Home
Gadgets

பின்றானே இவன்.. AMOLED டிஸ்பிளே.. 3ATM ரேட்டிங்.. 10 நாட்கள் பேட்டரி.. HRV டிராக்கிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் போட் நிறுவனத்தின் போட் வேலர் வாட்ச் 1ஆர் (boAt Valour Watch 1R) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அமோலெட் டிஸ்பிளே, 3 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ், 10 நாட்களுக்கு பேக்கப் போன்ற பீச்சர்களுடன் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த போட் வேலர் வாட்ச் 1ஆர் மாடலின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

போட் ஸ்மார்ட்வாட்ச்

போட் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் இந்தியாவில் இருக்கும் பட்ஜெட் பிரியர்களிடையே தனியிடம் பிடித்துள்ளது. சாம்சங், ஆப்பிள் போன்ற பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் லுக் இந்த பட்ஜெட் மாடல்களில் பார்க்க முடிகிறது. அதேபோல ஹெல்த் பீச்சர்களிலும் பிரீமியம் மாடல்களுக்கு கிட்டத்தட்ட நிகராக இருக்கிறது. இதனாலேயே விற்பனையிலும் வரவேற்பை பெறுகிறது.

பின்றானே இவன்.. AMOLED டிஸ்பிளே.. 3ATM ரேட்டிங்.. 10 நாட்கள் பேட்டரி!

இப்போது, போட் வேலர் வாட்ச் 1ஆர் மாடலை இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. எச்ஆர்வி டிராக்கிங், விஓ2 மேக்ஸ் மெசர்மென்ட், எஸ்பிஓ2 டிராக்கிங், ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கிங், ஸ்லீப் டிராக்கிங் உள்ளிட்ட பெரும்பாலான ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் டிராக்கர்களை கொடுத்து உள்ளது. 700+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

ஏஐ கோச் மட்டுமல்லாமல், ஆக்டிவிட்டிகளின் போது, ஆட்டோமேட்டிக் டிடெக்சன் கொடுக்கப்பட்டு உள்ளது. அலுமினியம் பாடியில் பிரீமியம் மெட்டாலிக் லுக் கொடுக்கிறது. மேட் பினிஷிங் கிடைப்பதால், ரக்கட் லுக்கை விரும்பும் ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களுக்கு பக்காவான மாடலாகவும் இந்த போட் வேலர் வாட்ச் 1ஆர் ஸ்மார்ட்வாட்ச் இருக்கிறது.

ஹெல்த் பீச்சர்கள்

எச்ஆர்சி (HRV) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஹார்ட் ரேட் வேரியபிலிட்டி (Heart Rate Variability) கிடைக்கிறது. ஆட்டோமேட்டிக் ஹார்ட் ரேட் மானிட்டரிங் வருவதால், 24 மணி நேரமும் ஹார்ட் ரேட் மானிட்டர் செய்யப்படும். பாடியில் ஆக்ஸிஜன் அமௌண்ட்டை விஓ2 மேக்ஸ் மெசர்மென்ட் (VO₂ Max Measurement) கிடைக்கிறது. எஸ்பிஓ2 மானிட்டரிங் (SpO₂ Monitoring) உள்ளது.

ஸ்ட்ரெஸ் மற்றும் ஸ்லீப் லெவல்களை மானிட்டரிங் செய்து கொள்ளலாம். ரன்னிங், ஜாக்கிங், வாக்கிங், சைக்கிளிங் உள்ளிட்ட 700+ ஆக்டிவிட்டி மோட்கள் கிடைக்கின்றன. இதில் குறிப்பிட்ட மோட்கள் ஆட்டோ டிடெக்டிங் கொண்டு உள்ளது. ஆகவே, அந்த ஆக்டிவிட்டியின் டேட்டா ஆட்டோமேட்டிக்காக ஸ்டோர் செய்யப்பட்டு, கொடுக்கப்படும்.

போட் வேலர் வாட்ச் 1ஆர் அம்சங்கள்

பிரீமியம் டிஸ்பிளே அவுட்புட் கொடுக்கும்படி 1.43 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 3டி கர்வ்ட் கிளாஸ் கிடைப்பதால், பிரீமியம் லுக் கிடைக்கும். மேலும், 1,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. அலுமினியம் பாடி மற்றும் லெதர் ஸ்ட்ராப் உள்ளது. சிலிகான் மற்றும் மெட்டாலிக் ஸ்ட்ராப் மாடல்களும் கிடைக்கின்றன.

3ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக போட் வேலர் வாட்ச் 1ஆர் ஸ்மார்ட்வாட்ச் இருக்கிறது. எக்ஸ்2 ப்ராசஸர் (X2 Processor) உள்ளது. ஏஐ கோச் (AI Coach) கிடைக்கிறது. 100+ கிளவுட் பேஸ்டு வாட்ச் பேஸ்கள் (Cloud Watch Faces) கிடைக்கின்றன. சிங்கிள் சார்ஜில் 10 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படியான பேட்டரியை இந்த போட் வேலர் வாட்ச் 1ஆர் கொடுக்கிறது.

போட் வேலர் வாட்ச் 1ஆர் விலை

ரூ.4,999 விலைக்கு இந்த போட் வேலர் வாட்ச் 1ஆர் ஸ்மார்ட்வாட்ச் வெளியாகி இருக்கிறது. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் போட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலும் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. அப்சிடியன் பிளாக் (Obsidian Black), ஸ்டீல் பிளாக் (Steel Black), இம்பீரியல் லெதர் (Imperial Leather) மற்றும் மற்றும் ஓக் லெதர் (Oak Leather) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Valour Watch 1R With AMOLED Display Launched In India Under Rs 5000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X