பின்றானே இவன்.. ரூ.1,299 போதும்.. 1.83 இன்ச் டிஸ்பிளே.. 550mAh பேட்டரி.. IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?
சிங்கிள் சார்ஜில் 15 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும் 550mAh பேட்டரி மட்டுமல்லாமல், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 1.83 இன்ச் டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங், ஹெல்த் மானிட்டரிங், வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களுடன் போட் ஸ்டார்ம் இன்பினிட்டி (boAt Storm Infinity) களமிறங்கி இருக்கிறது. அடிமட்ட பட்ஜெட்டில் மல்டிபிள் ஸ்ட்ராப் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கும் இந்த போட் ஸ்டார்ம் இன்பினிட்டி மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிரீமியம் நைலான் மற்றும் சிலிகான் ஸ்ட்ராப் கொண்ட மெட்டாலிக் பாடி கொடுக்கிறது. ஆக்டிவ் பிளாக் (Active Black), செர்ரி பிளாசம் (Cherry Blossom), பிரவுன் (Brown), டீப் ப்ளூ (Deep Blue), ஜேட் கோல்டு (Jade Gold), சில்வர் மிஸ்ட் (Silver Mist), ஸ்போர்ட்ஸ் பிளாக் (Sports Black) மற்றும் ஸ்போர்ட்ஸ் கிரீன் (Sports Green) ஆகிய 8 கலர்கள் கிடைக்கிறது.

போட் ஸ்டார்ம் இன்பினிட்டி அம்சங்கள் (boAt Storm Infinity Specifications): இந்த போட் மாடலில் 1.83 இன்ச் (240 x 284 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், ஃபிளிக்-டூ-வேக் கெஸ்ச்சர் (Flick-to-wake Gesture) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, டச் செய்து ஆன் செய்ய வேண்டாம்.
ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 15 நாட்களுக்கு (ஹெவி யூசேஜ்) பேக்கப் கிடைக்கிறது. ஸ்டான்ட்-பை மோடில் 20 நாட்களுக்கு பேக்கப் எதிர்பார்க்கலாம். மாதத்துக்கு 2 முறை சார்ஜ் செய்தால் போதும். இதற்காக 550mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு ஏஎஸ்ஏபி சார்ஜிங் (ASAP Charging) சப்போர்ட் உள்ளது. 1 மணி நேரத்தில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
இந்த போட் ஸ்டார்ம் இன்பினிட்டி மாடலில் பிடி வி5.4 (BT v5.4) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஆகவே, ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) மட்டுமல்லாமல், டயல் பேட் (Dial Pad), இன்-பில்ட் ஸ்பீக்கர் & மைக் (In-built Speaker & Mic) கிடைக்கிறது. இதுபோக 20 கன்டாக்ட்களை சேவ் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். எமர்ஜென்சி எஸ்ஓஎஸ் அலெர்ட் சப்போர்ட் கொடுக்கிறது.
ரன்னிங், ஜாக்கிங், வாக்கிங், சைக்கிளிங் போன்ற ஆக்டிவிட்டி டிராக்கர்களுடன் (Activity Tracker) 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) வருகின்றன. இந்த மோட்கள் மூலம் ஸ்டெப்ஸ், டிஸ்டன்ஸ், கலோரி போன்றவற்றை ரியல்-டைமில் தெரிந்து கொள்ளாலாம். இந்த போட் ஸ்டார்ம் இன்பினிட்டி மாடலில் ஐபி68 ரெசிஸ்டன்ஸ் (IP68 Resistance) கிடைக்கிறது.
ஹெல்த் மானிட்டர்களை பொறுத்தவரையில், ஹார்ட் ரேட் மானிட்டரிங் (Heart Rate Monitoring), எஸ்பிஓ2 டிராக்கர் (SpO2 Tracker), ஸ்லீப் மானிட்டரிங் (Sleep Monitoring), ஸ்ட்ரெஸ் லெவல் மானிட்டரிங் (Stress Level Monitoring) கிடைக்கிறது. இதுபோக மென்சுரல் டிராக்கிங் (Menstrual Tracking) மற்றும் பிரீத் பிராக்டிஸ் கிடைக்கிறது. நோட்டிபிகேஷன்கள் சப்போர்ட் உள்ளது.
ஃபைண்ட் மை டிவைஸ் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொடுக்கிறது. இந்த போட் ஸ்டார்ம் இன்பினிட்டி மாடலுக்கு போட் கிரெஸ்ட் ஆப் (boAt Crest App) சப்போர்ட் வருகிறது. ஆகவே, ஹெல்த் டேட்டாக்களை ஆப் மூலமும் டிராக் செய்து கொள்ளலாம். யூடிலிட்டிகளை பொறுத்தவரை அலாரம், வெதர் அப்டேட் மற்றும் கேம்ஸ் கிடைக்கிறது.
மேலும், மியூசிக் கன்ட்ரோல், கேமரா கன்ட்ரோல் போன்றவையும் கொடுக்கிறது. இந்த போட் ஸ்டார்ம் இன்பினிட்டி மாடலின் விலை ரூ.1,299ஆக இருக்கிறது. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் போட் ஆகிய தளங்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. கம்மி பட்ஜெட்டில் ஹெல்த் மானிட்டர்கள், அதிக யூடிலிட்டிகள் வேண்டுமானால், இதை ஆப்ஷனில் எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications








