அமோலெட் கர்வ்ட் டிஸ்பிளே.. 240mAh பேட்டரி.. ஆனால், பட்ஜெட் விலை.. எந்த மாடல்?
போட் (boAt) நிறுவனத்தின் புதிய போட் ஸ்டோர்ம் பிளஸ் (boAt Storm Plus) ஸ்மார்ட்வாட்ச் கர்வ்ட் டிஸ்பிளே டிசைனில் பின்னியெடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், 240mAh பேட்டரி, கேமரா கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களில் அசத்துகிறது. இந்த வாட்ச் அறிமுக சலுகையாக கம்மி விலைக்கு விற்பனைக்கு வருகிறது.
இப்போது, வரும் ஸ்மார்ட்வாட்ச்கள் புதுப்புது அம்சங்களை கொண்டிருக்கின்றன. அதற்கேற்ப விலையும் கூடுதலாகவே இருக்கிறது. ஆனால், போட் நிறுவனம் புது ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்யும்போது, அறிமுக சலுகையாக பாதிக்குப்பாதி கம்மி விலையில் கொடுக்கிறது. அந்த வரிசையில், போட் ஸ்டோர்ம் பிளஸ் வாட்ச் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை மற்றும் முழு அம்சங்கள் பின்வருமாறு.

போட் ஸ்டோர்ம் பிளஸ் அம்சங்கள் (boAt Storm Plus Specifications): இந்த போட் ஸ்மார்ட்வாட்ச் 1.78 இன்ச் (368 x 448 பிக்சல்கள்) 2.5டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் ஆல்வேய்ஸ் ஆன் ஸ்கிரீன் மற்றும் 700 நிட்ஸ் பிரைட்னஸ் வருகிறது.
100 க்கும் மேற்பட்ட கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (Customizable Watch Faces) இருக்கின்றன. ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) உடன் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) வருகிறது. அதோடு குயிக் டயல் பேட் (Quick Dial Pad) வருகிறது. இந்த டயல் பேடில் 10 போன் நம்பர்களை சேமித்து வைக்கலாம்.
ரன்னிங், சைக்கிளிங், ஜாக்கிங் போன்ற 100 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Mode) வருகின்றன. IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust and Water resistant) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போட் ஸ்டோர்ம் பிளஸ் வாட்ச்சில் 5 ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) வருகின்றன.
அந்த வகையில், ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர் (Blood Oxygen Level Monitor), டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கர் (Daily Activity Tracker), மென்சுரல் டிராக்கர் (Menstrual Tracker), செடன்டரி ரீமைண்டர் (Sedentary Remainder) ஆகிவை இருக்கின்றன. இந்த போட் வாட்ச்சில் 240mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் தொடர்ந்து 7 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். அதேபோல ப்ளூடூத் காலிங் பயன்படுத்தினால், 2 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். மேலும், கேமரா கன்ட்ரோல் (Camera Control), மியூசிக் கன்ட்ரோல் (Music Control), வெதர் அப்டேட் (Weather Update), அலாரம் (Alarm), கவுண்டவுன் (Countdown), ஸ்டாப்வாட்ச் (Stopwatch), டிஎன்டி (DND), பைண்ட் மை போன் (Find My Phone) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன.
இந்த வாட்ச் சிலிகான் ஸ்ட்ராப் (Silicone Strap) கொண்டுள்ளது. அதோடு ஜெட் பிளாக் (Jet Black), கன்மென்டல் கிரே (Gunmetal Grey), ரோஸ் பிங்க் (Rose Pink), ஆலிவ் கிரீன் (Olive Green) ஆகிய நான்கு கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இதனை பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் போட் வெப்சைட்டில் (boAt Website) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
வரும் ஜூலை 29ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். இந்த வாட்ச்சின் விலை ரூ.8,000க்கும் மேல் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அறிமுக சலுகையாக ரூ.2,999க்கு கிடைக்கும் என்று போட் நிறுவனம் அறிவித்துள்ளது. கம்மியான பட்ஜெட்டில் அமோலெட் டிஸ்பிளே, நல்ல பேட்டரி பேக்கப் உள்ளிட்ட அம்சங்கள் வேண்டும் என்றால், இந்த போட் ஸ்டோர்ம் பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் நல்ல தேர்வாக இருக்கும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








