ஆளுக்கு 1 ஆர்டர்.. 7 நாட்கள் பேட்டரி.. ப்ளூடூத் காலிங்.. அறிமுகமானது புதிய boAt ஸ்மார்ட்வாட்ச்.. எந்த மாடல்?
போட் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய போட் அல்டிமா ரீகல் (boAt Ultima Regal) ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது போட் நிறுவனம். இதன் விலை மற்றும் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.
போட் அல்டிமா ரீகல் அம்சங்கள் (boAt Ultima Regal Specifications): 2.0-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் போட் அல்டிமா ரீகல் ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் AOD ஆதரவு, 1000 நிட்ஸ் பிரைட்னஸ், 466 x 466 பிக்சல்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. பின்பு இதுவொரு ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (Always-on Display) மாடலாகும். அதேபோல் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த டிஸ்பிளே.

100-க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ்கள் கொண்டுள்ளது இந்த புதிய போட் ஸ்மார்ட்வாட்ச். அதேபோல் இதில் ப்ளூடூத் காலிங் செய்து கொள்ள பில்ட்-இன் மைக்ரோபோன் (Built-in Microphone) மற்றும் ஸ்பீக்கர் (Speaker) வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போட் நிறுவனம்.
வெதர் அப்டேட்ஸ் (Weather Updates), ஸ்டாப்வாட்ச் (Stopwatch), அலாரம் (Alarm), மியூசிக் கன்ட்ரோல் (Music Control) மற்றும் கேமரா கன்ட்ரோல் (Camera Control), ஃபைண்ட் மை போன் (Find My Phone), டின்டி மோட் (DND Mod) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ளன.
ஹார்ட் ரேட் மானிட்டரிங் (Health Rate Monitor), ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking), எஸ்பிஓ2 மானிட்டரிங் (SpO2 Monitor), ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கர் (Stress Level Tracker), ஆக்டிவிட்டி டிராக்கர் (Activity Tracking) போன்ற பல தரமான அம்சங்கள் இந்த புதிய போட் அல்டிமா ரீகல் மாடலில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது Crest App Health Ecosystem உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன
அதேபோல் போட் அல்டிமா ரீகல் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட் மோட்கள் (Sports Modes) வருகின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ்(Emergency SOS) சப்போர்ட் வருகிறது. இதுதவிர IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water and Dust Resistance) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய போட் ஸ்மார்ட்வாட்ச்.

போட் அல்டிமா ரீகல் ஆனது 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் புளூடூத் அழைப்பு மற்றும் ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (Always-on Display) அம்சங்களைப் பயன்படுத்தி வந்தால் 5 நாள் பேட்டரி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆக்டிவ் பிளாக் (Active Black), ஸ்டீல் பிளாக் (Steel Black), கூல் கிரே (Cool Grey), சபையர் ப்ளூ (Sapphire Blue), செர்ரி ப்ளாசம்(Cherry Blossom)ஆகிய கலர்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் வாங்க கிடைக்கும்.
குறிப்பாக போட் அல்டிமா ரீகல் ஆனது ரூ.2499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது பிளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களில் இந்த புதிய போட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்க முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








