ்டோர் செய்து கொள்ளும் வசதி எனப் பல் சிறப்பான அம்சங்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ளன.

இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உடல்நல விவரங்களை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அதாவது இதில் இதயத் துடிப்பு சென்சார், SpO2, ஸ்லீப் ட்ராக்கர் மற்றும் 50-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. அதேபோல் IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது இந்த அசத்தலான போட் ஸ்மார்ட்வாட்ச்.

வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போட் வேவ் எலிவேட் ஸ்மார்ட்வாட்ச். இதுதவிர லைவ் கிரிக்கெட் ஸ்கோர்கள், கேமரா கண்ட்ரோல், வானிலை, மியூசிக் கண்ட்ரோல், அலாரம், கவுண்டவுன், ஸ்டாப்வாட்ச், டிஎன்டி, ஃபைண்ட் மை ஃபோன் உள்ளிட்ட அசத்தலான அம்சங்கள் இந்த ஸ்மார்ட் வாட்ச் மாடலில் உள்ளன.

போட் வேவ் எலிவேட் ஸ்மார்ட்வாட்ச் ஆனது ஐந்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் பேட்டரியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிரே, பிளாக், கிரீன் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் போட் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.2,299 விலையில் இந்த போட் வேவ் எலிவேட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்க முடியும். வரும் செப்டம்பர் 6-ம் தேதி அமேசானில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்க முடியும்.

வாங்கி கட்டுவீங்க.. மலிவு விலையில் போட் ஸ்மார்ட்வாட்ச்..

சமீபத்தில் போட் ஸ்மார்ட் ரிங் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது போட் நிறுவனம். இதன் விலை ரூ.8,999-ஆக உள்ளது. குறிப்பாக போட் ஸ்மார்ட் ரிங்கில் (boAt Smart Ring) 5 ஹெல்த் மானிட்டர்கள், வயர்லெஸ் சார்ஜிங், டச் கன்ட்ரோல் போன்ற வியக்க வைக்கும் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. போட் ஸ்மார்ட் ரிங் மூலம் கேமரா கன்ட்ரோல் (Camera Control) மற்றும் மியூசிக் கன்ட்ரோல் (Music Control) செய்து கொள்ளலாம்.

இந்த ரிங் 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரிங்குக்கான போட் ரிங் ஆப் (boAt Ring App) கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. இந்த போட் ரிங் பிரீமியம் மெட்டல் (Metal) அவுட் பாடி கொண்டுள்ளது. சென்சார்கள் மற்றும் உட்பகுதியில் செராமிக் (Ceramic) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த போட் ரிங் 7, 9 மற்றும் 11 ஆகிய விரல் அளவுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Wave Elevate with 1.96 display launched in India: check price, specifications, sale date and more : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X