பக்குவமாக செஞ்சு ரக்டு லுக்கில் கலக்கும் BoAt Wave Armor! எல்லா பாய்ஸும் வாங்க வேண்டிய வாட்ச் இதான்!
BoAt நிறுவனம் BoAt Wave Armor என்ற புதிய ஸ்மார்ட் வாட்ச் (smartwatch) சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் சாதனம், இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் வருகிறது. இதன் அம்சங்களை பற்றி பார்க்கலாம்.
ரூ..2,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு தான் இந்தியாவில் மவுசு ஜாஸ்தியாக இருக்கிறது. இந்த விலையில் பிரிவில் என்ன தான் பல ஸ்மார்ட் வாட்ச் மாடல்கள் வாங்குவதற்குக் கிடைத்தாலும், போட் நிறுவனம் இப்போது இந்த விலை பிரிவில் புதிய ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. இந்த புதிய சாதனம் பற்றி விபரங்களை பார்க்கலாம்.

போட் வேவ் ஆர்மர் ஸ்மார்ட் வாட்ச் சாதனம் 240 × 284 தெளிவுத்திறனுடன் 1.83″ இன்ச் கொண்ட எச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 550 நிட்ஸ் பீக் பிரைட்னெஸ் உடன் வருகிறது. BoAt Wave Armor கடிகாரத்தில் ஸ்ப்ளிட் டிஸ்பிளே விட்ஜெட் அம்சமும் உள்ளது. இது பயனர்கள் ஒரே நேரத்தில் பல அம்சங்களை அணுக உதவுகிறது.
போட் வேவ் ஆர்மர் (BoAt Wave Armour) ஸ்மார்ட் வாட்ச் ஜின்க் அலாய் பாடியைக் கொண்டுள்ளது. இது ஸ்மார்ட் வாட்ச்சை சேதப்படுத்தாமல் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்கிறது. இது அவுட்டோர் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைகிறது. இந்த புதிய BoAt Wave Armour ஸ்மார்ட் வாட்ச் சாதனம் IP67 மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்துடன் வருகிறது.
இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச்சில் பல அம்சங்கள் இருந்தாலும், இது ஒரு விரிவான உடல்நலம் மற்றும் ஆரோக்கிய கண்காணிப்பு அமைப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனம் அதன் பயனர்களின் இதயத் துடிப்பு, SPO2 மற்றும் லீப் மானிட்டர் போன்றவற்றை மிகவும் துல்லியமாக கண்காணிக்கிறது.

ஸ்மார்ட் வாட்ச் என்றாலே, அதில் ஸ்போர்ட்ஸ் மோட் இருக்க வேண்டும் என்பதை பயனர்கள் அதிகமாக விரும்புகின்றனர். பலதரப்பட்ட மக்களுக்கு, பல விதமான விளையாட்டில் ஈடுபாடு உள்ளதினால், வெவ்வேறு விதமான ஸ்போர்ட்ஸ் மோட்களை மக்கள் பயன்படுத்த விரும்புகின்றனர். இதை உணர்ந்த நிறுவனம் இப்போது அதன் BoAt Wave Armor ஸ்மார்ட் வாட்ச்சில் கிரிக்கெட், ஹைகிங், ஸ்விமிங் போன்ற பலவற்றை உள்ளடக்கிய 20+ ஸ்போர்ட்ஸ் மோட்களைக் கொண்டுள்ளது.
BoAt Wave Armour ஆனது ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது. இந்த BoAt Wave Armour ஸ்மார்ட் வாட்ச் சாதனம் புளூடூத் காலிங் அம்சத்துடன் வருகிறது. இந்த அம்சத்துடன் ஸ்மார்ட் வாட்ச் சாதனம் 2 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கும். இணைப்பைப் பொறுத்தவரை, ஸ்மார்ட்வாட்ச்சில் புளூடூத் 5.2 அம்சத்துடன் வருகிறது. இந்த வாட்சில் இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கரும் உள்ளது.
BoAt Wave Armour சாதனம் ஆனது இப்போது boAt lifestyle.com மற்றும் Amazon.in வழியாக வாங்க கிடைக்கிறது. இது ரூ.1,899 என்ற சிறப்பு அறிமுக விலையில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப, Active Black மற்றும் Olive Green போன்ற இரண்டு வண்ண விருப்பங்களிலிருந்து தேர்வு செய்ய இது இப்போது கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








