இப்படி ஒரு ஸ்பீக்கர் தான் வாங்கணும்.. பிசுறு இல்லாமல் அலறவிடும் சவுண்ட்.. என்ன மாடல்? என்ன விலை?
போட் (boAt) நிறுவனம் அதன் ப்ளூடூத் ஸ்பீக்கர் வரிசையில் புதிதாக ஒரு சாதனத்தை இணைத்துள்ளது. இது மலிவு விலையில் தரமான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
போட் ஸ்டோன் ஸ்பின்க்ஸ் ப்ரோ (boAt Stone Spinx Pro):
போட் நிறுவனம் புதிதாக போட் ஸ்டோன் ஸ்பின்க்ஸ் ப்ரோ (boAt Stone Spinx Pro) என்ற ப்ளூடூத் வயர்லெஸ் ஸ்பீக்கர் (Bluetooth wireless speaker) சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது அதன் போட் பிராண்டின் ஸ்டோன் சீரிஸ் புளூடூத் ஸ்பீக்கர்களில் புதிய கூடுதல் சேர்ப்பாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சமீபத்தில் வேவ் ஸ்பெக்ட்ரா ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

போட் ஸ்டோன் ஸ்பின்க்ஸ் ப்ரோ (boAt Stone Spinx Pro):
இதற்கு பிறகு, போட் நிறுவனம் இப்போது இந்த புதிய சக்தி வாய்ந்த போட் ஸ்டோன் ஸ்பின்க்ஸ் ப்ரோ ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இது RGB LED லைட் உடன் வெளிவந்துள்ளது. ஹவுஸ் பார்ட்டி அல்லது ஃபன் பார்ட்டிகளில் அறவிடும் சவுண்டை வழங்க இந்த சாதனம் வெளியிடப்பட்டுள்ளது. இது மிகவும் கவர்ச்சிகரமான டிசைன் மற்றும் வடிவமைப்பை கொண்டுள்ளது.
போட் ஸ்டோன் ஸ்பின்க்ஸ் ப்ரோ 20W RMS வெளியீட்டை வழங்குகிறது. இது போட் சிக்னேச்சர் சவுண்ட் தொழில்நுட்பத்துடன் சரியாக பேலன்ஸ் செய்யப்பட்ட ஆடியோ மற்றும் பாஸை வெளியிடுகிறது. மேலும், இது ஒரு உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோனைக் கொண்டுள்ளது. அதாவது உங்கள் போனிற்கு வரும்வாய்ஸ் கால்களை ஹேண்ட்ஸ் ஃப்ரீயாக இந்த ஸ்பீக்கர் மூலம் ஏற்று பதிலளிக்கலாம்.
ஸ்டோன் ஸ்பின்க்ஸ் ப்ரோ ஸ்பீக்கரின் மற்ற அம்சங்களில் இது TWS இணைப்பு, மல்டி கனெக்ட் போர்ட்ஸ் மற்றும் IPX4 ஸ்பிளாஸ் ரெசிஸ்டன்ஸ் அம்சங்கள் போன்ற பல முக்கியமான அம்சங்களை பேக் செய்துள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் வரை நீடிக்கும் ஆயுளை கொண்டுள்ளது. boAt ஸ்டோன் ஸ்பின்க்ஸ் ப்ரோ ப்ளூடூத் v5.0 இணக்கத்துடன் இயங்குகிறது.

இதன் மூலம் மிகவும் வேகமான வயர்லெஸ் இணைப்பை உங்களுக்கு உறுதி செய்கிறது. இது குயிக் பேரிங் அம்சத்துடன் மிகவும் விரைவாக உங்கள் ஸ்மார்ட்போன், லேப்டாப், டெஸ்க்டாப் என்று எதுவாக இருந்தாலும் உடனே இணைகிறது. இதில் USB, AUX, BT 5.0, TF கார்டு போன்ற போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. இது வெறும் 940 கிராம் எடையை கொண்டுள்ளது.
இதன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றி பேசுகையில், இந்த புதிய boAt Stone Spinx Pro இரண்டு நிறங்களில் வருகிறது. இது மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் ட்ரோபிக்கள் ப்ளூ (Tropical Blue) ஆகிய நிறங்களில் இப்போது பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் இந்தியா (Amazon.in) வில் வாங்க கிடைக்கிறது.
விலை: இந்த ஸ்பீக்கரை அறிமுக சலுகையுடன் வெறும் ரூ. 2,999 விலையில் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதுவொரு குறுகிய கால சிறப்பு சலுகை விலை என்பதனால், உடனே யோசிக்காமல் இந்த புதிய போட் ஸ்டோன் ஸ்பின்க்ஸ் ப்ரோ ஸ்பீக்கரை வாங்கி மகிழுங்கள்.


Click it and Unblock the Notifications








