மொத்த மார்கெட் மிரளுது.. ஃபர்ஸ்ட் டைப்-சி ஸ்மார்ட்வாட்ச்.. AMOLED டிஸ்பிளே.. 10 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
இந்தியாவின் முன்னணி ஆடியோ மற்றும் வியரபிள்ஸ் (Wearables) பிராண்டான போட் (boAt), நாட்டின் முதல் யூஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் சப்போர்ட் கொண்ட அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் போட் ஸ்டார்ம் கால் 4 (boAt Storm Call 4) மற்றும் போட் அல்டிமா வோக் 2 (boAt Ultima Vogue 2) ஆகிய 2 மாடல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஹெட்போன்கள், இயர்பட்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் மட்டுமல்லாமல், ஸ்மார்ட்வாட்ச் மாடல்களிலும் போட் நிறுவனம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாடல்களாக போட் ஸ்டார்ம் கால் 4 மற்றும் போட் அல்டிமா வோக் 2 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. பொதுவாக மேக்னடிக் சார்ஜர்களே ஸ்மார்ட்வாட்ச்களில் கிடைக்கும்.

ஆனால், இந்த ஸ்மார்ட்வாட்ச்களில் நேரடியாக டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் மற்றும் பவர்பேங்க் போன்ற டிவைஸ்களுக்கு பயன்படுத்தும் அதே டைப்-சி கேபிளை கொண்டே இதையும் எளிதாக சார்ஜ் செய்து கொள்ளலாம். இதனால், பிரத்யேக சார்ஜை வாங்க வேண்டியது கிடையாது.
போட் ஸ்டார்ம் கால் 4 அம்சங்கள்: இந்த ஸ்டார்ம் வாட்ச், 1.96 இன்ச் டிஸ்பிளே மற்றும் 500 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இதில் எச்டி (HD) ரெசொலூஷன் கிடைக்கிரது. கன்ட்ரோல்களுக்காக ஃபங்க்ஷனல் கிரவுன்' (Functional Crown) சப்போர்ட் கிடைக்கிறது. ப்ளூடூத் காலிங் (Bluetooth calling) மற்றும் எஸ்ஓஎஸ் (SOS) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
ரன்னிங், ஜாக்கிங், சைக்கிளிங் உள்ளிட்ட 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் கிடைக்கின்றன. ஹார்ட் ரேட், எஸ்பிஓ2, ஸ்லீப் மற்றும் ஸ்ட்ரெஸ் ஆகியவற்றை டிராக் செய்ய மானிட்டர்கள் மற்றும் டிராக்கர்களை இந்த போட் ஸ்டார்ம் கால் 4 கொடுத்துள்ளது. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுத்துள்ளது.
12 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி பேட்டரி கிடைக்கிறது. இந்த போட் ஸ்டார்ம் கால் 4 ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.1,599ஆக இருக்கிறது. போட் தளத்தில் ப்ரீ-புக்கிங் செய்து கொள்ள கிடைக்கிறது. ஜூன் 12ஆம் தேதி முதல் முன்னணி ஈ-காமர்ஸ் தளங்கள் வழியாக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இதைவிட பிரீமியமாக போட் அல்டிமா வோக் 2 ஸ்மார்ட்வாட்ச் இருக்கிறது.
போட் அல்டிமா வோக் 2 அம்சங்கள்: பிரீமியம் லுக்கில் மெட்டாலிக் ஃபிரேமுடன் (Metallic Frame) இந்த வாட்ச் வருகிறது. 1.96 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் அவுட்டோரிலும் பட்டையை கிளப்பும்படி 1000 நிட்ஸ் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதிலும் ப்ளூடூத் காலிங், எஸ்ஓஎஸ் மற்றும் 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் இந்த போட் அல்டிமா வோக் 2 மாடலில் கிடைக்கின்றன.
IP68 ரேட்டிங் கொண்ட வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால் 10 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். பிரீமியம் மாடலான இந்த போட் அல்டிமா வோக் 2 வாட்ச்சின் விலை ரூ.2,799 ஆக இருக்கிறது. போட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. தனியாக சார்ஜ் வாங்க வேண்டியதில்லை என்பதால் வரவேற்பை பெறுகிறது.


Click it and Unblock the Notifications