முதல் நாள் விற்பனையில் அனைவரின் கவனத்தை ஈர்த்த Boat Watch Storm.. விலை தான் காரணமா?

|

இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள், அசைக்க முடியாத ஸ்மார்ட்போன் சந்தையை உருவாக்கிய பின்பு, தற்பொழுது ஸ்மார்ட் வாட்ச் சாதனங்களுக்கென்று ஒரு முக்கிய இடத்தை அண்மையில் உருவாக்கி வருகிறது. இப்பொழுது இந்த வரிசையில் போட் (Boat) நிறுவனமும் தனது முதல் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது.

போட் ஸ்மார்ட்வாட்ச்

போட் ஸ்மார்ட்வாட்ச்

இந்த புதிய போட் வாட்ச் ஸ்டோர்ம் (Boat Watch Storm) எனப்படும் சாதனம் இன்று முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்சின் முதல் இன்று மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட்டில் நடைபெற்றது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் நம்ப முடியாத மலிவு விலையில் விற்பனைக்கு வந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் விலை மற்றும் அம்சம் கேட்ஜெட் பிரியர்களுக்கான குட் நியூஸ் என்பதில் சந்தேகமில்லை.

100க்கு மேற்பட்ட டிஸ்பிளே பேஸ்

100க்கு மேற்பட்ட டிஸ்பிளே பேஸ்

Boat Watch Storm சாதனம் 1.3' இன்ச் 2.5D கர்வுடு டச் டிஸ்பிளேவுடன் கூடிய மெட்டல் பாடி கேஸ் உடன் வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட வாட்ச் பேஸ்க்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்சில் இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு மற்றும் இரத்த அழுத்த சென்சார் போன்ற SpO2 சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. மலிவு விலையில் பல அம்சங்களுடன் இது விற்பனைக்கு வருகிறது.

2020 அடுத்த அற்புத நிகழ்வு: அக்டோபர் 31 வானில் தெரியும் ப்ளூ மூன்- மிஸ் பண்ணாதிங்க!

24/7 இருதய கண்காணிப்பு

24/7 இருதய கண்காணிப்பு

போட் வாட்ச் ஸ்டோர்ம் சாதனத்தில் 24/7 இதய துடிப்பு மானிட்டரும் பொருத்தப்பட்டுள்ளது. வாட்ச் OTA-களைப் பெறும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இது கூடுதல் அம்சங்களையும், ஸ்மார்ட் வாட்சிற்கான பேஸ் டயல்களை தேர்வு செய்ய பயனர்களுக்கு அனுமதி வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் தினசரி செயல்பாட்டு டிராக்கர் மற்றும் ரன்னிங், வாக்கிங், ஸ்விமிங், ஹைகிங், கிளைம்பிங், ஒர்க்அவுட், டிரெட்மில், யோகா மற்றும் பைக்கிங் உள்ளிட்ட 9 ஸ்போர்ட் மோடுகள் உள்ளது.

இந்த விலையில் 5ATM சான்றா?

இந்த விலையில் 5ATM சான்றா?

இந்த ஸ்மார்ட் வாட்சில் இசை கட்டுப்பாட்டு அமைப்பும் உள்ளது, எனவே நீங்கள் ஒரு பாடலை பிளே செய்ய, பாஸ் செய்ய, பார்வேர்ட் மற்றும் ரீவைண்ட் செய்ய இதைப் பயன்படுத்தலாம். இந்த ஸ்மார்ட் வாட்ச் 10 நாள் பேட்டரி பயனுடன், 5ATM மதிப்பிடப்பட்டுள்ள வாட்டர் ரெசிஸ்டன்ஸ் சான்றுடன் வருகிறது. இது 50 மீட்டர் ஆழத்தில் உள்ள நீரில் கூட ஸ்மார்ட் வாட்சை பாதுகாப்பை வைக்கிறது.

நம்ப முடியாத விலை

நம்ப முடியாத விலை

ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் போட் நிறுவனம் நுழைவது இதுவே முதல் முறையாகும். இந்நிறுவனம் இப்போது வரை ஆடியோ சாதனங்களைக் குறைந்த விலையில் அற்புதமான தரத்தில் அறிமுகப்படுத்தி வந்தது. இந்த நிறுவனம் இப்பொழுது நம்ப முடியாத மலிவு விலையான ரூ. 1,999 என்று விலையில் இந்த புதிய Boat Watch Storm சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் வாட்ச் பிகினர்களுக்கு இது ஒரு நல்ல சாய்ஸ்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Boat Watch Storm goes on sale from Today in Flipkart : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X