Home
Gadgets

நம்ப முடியாத மலிவு விலையில் Boat Watch Storm அறிமுகம்..இவ்வளவு சீப்பா! அப்போ நாமளும் ஒன்னு வாங்கலாமே

உலக முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் உள்ள பல நிறுவனங்கள் இப்பொழுது ஸ்மார்ட்போன் உடன் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் ஆர்வம் காட்டிவருகிறது. இந்தியாவில் இந்த நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் சந்தையை உருவாக்கிய பின்பு, தற்பொழுது ஸ்மார்ட் வாட்ச் சாதனங்களுக்கென்று ஒரு முக்கிய இடத்தை அண்மையில் உருவாக்கி வருகிறது. இப்பொழுது இந்த வரிசையில் போட் (Boat) நிறுவனமும் தனது முதல் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது.

போட் வாட்ச் ஸ்டோர்ம் (Boat Watch Storm)

போட் வாட்ச் ஸ்டோர்ம் (Boat Watch Storm)

மொபைல் பாகங்கள் உருவாக்கும் நிறுவனமான போட் நிறுவனம், இந்த வாரம் போட் வாட்ச் ஸ்டோர்ம் (Boat Watch Storm) எனப்படும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்சின் முதல் விற்பனை வரும் அக்டோபர் 29 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட்டில் நடைபெறும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் நம்ப முடியாத மலிவு விலையில் விற்பனைக்கு வருகிறது என்பதே கேட்ஜெட் பிரியர்களுக்கான குட் நியூஸ்.

நூற்றுக்கு மேற்பட்ட டிஸ்பிளே பேஸ் டிசைன்ஸ்

நூற்றுக்கு மேற்பட்ட டிஸ்பிளே பேஸ் டிசைன்ஸ்

Boat Watch Storm சாதனம் 1.3' இன்ச் 2.5D கர்வுடு டச் டிஸ்பிளேவுடன் கூடிய மெட்டல் பாடி கேஸ் உடன் வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட வாட்ச் பேஸ்க்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்சில் இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு மற்றும் இரத்த அழுத்த சென்சார் போன்ற SpO2 சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. மலிவு விலையில் பல அம்சங்களுடன் இது விற்பனைக்கு வருகிறது.

9 ஸ்போர்ட்ஸ் மோடு

9 ஸ்போர்ட்ஸ் மோடு

போட் வாட்ச் ஸ்டோர்ம் சாதனத்தில் 24/7 இதய துடிப்பு மானிட்டரும் பொருத்தப்பட்டுள்ளது. வாட்ச் OTA களைப் பெறும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இது கூடுதல் அம்சங்களையும், ஸ்மார்ட் வாட்சிற்கான பேஸ் டயல்களை தேர்வு செய்ய பயனர்களுக்கு அனுமதி வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் தினசரி செயல்பாட்டு டிராக்கர் மற்றும் ரன்னிங், வாக்கிங், ஸ்விமிங், ஹைகிங், கிளைம்பிங், ஒர்க்அவுட், டிரெட்மில், யோகா மற்றும் பைக்கிங் உள்ளிட்ட 9 ஸ்போர்ட் மோடுகள் உள்ளது.

10 நாள் பேட்டரி பயன்

10 நாள் பேட்டரி பயன்

இந்த ஸ்மார்ட் வாட்சில் இசை கட்டுப்பாட்டு அமைப்பும் உள்ளது, எனவே நீங்கள் ஒரு பாடலை பிளே செய்ய, பாஸ் செய்ய, பார்வேர்ட் மற்றும் ரீவைண்ட் செய்ய இதைப் பயன்படுத்தலாம். இந்த ஸ்மார்ட் வாட்ச் 10 நாள் பேட்டரி பயனுடன், 5ATM மதிப்பிடப்பட்டுள்ள வாட்டர் ரெசிஸ்டன்ஸ் சான்றுடன் வருகிறது. இது 50 மீட்டர் ஆழத்தில் உள்ள நீரில் கூட ஸ்மார்ட் வாட்சை பாதுகாப்பை வைக்கிறது.

நம்ப முடியாத மலிவு விலை

நம்ப முடியாத மலிவு விலை

ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் போட் நிறுவனம் நுழைவது இதுவே முதல் முறையாகும். இந்நிறுவனம் இப்போது வரை ஆடியோ சாதனங்களைக் குறைந்த விலையில் அற்புதமான தரத்தில் அறிமுகப்படுத்தி வந்தது. இந்த நிறுவனம் இப்பொழுது நம்ப முடியாத மலிவு விலையான ரூ. 1,999 என்று விலையில் இந்த புதிய Boat Watch Storm சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் வாட்ச் பிகினர்களுக்கு இது ஒரு நல்ல சாய்ஸ்.

Best Mobiles in India

English summary
Boat Watch Storm To Go On Sale From October 29th On Flipkart With Unbelievable Cheap Price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X