Home
Gadgets

பொளக்குது பட்ஜெட்.. வெறும் ரூ.1,149 போதும்.. வாய்ஸ் கால்.. 300mAh பேட்டரி.. 1.96 இன்ச் டிஸ்பிளே.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 1.96 இன்ச் ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே, கிரெஸ்ட் ஆப் கன்ட்ரோல், ப்ளூடூத் காலிங் சப்போர்ட், கியூஆர் ட்ரோ, 7 நாட்களுக்கு பேக்கப், 300mAh பேட்டரி, ஹார்ட் ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 மானிட்டர் மற்றும் ஆக்டிவிட்டி டிராக்கர்கள் போன்ற பக்கா பீச்சர்களுடன் வெளியான போட் ஸ்டார்ம் கால் 3 பிளஸ் (boAt Storm Call 3 Plus) ஸ்மார்ட்வாட்ச் வெறும் ரூ.1000 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த போட் மாடலின் பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.

போட் ஸ்டார்ம் கால் 3 பிளஸ் அம்சங்கள் (boAt Storm Call 3 Plus Specifications): இந்த போட் மாடலில் 1.96 இன்ச் (240 x 288 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு வேக் கெஸ்ச்சர் (Wake Gesture) கொண்ட ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (Always-on Display) மாடலாகும். கிரவுண் கன்ட்ரோல் (Crown Control) வருகிறது. சிலிகான் (Silicone) மற்றும் மெட்டல் ஸ்ட்ராப் (Metal Straps) வருகிறது.

பொளக்குது பட்ஜெட்.. வெறும் ரூ.1,149 போதும்.. வாய்ஸ் கால்.. எந்த மாடல்?

இந்த மாடலில் கிரெஸ்பிளஸ் ஓஎஸ் (Cres+ OS) வருகிறது. ஆகவே, கிரெஸ்ட் ஆப் (Crest App) சப்போர்ட் வருகிறது. இந்த ஆப் மூலம் டிஐஒய் கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (DIY Customizable Watch Faces) கிடைக்கின்றன. வாய்ஸ் கால்களுக்காக ப்ளூடூத் வி5.2 (Bluetooth v5.2) கனெக்டிவிட்டி உடன் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) வருகிறது.

இதற்காக குயிக் டயல் பேட் (Quick Dial Pad), கான்டாக்ட்ஸ் (Contacts) சப்போர்ட் வருகிறது. அதேபோல கியூஆர் ட்ரோ (QR Tray) சப்போர்ட் உள்ளது. மேற்கண்ட கிரெஸ்ட் ஆப் மூலம் மேப் நேவிகேஷன் செய்து கொள்ளலாம். வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங், சைக்கிளிங் உள்ளிட்ட 700+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) இந்த மாடலில் வருகின்றன.

இந்த போட் ஸ்டார்ம் கால் 3 பிளஸ் மாடலில் 300mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி மூலம் 7 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். அதேபோல ப்ளூடூத் காலிங் மோடில் (Bluetooth Calling Mode) 2 நாட்களுக்கு பேக்கப் பெறலாம். ஹெல்த் மானிட்டர்கள் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) வருகிறது.

இதுபோக வழக்கமான ஆக்டிவிட்டி டிராக்கர்கள் (Activity Trackers) மற்றும் செடண்டரி ரீமைண்டர்கள் (Sedentary Reminders) வருகின்றன. IP67 ஸ்வெட், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. ஸ்மார்ட் பீச்சர்களை பார்க்கையில், கேமரா கன்ட்ரோல் (Camera Control), கேம்ஸ் (Games), மியூசிக் கன்ட்ரோல் (Music Control) மற்றும் வெதர் அப்டேட் (Weather Update) வருகிறது.

இதுபோக லைவ் ஸ்போர்ட்ஸ் ஸ்கோர் அப்டேட் (Live Sports Score Updates) சப்போர்ட் வருகிறது. மேலும், டிஎன்டி (DND), ஃபைண்ட் மை போன் (Find My Phone) மற்றும் அலாரம் (Alarm) உள்ளிட்ட வழக்கமான பீச்சர்கள் வருகின்றன. இந்த போட் ஸ்டார்ம் கால் 3 பிளஸ் மாடலில் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ் (Emergency SOS) சப்போர்ட் வருகிறது.

ஆக்டிவ் பிளாக் (Active Black), ஆலிவ் கிரீன் (Olive Green), டார்க் ப்ளூ (Dark Blue), செர்ரி பிளாசம் (Cherry Blossom), மின்ட் கிரீன் (Mint Green), சாலமன் பீச் (Salmon Peach) மற்றும் பிளாக் மெட்டல் மெஸ் (Black Metal Mesh) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இவ்வளவு பீச்சர்களை கொண்டிருந்தும் வெறும் ரூ.1,149 விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் போட் (boAt) ஆகிய தளங்களில் விற்பனை தொடங்கிவிட்டது. கம்மியான பட்ஜெட்டில் பெரும்பாலான பீச்சர்களுடன் ஸ்மார்ட்வாட்ச் வேண்டுமானால், இந்த போட் ஸ்டார்ம் கால் 3 பிளஸ் மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம். அதேபோல பிரீமியம் லுக் கொடுக்கப்பதால், நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
boAt Storm Call 3 Plus With 300mAh Battery Launched Sale From Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X