ஆளுக்கொரு ஆர்டர்.. ரூ.1,199 பட்ஜெட்ல 680mAh பேட்டரி.. ASAP சார்ஜிங்.. IP68 ரேட்டிங்.. BT காலிங்.. எந்த மாடல்?
பிரீமியம் மாடல்களுக்கு நிகரான டிசைன் மட்டுமல்லால், இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாதபடி ஏஎஸ்ஏபி சார்ஜிங் கொண்ட 680mAh பேட்டரி, 480 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளே மற்றும் ஹார்ட் ரேட் மானிட்டரிங், ஹெல்த் IP68 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களுடன் போட் ஸ்டார்ம் இன்பினிட்டி பிளஸ் (boAt Storm Infinity Plus) ஆர்டருக்கு கிடைக்கிறது.
போட் நிறுவனமானது, ஹெட்போன்கள் மட்டுமல்லாமல், ஸ்மார்ட்வாட்ச் மாடல்களையும் பட்ஜெட்டில் களமிறக்கி வருகிறது. இப்போது, போட் ஸ்டார்ம் இன்பினிட்டி பிளஸ் மாடலை இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. டிரெண்ட்டுக்கு ஏற்ப சிலிகான் ஸ்ட்ராப் (Silicon Strap) மற்றும் நைலான் ஸ்ட்ராப் (Nylon Straps) மாடல்களில் கிடைக்க இருக்கிறது.

போட் ஸ்டார்ம் இன்பினிட்டி பிளஸ் அம்சங்கள் (boAt Storm Infinity Plus Specifications): பிரீமியம் லுக் எதிர்பார்க்கும் ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களுக்கு இந்த மாடல் பக்கா ஆப்ஷனாக இருக்கும். ஏனென்றால், மெட்டாலிக் பினிஷிங் பாடி மற்றும் ரேட்டேட்டிங் கிரவுண் (Rotating Crown) கொடுக்கிறது. நைலான் ஸ்ட்ராப் வேரியண்ட்டில் ரக்கட் லுக் கிடைக்கிறது.
கம்போர்ட் மற்றும் பிரீமியம் லுக் கொடுக்கும் பல்வேறு கலர் ஆப்ஷன்களில் சிலிகான் ஸ்ட்ராப் மாடலும் கிடைக்கிறது. வேக் கெஸ்ச்சர் (Wake Gesture) சப்போர்ட் கொண்ட 1.96 இன்ச் (240 x 296 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைப்பதால், அவுட்டோர் அவுட்புட் பக்காவாக எதிர்பார்க்கலாம்.
இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப அதிக பேக்கப் கொடுக்கும்படி 680mAh பேட்டரி கொடுக்கிறது. இந்த பேட்டரி மூலம் டிபிகல் மோடில் 30 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். ப்ளூடூத் காலிங் போன்ற ஹெவி யூசேஜ் மோடில் 20 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கிறது. ஆகவே, ஒரு மாதத்துக்கு ஒரு முறை சார்ஜ் செய்யும்படி பேக்கப் கொடுக்கிறது.
இதுபோக ஏஎஸ்ஏபி சார்ஜிங் (ASAP Charging) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, 60 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். அதேபோல வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், குறைந்தபட்சம் 4 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளாலம். ஆகவே, எமர்ஜென்சிக்கும் இந்த போட் ஸ்டார்ம் இன்பினிட்டி பிளஸ் மாடலில் பக்கா பேக்கப் கிடைக்கும்.
போட் மாடல்களில் கிடைக்கும் கிரெஸ்ட் ஆப் (boAt Crest App) சப்போர்ட் கிடைக்கிறது. ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் ஹெல்த் டிராக்கர்கள் பட்ஜெட்டைவிட கூடுதலாகவே கிடைக்கிறது. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) கிடைக்கிறது. மேலும், மென்சுரல் டிராக்கர் (Menstrual Tracker), ஸ்லீப் டிராக்கர் (Sleep Tracker) கிடைக்கிறது.
மேலும், ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கர் (Stress Level Tracker) வருகிறது. இந்த போட் ஸ்டார்ம் இன்பினிட்டி பிளஸ் மாடலில் ஃபைண்ட் மை போன், வாய்ஸ் அசிஸ்டன்ட், நோட்டிபிகேஷன்கள் போன்ற பீச்சர்களும் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் டஸ்ட், ஸ்வெட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது. இவ்வளவு பீச்சர்களை கொண்டிருந்தும் ரூ.1,199 விலைக்கு கிடைக்கிறது.
இந்த விலையில் ஆக்டிவ் பிளாக் (Active Black), செர்ரி பிளாசம் (Cherry Blossom), டீப் ப்ளூ (Deep Blue) மற்றும் கூல் கிரே (Cool Grey) ஆகிய கலர்கள் கொண்ட சிலிகான் ஸ்ட்ராப் மாடல் கிடைக்கிறது. ரூ.1,399 விலைக்கு நைலான் ஸ்ட்ராப் மாடல் கிடைக்கிறது. இதில் ஸ்போர்ட்ஸ் பிளாக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஒயிட் வருகிறது. பிளிப்கார்ட், போட் தளங்களில் ஆர்டர் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








