Home
Gadgets

அமேசான் மிரளுது.. பட்ஜெட்ல அமோலெட் டிஸ்பிளே.. மெட்டலிக் பாடி.. IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட்.. எந்த மாடல்?

மெட்டாலிக் வேரியண்ட்டில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, வாய்ஸ் அசிஸ்டன்ட், ஹெல்த் மானிட்டர், IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற தட்டித்தூக்கும் அம்சங்களை கொண்ட போட் அல்டிமா செலக்ட் (boAt Ultima Select) பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

போட் அல்டிமா செலக்ட் அம்சங்கள் (boAt Ultima Select Specifications): இந்த போட் மாடலானது, அல்ட்ரா பிரீமியம் லூக்கில் மெட்டல் பாடி (Premium Metal Body) மற்றும் மெட்டல் ஸ்ட்ராப் (Metal Strap) கொண்டிருக்கிறது. அதோடு ஃபங்ஷ்னல் கிரவுண் (Functional Crown) வருகிறது.

அமோலெட் டிஸ்பிளே.. மெட்டலிக் பாடி.. IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் வாட்ச்!

2.01 இன்ச் (410 x 502 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (Always-on Display) மாடலாகும். ஆகவே, இந்த போட் அல்டிமா செலக்ட் மாடலில் அவுட்டோரிலும் மிரளவிடும் டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

100+ கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (Customizable Watch Faces) வருகின்றன. இந்த போட் அல்டிமா செலக்ட் வாட்ச்சில் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) வருகிறது. அதோடு குயிக் டயல் பேட் (Quick Dial Pad), 10 காண்டாக்ட்ஸ் (Contacts) ஸ்டோரேஜ் சப்போர்ட் உள்ளது.

ஜாக்கிங், ரன்னிங், வாக்கிங், சைக்கிளிங் போன்ற 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Mode) வருகின்றன. இந்த போட் அல்டிமா செலக்ட் மாடலில் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் (Voice Assistant Support) வருகிறது. IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water resistant) கொண்டிருக்கிறது.

இந்த போட் வேரியண்ட்டில் ஹெல்த் மானிட்டரிங் (Health Monitoring) மற்றும் ஹெல்த் டிராக்கிங் (Health Tracking) சப்போர்ட் கொண்ட ஹெல்த் சூட் (Health Suite) வருகிறது. ஆகவே, ஹார்ட்ரேட் மானிட்டர் (Heart Rate Monitor) மற்றும் எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) வருகின்றன.

அதேபோல ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking) ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கிங் (Stress Level Tracking), டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கிங் (Daily Activity Tracking) ஆகியவை வருகின்றன. அதோடு ப்ரீத் டிரெய்னிங் (Breath Training) சப்போர்ட் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட பெரும்பாலான ஹெல்த் சப்போர்ட் கவர் செய்யப்பட்டுள்ளது.

இந்த போட் அல்டிமா செலக்ட் மாடலில் பேமெண்ட் கியூஆர் (Payment QR) சப்போர்ட் வருகிறது. அதேபோல கேமரா கன்ட்ரோல் (Camera Control) மற்றும் மியூசிக் கன்ட்ரோல் (Music Control) சப்போர்ட் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், டிஎன்டி (DND), ஃபைண்ட் மை போன் (Find My Phone), பில்ட்-இன் கேம்ஸ் (Built-in Games) சப்போர்ட் வருகிறது.

மேலும், வெதர் அப்டேட் (Weather Update), அலாரம் (Alarm), கவுண்ட்டவுன் (Countdown), ஸ்டாப்வாட்ச் (Stopwatch) போன்ற பீச்சர்கள் கொண்டிருக்கிறது. இந்த போட் அல்டிமா செலக்ட் வேரியண்ட்டின் பேட்டரி 5 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கக்கூடியது. அதுவே ப்ளூடூத் காலிங் மோடில் 2 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும்.

இந்த வாட்ச்சில் ஸ்டீல் பிளாக் (Steel Black), டீப் ப்ளூ (Deep Blue), கூல் கிரே (Cool Grey) மற்றும் ஆக்டிவ் பிளாக் (Active Black) ஆகிய 4 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதன் விலை ரூ.2,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருகிறது. பிப்ரவரி 9ஆம் தேதி முதல் ஆர்டர் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Ultima Select Launched Under Rs 3000 Sale From February 9 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X