Home
Gadgets

boAt ப்ளூடூத் ஸ்பீக்கர் மிரட்டுது.. LED லைட் ப்ரொஜெக்ஷன் உடன் அலறவிடும் Speaker.. என்ன விலை? எப்போ வாங்கலாம்?

போட் (boAt) நிறுவனம் இந்தியாவில் புதிய போட் ஸ்டோன் லுமோஸ் (boAt Stone Lumos) என்ற ப்ளூடூத் ஸ்பீக்கர் (Bluetooth speaker) சாதனம் குறித்த தகவலை அறிவித்துள்ளது. இது வழக்கமான ஒரு ஆடியோ தயாரிப்பாக (Audio product) மட்டுமில்லாமல், இந்த முறை போட் நிறுவனம் இத்துடன் 7 மோட் எல்இடி லைட் ப்ரொஜெக்ஷன் விஷுவல் ஆதரவையும் (7 Mode LED Light Projection Visual Mode) சேர்த்து வழங்கியுள்ளது. இந்த புதிய ஸ்பீக்கர் சாதனத்தில் என்னென்ன அம்சங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

போட் நிறுவனம் இந்த புதிய போட் ஸ்டோன் லுமோஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் (boAt Stone Lumos Bluetooth Speaker) சாதனத்தை வரும் ஜூன் 25, 2024 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இதன் அறிமுகத்தை உறுதிப்படுத்திம் விதமாக, போட் நிறுவனத்தின் போட் ஸ்டோன் லுமோஸ் ஸ்பீக்கர் (boAt Stone Lumos Speaker) டிவைஸ் இப்போது அமேசான் (Amazon) மைக்ரோசைட் விளம்பரத்தில் காணப்பட்டுள்ளது.

boAt ப்ளூடூத் ஸ்பீக்கர் மிரட்டுது.. LED லைட் ப்ரொஜெக்ஷன் உடன் Speaker

போட் ஸ்டோன் லுமோஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் (boAt Stone Lumos Bluetooth Speaker):
இந்த போட் ஸ்டோன் லுமோஸ் ஸ்பீக்கர் சாதனம் 60W அவுட்புட் உடன் ஹை-குவாலிட்டி பவர்ஃபுல் ஆடியோவை வழங்குகிறது. மிகவும் சக்தி வாய்ந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் சாதனமாக இதை போட் உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக கைக்கு அடக்கமான காம்பாக்ட் சைஸில் இந்த போட் ஸ்டோன் லுமோஸ் ஸ்பீக்கரை நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஆடியோ தரம் மட்டுமின்றி இந்த ஸ்பீக்கர் உங்கள் கண்களுக்கு விஷுவல் ட்ரீட் வழங்குகிறது.

ஆம், இதில் எல்இடி லைட் ப்ரொஜெக்ஷன் (LED light projections) அம்சத்தையும் போட் நிறுவனம் இணைத்து வழங்கியுள்ளது. இந்த சாதனத்தின் ஒரு பக்க மூலையில் வழங்கப்பட்டுள்ள LED ப்ரொஜெக்டர் 7 வகையான டைனமிக் மோட்களில் வேலை செய்கிறது. இதன் மூலம் நீங்கள் பார்ட்டி செய்யும் அறையில் கலர்கலர் விஷுவல் காட்சிகளை இந்த ஸ்பீக்கர் பிரதிபலிக்கிறது. 7 நிறங்களில் இது ப்ராஜெக்ட் செய்ய படும் என்று போட் விளம்பர தகவல் குறிப்பிடுகிறது.

இந்த புதிய போட் ஸ்டோன் லுமோஸ் (boAt Stone Lumos) ஸ்பீக்கர் பல கஸ்டமைஸ் (Customize) விருப்பங்களுடன் வருகிறது. இதில் LED லைட் செட்டிங்ஸ் (LED light settings) உட்பட, இகியூ மோட்ஸ் (EQ modes) போன்ற பல விருப்பங்களை அட்ஜஸ்ட் செய்ய இந்த சாதனம் அனுமதிக்கிறது. இது மொத்தமாக 9 மணி நேர பிளேபேக் நேரத்தை சிங்கிள் சார்ஜில் வழங்கும் திறன் கொண்ட பேட்டரியை (battery) கொண்டுள்ளது.

போட் ஸ்டோன் லுமோஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் விலை (boAt Stone Lumos Bluetooth Speaker Price):
இதில் AUX மற்றும் USB போர்ட் உள்ளது. இதில் பில்ட் இன் மைக்ரோபோன் அம்சமும் இடம்பெறுகிறது. இதுவொரு அவுட்டோர் சாதனம் என்பதனால், இது IPX4 வாட்டர் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பு சான்றை பெறுகிறது. இந்த போட் ஸ்டோன் லுமோஸ் (boAt Stone Lumos) டிவைஸ் ரூ. 6,999 விலையில் வரும் ஜூன் 25ம் தேதி அறிமுகம் செய்யப்படும். இது அமேசான் வழியாகவும் வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
boAt Stone Lumos Bluetooth Speaker With 7 Mode LED Light Projection Launching At Rs 6999 In India On June 25 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X